உதிர்த்த ஞாயிற்றுக் கிழமையின் கொடூரங்களை நினைவு கூறும் தசுன் சானக்க

472
AFP

உதிர்த்த ஞாயிறு காலை (Easter Sunday) இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில் இதுவரையில் குறைந்தது 300 பேர் வரையில் பலியாகியுள்ளதோடு, 500 பேர் வரையில் காயமடைந்திருக்கின்றனர். இரத்தம் உறைய வைக்கும் இந்த கொடூர சம்பவத்தில் இருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரரான தசுன் சானக்க உயிர் தப்பியிருக்கின்றார்.

ஐ.பி.எல் தொடரில் மாலிங்க உள்ளிட்ட வீரர்களுக்கு விசேட விடுமுறை

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடி …..

சகலதுறை வீரராக இருக்கும் 27 வயதேயான தசுன் சானக்க, தனது சொந்த ஊராகிய நீர்கொழும்பில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களில் ஒன்றான புனித செபஸ்டியன் தேவாலயத்திற்கு தனது தாய் மற்றும் பாட்டி ஆகியோருடன் செல்வதற்கு ஏற்கனவே தீர்மானம் செய்திருந்தார். எனினும், சம்பவம் நடந்த தினத்திற்கு முந்தைய நாளில் அனுராதபுரம் நோக்கி கிட்டத்தட்ட 170 கிலோமீட்டர்கள் வரையில் பயணம் செய்த காரணத்தினால் களைப்பு கருதி தசுன் சானக்க தேவாலயத்திற்கு செல்லவில்லை.

“ பொதுவான நிலை ஒன்றில் நான் தேவாலயத்திற்கு சென்றிருக்க வேண்டும் ஆனால், அதற்கு முதல் நாளில் அனுராதபுரத்திற்கு சென்ற காரணத்தினால் களைப்புற்றிருந்தேன். “ என தசுன் சானக்க உருக்கமான குரலில் பேசி உயிர் தப்பிய நிகழ்வை செய்தி இணையதளம் ஒன்றிடம் குறிப்பிட்டிருந்தார்.

“ அந்த நாள் காலையில், நான் எனது வீட்டில் இருக்கும் போது சத்தம் ஒன்றினை செவியுற்றேன், அப்போது மக்கள் தேவாலயத்தில் குண்டு ஒன்று வெடித்துள்ளதாக கூறினர். உடனே அங்கே நான் விரைந்தேன், என்னால் (இந்த) சம்பவத்தினை மறக்க முடியாது. “

“ (அங்கே சென்று பார்த்த பொழுது) தேவாலயம் முழுமையாக சேதமடைந்திருந்தது, அதிர்ச்சியாகவும் இருந்தது, மக்கள் உயிரற்ற உடல்களை வெளியில் எடுத்த வண்ணம் இருந்தனர். “

தொடர்ந்து தசுன் சானக்க, தனது தாயினை தேட ஆரம்பித்தார். பின்னர் தனது தாயினைக் தேடிக் கண்டுபிடித்த அவர், தாயாரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தார். இந்நிலையில் தசுன் சானக்கவின் நண்பர்கள் அங்கிருந்த ஏனையோருக்கு உதவினர்.

“ எனது முதல் வேலை, எனது தாயாரை கண்டுபிடிப்பதாகவே இருந்தது. நான் அவரை கண்டுபிடித்தவுடன், (அவர் இருந்த) இடத்தில் இருந்து அகற்றினேன். பின்னர் எனது பாட்டியினை தேட ஆரம்பித்தேன். அப்போது எனது பாட்டியார் உள்ளே இருந்தார் எனக் கூறப்பட்டது. இத்தருணத்தில் எனது இதயம் இவ்வாறு படபடத்தது. நீங்கள் (இந்த) சம்பவத்தினை பார்த்திருந்தால், (தேவாலயத்திற்குள்) உள்ளிருந்த யாருமே உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனத் தோன்றும், ஏனெனில் (வெடிப்பு) சிதறல்களினால் (தேவாலயத்திற்கு) பக்கத்தில் இருந்தவர்கள் கூட பாதிக்கப்பட்டிருந்தனர். “

