ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்து வரலாறு படைத்த சமரி அதபத்து

ICC Women's Rankings

1673
History made as Sri Lanka star claims No.1 batter ranking

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அதபத்து ஐசிசியின் மகளிருக்கான ஒருநாள் துடுப்பாட்ட வீரங்கனைகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து வரலாற்று சாதனையொன்றை பதிவுசெய்தார். 

அவுஸ்திரேலிய மகளிர் அணியின் பெத் மூனியை பின்தள்ளி சமரி அதபத்து துடுப்பாட்ட வீராங்கனைகள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். 

>> சமரியின் அபார சதத்தால் இலங்கை மகளிருக்கு சரித்திர வெற்றி

நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சமரி அதபத்து 3 போட்டிகளில் 2 சதங்களை விளாசியிருந்தார். முதல் போட்டியில் 108 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றிருந்ததுடன், இரண்டாவது போட்டியில் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெறும் 80 பந்துகளில் 140 ஓட்டங்களை விளாசி இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றதுடன், வரலாற்றில் முதன்முறையாக நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை மகளிர் அணி ஒருாநாள் தொடரொன்றை வெற்றிக்கொண்டது. 

குறித்த இந்த பிரகாசிப்புகளின் அடிப்படையில் இலங்கை மகளிர் கிரிக்கெட்டில் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுக்கொண்டதுடன், சனத் ஜயசூரியவை தொடர்ந்து ஐசிசியின் துடுப்பாட்ட வரிசையில் முதலிடம் பிடித்த இரண்டாவது இலங்கையர் என்ற சாதனையையும் பதிவுசெய்துள்ளார். 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<