மைதானத்தில் அவிஷ்க அசத்த, அவரது தந்தைக்கு என்ன நடந்தது? 

1138

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியைப் பார்வையிடுவதற்காக மைதானத்துக்கு வருகை தந்திருந்த தனது தந்தைக்கு என்ன நடந்தது என்பது குறித்து தான் ஆட்டமிழந்து வரும்வரை அறிந்திருக்கவில்லை என இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ தெரிவித்தார். 

இலங்கை அணியின் வெற்றிக்கான காரணத்தை கூறிய அவிஷ்க

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை……

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (28) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியைப் பார்வையிடுவதற்கு வருகை தந்திருந்த இளம் வீரர் அவிஷ்க பெர்னாண்டோவின் தந்தை மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்

இதனையடுத்து அவர் உடனடியாக அவசர அம்ப்யூலன்ஸ் மூலமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமாவதற்கு முன்னர் விசேட விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையிலிருந்த போதே அவிஷ்கவின் தந்தை கொலின் பெர்னாண்டோவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயங்கி விழுந்துள்ளார்

இந்த நிலையில், குறித்த போட்டியைக் பார்வையிட வருகை தந்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான திலங்க சுமதிபாலவின் தலையீட்டினால் அவிஷ்கவின் தந்தை உடனடியாக வைத்தியாசலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

இதுஇவ்வாறிருக்க, சர்க்கரை நோயாளியான அவிஷ்கவின் தந்தையின் உடல்நிலை குறித்து பயப்பட தேவையில்லை எனவும், அவருக்கு தொடர்ந்து மேலதிக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இதுஇவ்வாறிருக்க, குறித்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற அவிஷ்க பெர்னாண்டோ போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தந்தையின் உடல்நிலை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்

”நான் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது எனது அப்பாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார் என்பதை அறிந்திருக்கவில்லை. ஆட்டமிழந்து உடைமாற்றும் அறைக்கு வந்தபோது தான் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து கொண்டேன்

தற்போது அவர் உடல்நலத்துடன் இருப்பதாக எனது தாயாரை தொடர்பு கொண்டு கேட்ட போது தெரிவித்திருந்தார்” என அவர் குறிப்பிட்டார்

இதேநேரம், தனது தந்தை நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்திருக்காத அவிஷ் பெர்னாண்டோ, இந்தப் போட்டியில் இலங்கை அணிக்காக சிறந்ததொரு ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.

அத்துடன், ஒருநாள் அரங்கில் தனது 2ஆவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த அவிஷ்க பெர்னாண்டோ, 75 பந்துகளில் 82 ஓட்டங்களைப் பெற்று துரதிஷ்டவசமாக சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<