“ எனது தாய் ஜன்னல் ஒன்றின் அருகில் இருந்தார், அதனால் (ஜன்னலின் பகுதி) ஒன்றில் இருந்து வெடித்த துகள்கள் மூலம் பாதுகாக்கப்பட்டார். அதனால் அவருக்கு சிறிய காயங்கள் மட்டுமே. எனது தாய்க்கு அருகில் இருந்த பலர் இறந்து போயிருந்தனர். “ என தசுன் சானக்க குறிப்பிட்டார்.

தொடர்ந்து சிறிது நேரத்தின் பின்னர் தசுன் சானக்க தனது பாட்டியினையும் அதிர்ஷ்டவசமாக உயிருடன் இருந்த நிலையில் கண்டுபிடித்தார்.

“ நான் எனது பாட்டியினை தேடும் போது, நான் அவரை உயிருடன் கண்டுபிடிப்பேன் என எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த வெடிப்புச் சம்பவம் அவருக்கு பக்கத்தில் இருந்த பலரை தாக்கிக் கொன்றிருந்தது, அவர் அருகில் இருந்த உடல்களின் காரணமாக மிகவும் கடுமையான ஆபத்தில் இருந்து தப்பியிருந்தார். முடிவில், தலையில் தாக்கிய குண்டுச் சன்னங்களின் மூலம் அவர் பாதிக்கப்பட்டிருந்தார், எனினும் எங்களுக்கு அவரை வைத்தியசாலைக்கு சத்திர சிகிச்சைக்காக கொண்டு செல்ல முடியுமாக இருந்தது. “

மேலும் பேசிய தசுன் சானக்க, இந்த கோர சம்பவங்களை அடுத்து வீதியில் செல்வதற்கும் பயமாக இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

“  நான் வீதியில் செல்வதற்கோ அல்லது வைத்தியசாலை செல்வதற்கோ பயப்பட்டேன். “

ஆனால், இப்படியான சம்பவங்களினால் இலங்கை மக்களின் மீது தான் வைத்த நம்பிக்கையை இழக்கவில்லை என தசுன் சானக்க மேலும் குறிப்பிட்டிருந்தார்.

et“ பல்லிண சமூகங்கள் என்ற ரீதியில் நோக்கும் போது நீர்கொழும்பில் இதுவரையில் எந்த பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்கவில்லை. வேறு விதமாக சொல்லப்போனால் இது (நீர்கொழும்பு) ஒரு அமைதி சொர்க்கம். இதேநேரம் இங்கிருப்போரும் எந்த சமூகத்தாரோடும் பிரச்சினைகளை ஏற்படுத்தவில்லை. இங்கே உள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள் என்பதோடு நல்ல உள்ளமும் கொண்டவர்கள், இவர்கள் யாரினது விடயங்களுக்கும் மூக்கை நுழைப்பவர்களும் அல்ல. இங்கிருப்பவர்களின் அப்பாவித்தன்மையினையும், அவர்கள் எந்தளவிற்கு அமைதியானவர்கள் என்பதையும் வார்த்தைகளால் வருணிக்க முடியாது. “

ஐ.பி.எல் அரங்கில் இரட்டை சாதனை படைத்த டோனி

இதேநேரம் இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான ஹஷித்த பொயகொடவும், அவரது குடும்பமும் ஷங்கிரி லா ஹோட்டலில் ஏற்பட்ட இந்த தொடர் குண்டு வெடிப்புக்களின் மற்றுமொரு பகுதியாக இடம்பெற்ற கோரச்சம்பவத்தில் இருந்து சிறிய உபாதைகளுடன் தப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தோருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை மிகவும் உருக்கமான மனதுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

>>மேலும் பல செய்திகளைப் படிக்க <<