2018 IAAF சிறந்த மெய்வல்லுனர் வீரர் விருது – ஆடவர் இறுதிப் பட்டியல்

105

2018 ஆம் ஆண்டில் திறமையை வெளிப்படுத்திய மெய்வல்லுனர் வீரர்களை கௌரவிக்கும் வகையில் மொனாக்கோவில் நடைபெறவுள்ள 2018 IAAF தடகள விருதுகளுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், உலகின் சிறந்த தடகள வீரர் விருதுக்கான ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளின் இறுதிப் பட்டியலை உலக மெய்வல்லுனர் சம்மேளனம் (IAAF) வெளியிட்டுள்ளது.

IAAFஇன் புதிய விதிமுறைகளில் இருந்து தப்பிய இலங்கை வீரர்கள்

ஒலிம்பிக் மற்றும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களை…..

மூன்று வகையான வாக்களிப்பு நடைமுறையில் இறுதிப் பட்டியல் தேர்வு செய்யப்பட்டது. IAAF பேரவை மற்றும் IAAF குடும்பம் மின்னஞ்சல் ஊடாக தமது வாக்கை அளித்ததோடு IAAF சமூக ஊடக தளங்களில் இணையதளம் வழியேயும் ரசிகர்கள் வாக்களித்தனர். முடிவின் 50 வீதத்திற்கு IAAF பேரவை வாக்குகள் சேர்க்கப்பட்டதோடு IAAF குடும்ப வாக்குகள் மற்றும் பொதுமக்கள் வாக்குள் முடிவுகளில் தலா 25 வீதத்திற்கு எண்ணப்பட்டன. வாக்களிப்பு நவம்பர் 13 ஆம் திகதி முடிவுற்றது.

கிறிஸ்டியன் கோல்மன் – 100 மீற்றர்

2018 ஆம் ஆண்டில் அதிவேக ஆரம்பத்தை பெற்ற கிறிஸ்டியன் கோல்மன் ஆண்டில் தனது முதல் போட்டியிலேயே இதுவரையான வேகமான 60 மீற்றர் ஓட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது 6.37 வினாடி ஓட்டம் ஏற்கப்படாதபோதும், ஒரு மாதத்தின் பின் அமெரிக்க உள்ளக சம்பியன்ஷிப் போட்டியில் அதனை விடவும் வேகமாக 6.34 வினாடிகளில் போட்டியை முடித்து வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் உலக உள்ளக சாதனையை உத்தியோகபூர்வமாக முறியடித்தார். பெர்மிங்ஹாமில் உலக உள்ளக பட்டத்தை வென்று உள்ளக போட்டிகளில் தனது திறமையையும் அவர் நிரூபித்தார்.

காயங்கள் கோல்மனின் உள்ளக போட்டிப் பருவத்திற்கு இடையூறை ஏற்படுத்தியபோதும், மூன்று IAAF டயமொண்ட் லீக் போட்டிகளில் அவரால் வெற்றிகளை பெற முடிந்தது. இதில் பிரசல்ஸ் இறுதிப் போட்டியில் அவர் 100 மீற்றரை 9.79 வினாடிகளில் முடித்தார்.


ஆர்மண்ட் டுப்லன்டிஸ்கோலூன்றிப் பாய்தல்

ஆர்மண்ட் டுப்லன்டிஸ் தடகள உலகில் அதிகம் எதிர்பார்ப்புக் கொண்ட வளர்ந்து வரும் வீரர்களில் ஒருவராக தன்னை நிரூபித்துள்ளார். இந்நிலையில் சுவீடன் கோலூன்றிப் பாயும் விரரான அவர் இந்த ஆண்டு உலகின் சிரேஷ்ட வீரர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். ஆண்டின் முதல் பாதியில் அவர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் 20 வயதுக்கு உட்பட்ட தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார். தொடர்ந்து ஸ்டொக்ஹோமில் தனது சொந்த ரசிகர்கள் முன்னிலையில் IAAF டயமொண்ட் லீக் போட்டியில் வெற்றி பெற்றார்.

