ஐசிசி தரவரிசையில் விராட் கோஹ்லியை முந்திய அயர்லாந்து வீரர்

ICC ODI Rankings

67

ஐசிசி வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் அயர்லாந்து அணி வீரர் ஹெரி டெக்டர், இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லியை முந்தியுள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசையின்படி ஹெரி டெக்டர் 7ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், 7ஆவது இடத்திலிருந்த விராட் கோஹ்லி 8ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான இலங்கை பூர்வாங்க குழாம் அறிவிப்பு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு சதம் அடங்கலாக 206 ஓட்டங்களை (21*, 140, 45) பெற்றுக்கொண்ட இவர், 722 மதீப்பட்டு புள்ளிகளுடன் 7ஆவது இடத்தை பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் அயர்லாந்து வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிசிறந்த முன்னேற்றமாக டெக்டரின் இந்த இடம் பதிவாகியுள்ளதுடன் 722 மதீப்பீட்டு புள்ளிகளும் அயர்லாந்து வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளிகளாக மாறியுள்ளது. இதற்கு முன்னர் அயர்லாந்து அணியின் போல் ஸ்டேர்லிங் 2021ஆம் ஆண்டு 697 புள்ளிகளை பெற்றிருந்தார்.

ஹெரி டெக்டர் சர்வதேச கிரிக்கெட்டின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் குயிண்டன் டி கொக் ஆகியோரையும் இதன்போது முந்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாக மாறியுள்ளது.

ஐசிசியின் புதிய தரவரிசையின் படி துடுப்பாட்ட வீரர்கள் வரிசையின் முதல் இடத்தை பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேஷல்வூட் மற்றும் சகலதுறை வீரர்கள் வரிசையில் பங்களாதேஷின் சகீப் அல் ஹசன் ஆகியோர் தக்கவைத்துள்ளனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<