1981ஆம் ஆண்டு – மஹேந்திர சிங் டோனி பிறப்பு
இந்திய அணியின் தலைவர் மற்றும் விக்கட் காப்பாளரான மஹேந்திர சிங் டோனியின் பிறந்த தினமாகும். வலதுகைத் துடுப்பாட்ட வீரரான இவர் இந்திய அணிக்காக 2004ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதியில் 90 டெஸ்ட், 278 ஒருநாள் சர்வேதேசப் போட்டிகள் மற்றும் 71 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டி20 உலகக் கிண்ணம், ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணம், ஐ.சி.சி உலகக் கிண்ணம் மற்றும் ஐ. பி.எல் போன்ற தொடரிகளில் இவர் தலைமை வகித்து கிண்ணத்தை வென்று கொடுத்த பெருமை இவரைச் சாரும்.
வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூலை மாதம் 06
1984ஆம் ஆண்டு – முஹமத் அஷ்ரபுல் பிறப்பு
பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் முஹமத் அஷ்ரபுல்லின் பிறந்த தினமாகும். வலதுகை மத்தியதர வரிசை துடுப்பாட்ட வீரரான இவர் பங்களாதேஷ் அணிக்காக 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 61 டெஸ்ட், 177 ஒருநாள் சர்வேதேசப் போட்டிகள் மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். பங்களாதேஷ் பிரிமியர் லீக் கிண்ண தொடரின் போது மெட்ச் பிக்சிங் தொடர்பான சர்ச்சையில் ஈடுப்பட்டதால் அவருக்கு 5 வருடங்கள் கிரிக்கட் விளையாடுவதற்கு பங்களாதேஷ் கிரிக்கட் சபை தடைவிதித்துள்ளது.
ஜூலை மாதம் 07ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1873 வின்சென்ட் டேன்க்ரெடி (தென் ஆபிரிக்கா)
- 1938 மார்ஜோரீ மார்வெல் (அவுஸ்திரேலியா)
- 1977 சாசம் பாப்வா (மேற்கிந்திய தீவுகள்)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்