மழையினால் பாதிக்கப்பட்ட SLC மேஜர் கழக தொடரின் முதல் நாள் போட்டிகள்

SLC Major Clubs 3-Day Tournament 2023

161

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஒழுங்கு செய்திருக்கும் உள்ளூர் கழக அணிகள் இடையிலான மூன்று நாட்கள் கொண்ட மேஜர் கழக கிரிக்கெட் தொடரில் இன்று (22) ஐந்து போட்டிகள் ஆரம்பமாகியிருந்தது.  

உலகக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

பல்வேறு மைதானங்களில் ஆரம்பமாகியிருந்த இந்த தொடரின் போட்டிகளில் மழையின் தாக்கம் காணப்பட்டிருந்ததோடு, சில போட்டிகளில் மிகக் குறைவான ஓவர்களே வீசப்பட்டிருந்தன 

எனினும் இன்று நடைபெற்ற போட்டிகளில் மழைக்கு மத்தியிலும் வீரர்கள் திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர். இந்த வீரர்களில் கண்டி சுங்க கழக அணி வீரரான சஹான் கோசல (57), சிலாபம் மேரியன்ஸ் வீரர்களான கசுன் விதுர (82*), விஷ்வ சத்துரங்க (53), தரிந்து அமரசிங்க (53) மற்றும் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழக அணி வீரர் தமித் பெரேரா (57) ஆகியோர் அரைச்சதங்களை விளாசி சிறப்பாக செயற்பட்டிருந்தனர்

அதேநேரம் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்த வீரர்களில் நீர்கொழும்பு கிரிக்கெட் கழக சுழல்வீரரான நிஷான் பீரிஸ், சனுர பெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். 

ஸ்கோர் சுருக்கம் 

கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் – 117 (34) சஹான் கோசல 51, நிஷான் பீரிஸ் 3/24, சனுர பெர்னாண்டோ  3/28 

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 85/5 (34) புத்திக்க சஞ்சீவ 3/27, கயான் சிறிசோம 2/24 

முதல் நாள் ஆட்ட நிறைவு 


சிலாபம் மேரியன்ஸ் – 210/3 (47.1) கசுன் விதுர 82*, விஷ்வ சத்துரங்க  53, தரிந்து அமரசிங்க 53 

முதல் நாள் ஆட்ட நிறைவு 

BRC – 174/3 (56) துலாஷ் உதயங்க 48*, சஹான் அதீஷ 2/46 

முதல் நாள் ஆட்ட நிறைவு 


விமானப்படை விளையாட்டுக் கழகம் – 92/4 (35.2) உதயவன்ஷ பராக்கிரம 34, தருஷ பெர்னாண்டோ 2/12 

முதல் நாள் ஆட்ட நிறைவு 

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் -136/4 (35.1) தமித் பெரேரா 57, வனுஜ சஹான் 2/38 

முதல் நாள் ஆட்ட நிறைவு 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<