இலங்கை – பாகிஸ்தான் தொடர்; டிக்கெட் கொள்வனவு செய்வது எப்படி?

Pakistan tour of Sri Lanka 2023

270

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான டிக்கெட் விற்பனை தொடர்பிலான அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. 

அதன்படி ரசிர்கள் டிக்கெட்டுகளை இலங்கை கிரிக்கெட் சபையின் www.srilankacricket.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது 

பங்களாதேஷ் ஒருநாள் அணிக்கு புதிய தலைவர்

அதேநேரம் ரசிகர்கள் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானம் மற்றும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் அமைக்கப்படவுள்ள டிக்கெட் விற்பனை மையங்களில் எதிர்வரும் 13ம் திகதி முதல் டிக்கெட்டுகளை நேரடியாக சென்று கொள்வனவு செய்ய முடியும். 

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இம்மாதம் 16ம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி எஸ்.எஸ்.சி மைதானத்தில் 24ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. 

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் டிக்கெட்டுகள் 300 ரூபா முதல் 500, 1000 மற்றும் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதுடன், எஸ்.எஸ்.சி மைதானத்தின் டிக்கெட்டுகள் 500 ரூபா முதல் 1500, 4000 மற்றும் 5000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<