18 வயதான டுப்லன்டிஸ் டம்பாரேவில் 20 வயதுக்கு உட்பட்ட பட்டத்தை வென்றதோடு, பெர்லினில் நடைபெற்ற ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டியில் தனது உச்ச திறமையை வெளிக்காட்டி 6.05 மீற்றர் உயரம் பாய்ந்ததுடன், 20 வயதுக்கு உட்பட்ட தனது சொந்த உலக சாதனையையும் முறியடித்தார்.   


எலியுட் கிப்சொக்மரதன்

பெர்லின் மரதன் போட்டியை 2:01:39 காலத்தில் முடித்து 78 வினாடிகளால் உலக சாதனை படைத்த எலியுட் கிப்சொக் சிறந்த மரதன் ஓட்ட வீரராக தனது அந்தஸ்த்தை உறுதி செய்துள்ளார். ஆடவர் மரதன் ஓட்டப் போட்டியில் 1967 க்கு பின்னர் மிகப் பெரிய உலக சாதனையாகவும் இது இருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் லண்டன் மரதனில் பெற்ற வெற்றிக்கு பின்னர் கென்ய நாட்டைச் சேர்ந்த கிப்சொக் மிகப் பெரிய நகரில் நடைபெறும் மரதன் போட்டியில் பெறும் இரண்டாவது வெற்றியாகவும் இது இருந்தது. இதன்போது 2:04:17 காலத்தைப் பதிவு செய்து 32 வினாடிகளால் வெற்றி பெற்ற கிப்சொக் லண்டன் மரதனில் இரண்டாவது சிறந்த காலத்தையும் பதிவு செய்தார்.


கெவின் மயெர்டெகத்லன்

2018 பெர்மிங்ஹாம் IAAF உலக உள்ளக சம்பியன்ஷிப் போட்டியில் 6358 என்ற உலக சாதனை புள்ளிகளுடன் ஹெப்டத்லோன் போட்டியில் பெற்ற வெற்றியுடனேயே கெவின் மயெர் இந்த ஆண்டை ஆரம்பித்தார்.

அன்று கார் மெக்கானிக்; இன்று சாதனை வீரராக மாறிய மலையகத்தின் சண்முகேஸ்வரன்

மன நிம்மதியையும், சந்தோஷத்தையும் பெற்றுக்கொள்வதற்காக ஓடிக்…..

சகலதுறையில் திறமையை வெளிப்படுத்தும் பிரான்ஸ் நாட்டவரான மயெர், ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டியில் நீளம் பாய்தலில் மூன்று தவறுகளை இழைத்து டெகத்லோன் போட்டியில் இருந்து வெளியேறினார். என்றாலும் ஐந்து வாரங்களுக்கு பின் மீளெழிச்சி பெற்ற அவர் டாலெஜில் நடைபெற்ற டெகாஸ்டர் போட்டியில் 9126 புள்ளிகளுடன் உலக சாதனை படத்தார்.


அப்தர்ரஹ்மான் சம்பா – 400 மீற்றர் தடைதாண்டல்

கட்டாரைச் சேர்ந்த அப்தர்ரஹ்மான் சம்பா 400 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் சிறந்த திறமையை வெளிப்படுத்தியவராக உள்ளார். அவர் பங்கேற்ற ஒன்பது இறுதிப் போட்டிகளிலும் போட்டித் தூரத்தை 48 வீனாடிகளுக்குள் முடித்து தனது சிறந்த காலத்தை பதிவு செய்து கொண்டார். வரலாற்றில் 47 வினாடிகளுக்கு குறைவான நேரத்தில் போட்டியை முடித்த இரண்டாவது வீரராக, பாரிஸில் 46.98 வினாடிகளில் ஓடி முடித்து ஆசிய சாதனை படைத்தார்.

23 வயதான அப்தர்ரஹ்மான் சம்பா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மற்றும் 4×400 மீற்றர் தடைதாண்டல் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றதோடு, ஒஸ்ட்ராவாவில் நடைபெற்ற IAAF கொண்டினன்டல் கிண்ணத்திலும் வெற்றி பெற்றார்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<