கொஹ்ளியைப் போல் உடலைக் கட்டுக் கோப்பாக வைக்க விரும்புகிறேன்: மன்தீப்

541
I want to be as fit as Virat Kohli - Mandeep Singh

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடும் சகலதுறை வீரர் மன்தீப் சிங், விராத் கொஹ்ளியைப் போன்று ஆக விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கட் அணி விரைவில் சிம்பாப்வே சென்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் ஐந்து புதுமுக வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இதில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய 24 வயது நிரம்பிய சகலதுறை வீரர்  மந்தீப் சிங் இடம்பிடித்துள்ளார். இவர் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரின் போது  அணியில் இடம்பிடித்திருந்தார். இதில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர்களில் இவரும் ஒருவர். அதன்பின் 2010ஆம் ஆண்டு ஹிமாச்சல பிரதேச அணிக்கெதிரான முதல் தரப் போட்டியில் அறிமுகமானார்.

தற்போது விராத் கொஹ்லி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடி வருகிறார். இந்த அணியில் விளையாடும்போது விராத் கொஹ்லியின் ஆட்டத்தைப் பார்த்து வியந்துபோன இவர், விராத் கொஹ்லியைப் பின்பற்ற ஆசைப்படுகிறார்.

இதுகுறித்து மன்தீப் சிங் கூறுகையில் ‘‘முன்னால் வந்து (front foot) எப்படி சிறப்பாக துடுப்பாட முடியும் என்று என்னிடம் கூறினார். அவருடன் இருக்கும்போது சிறப்பாகக் களத்தடுப்பு  செய்வது மற்றும் உடல்நிலையை எப்படிக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். அவர் துடுப்பாட்டத்தில்  எப்படி முன்னேற்றம் அடைந்தார் என்பது உண்மையிலேயே எனக்கு உத்வேகத்தைக் கொடுத்தது.

மேலும், விராத் கொஹ்லிக்கு அளவிற்கு என்னுடைய உடல்நிலையை தயார்படுத்த விரும்பினேன். ஏனென்றால், டி20 போட்டியில் விளையாடும்போது துடுப்பாட்டம் மற்றும் பிட்னெஸ் லெவனில் முன்னிலைக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன். பெங்களூர் அணியின் வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் சங்கர் அவர்கள், விராத் கொஹ்லிக்கு அடுத்து நீதான்சிறந்த வீரர் என்று கூறினார்”  என்று மன்தீப் கூறினார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்