LPL மூலம் எனது குறிக்கோளை அடைந்தேன் – தனுஷ்க குணதிலக்க

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

178

லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடர் ஆரம்பமாவதற்கு முன் குறிக்கோள் ஒன்றுடன் களமிறங்கியதால் தன்னால் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட முடிந்ததாக இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் அதிக ஓட்டங்களைக் குவித்து சிறந்த துடுப்பாட்ட வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்க தெரிவித்தார்.   

இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடகப் பிரிவினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட காணொளி வாயிலான நேர்காணலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முதல் வெற்றியை பதிவுசெய்தது கோல் க்ளேடியேட்டர்ஸ்!

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் காரணமாக கடந்த காலங்களில் எமக்கு உரிய முறையில் பயிற்சிகளை முன்னெடுக்க முடியாமல் போனது. ஆனால் ஒருசில பயிற்சி முகாம்கள் இடம்பெற்றன. கண்டி, கொழும்பு ஆகிய பகுதிகளில் நாங்கள் வதிவிட பயிற்சிகளை முன்னெடுத்தோம். மறுபுறத்தில் தனிப்பட்ட முறையிலும் பயிற்சிகளை எடுத்து வந்தேன்.  

இந்தப் போட்டித் தொடரின் ஊடாக கிடைக்க வேண்டிய பலனுக்காக ஆரம்பத்தில் இருந்தே தயாராகினேன். அதனால் எனது முழுமையான திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளை மனதில் ஏற்படுத்தி வைத்து விட்டேன்” என தெரிவித்தார்.  

இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் சகல துடுப்பாட்ட வீரர்களை மிஞ்சிய தனுஷ்க குணதிலக்க, இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 368 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இன்னிங்ஸொன்றில் 64.40 என்ற சராசரி ஒன்றை வைத்துக் கொண்டுள்ள அவர், 145.04 என்ற ஓட்ட வேகத்தையும் கொண்டுள்ளார்

”இந்தப் போட்டித் தொடரின் மூலம் கிடைக்கின்ற அனுபவம் மிகவும் பெறுமதி வாய்ந்தது. சர்வதேசப் போட்டித் தொடர்கள் மற்றும் உள்ளூர் போட்டித் தொடர்களில் உள்ள வேறுபாடுகள் இவ்வாறான போட்டித் தொடர்களை நடத்துவதனால் இல்லாமல் போகின்றது” எனவும் அவர் தெரிவித்தார்.  

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் விளையாடுகின்ற போட்டியில் நான் துடுப்பெடுத்தாடும் போது என்னை ஆட்டமிழக்கச் செய்ய எவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பீர்கள் என நான் மொஹமட் ஆமிரிடம் கேட்டேன். அப்போது அவர் தமது அணியின் திட்டங்களை என்னிடம் தெரிவித்தார்.  

Video – LPL மகுடம் சூடப்போவது யார்? Kandy,Galle அணிகளின் நிலை என்ன?

எனவே, எதிர்வரும் காலங்களில் மொஹமட் ஆமிர் எனக்கு எவ்வாறான பந்துகளை வீசுவார் என்பதை இப்போது நன்கு அறிந்து வைத்துள்ளேன்.  

இந்திய வீரர்களுக்கு .பி.எல் தொடர் மூலம் இவ்வாறான விடயங்களை கற்றுக்கொள்ள முடியும். தற்போது எல்.பி.எல் தொடர் மூலம் எமக்கு இவ்வாறான வாய்ப்புகள் கிடைத்துள்ளன

குறிப்பாக, சர்வதேசப் போட்டிகளில் உள்ள வித்தியாசங்கள், அழுத்தங்களை இந்தப் போட்டித் தொடரின் மூலம் எமது வீரர்கள் பெற்றுக் கொள்வார்கள்” என அவர் தெரிவித்தார்

இதேநேரம், கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி தாம் விளையாடிய முதல் ஐந்து போட்டிகளில் தோல்வியைத் தழுவியதற்கான காரணத்தை தனுஷ்க குணதிலக்க தெரிவிக்கையில்,

“எமது அணியின் பந்துவீச்சும், களத்தடுப்பும் தற்போது நல்ல நிலையில் உள்ளது. எனினும், எஞ்சியுள்ள போட்டிகளிலும் வெற்றியீட்டி அரையிறுதி சுற்றுக்குச் செல்ல முயற்சிப்போம். ஒவ்வொரு வீரர்களினதும் திறமை மைதானத்துக்கு மைதானம் வேறுபடும். 

LPL தொடரில் பங்கேற்கும் நான்கு சகோதர ஜோடிகள்!

அதேபோல, ஹம்பாந்தோட்டை மைதானத்தில் மிகவும் வேகமாக பந்துவரும். ஏதாவது இடைவெளியில் பந்தை அடித்தால் பௌண்டரிக்குச் செல்வதால் நிறைய சிக்ஸர்களை அடிக்க முயற்சி செய்யவில்லை. அதனால் வீணாக விக்கெட்டை கொடுக்காமல் பௌண்டரிகளை மட்டும் அடித்தேன். முதல் போட்டியிலேயே நான் இதை நன்கு அவதானித்தேன்” என அவர் குறிப்பிட்டார்.  

”உண்மையில் ஆப்கானஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலும் T20 லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இலங்கையில் இவ்வாறானதொரு T20 லீக் தொடரொன்று நடைபெறாமல் இருந்தது கவலையை ஏற்படுத்தியது. எனவே லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் மூலம் இளம் வீரர்களுக்கு அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்

ஆகவே, லங்கா ப்ரீமியர் லீக் தொடரை ஏற்பாடு செய்த இலங்கை கிரிக்கெட் சபைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் நிறைய விடயங்களை நாங்கள் கற்றுக்கொண்டேன்” என அவர் தெரிவித்தார்

PSL ஐ விட LPL பௌண்டரி எல்லை பெரியது – சொஹைப் மலிக்

இதனிடையே, லசித் மாலிங்கவின் பந்துவீச்சுப் பாணியைக் கொண்டுள்ள சக வீரரான நுவன் துஷா தொடர்பில் தனுஷ்க குணதிலக்க கருத்து தெரிவிக்கையில்,

”நுவன் துஷாரவுக்கு தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் இதற்குமுன் இவ்வாறான போட்டிகளில் விளையாடியதில்லை. ஆனால் லங்கா ப்ரீமியர் லீக்கின் முதல் போட்டியில் அவர் அழுத்தங்களுடன் விளையாடவில்லை.  

ஆனால் தனது சிறந்த பங்களிப்பினை வழங்கியிருந்தார். எனவே நுவன் துஷா தொடர்ந்து சரியான முறையில் பந்துவீசினால் அவருக்கு நீண்ட தூரம் செல்ல முடியும்” என அவர் குறிப்பிட்டார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<