செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக களமிறங்கவுள்ள பானுக்க ராஜபக்ஷ

36
Bhanuka Rajapakse amongst the retentions for St Lucia Kings

2024ஆம் ஆண்டுக்கான கரீபியன் பிரீமியர் லீக் (CPL) T20 தொடருக்காக செயின்ட் லூசியா கிங்ஸ் அணி தக்க வைத்திருக்கும் வீரர்களின் விபரமானது வெளியிடப்பட்டுள்ளது.

>>ஐக்கிய அமெரிக்காவுடன் அதிர்ச்சி தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி<<

செயின்ட் லூசியா கிங்ஸ் அணி புதிய பருவத்திற்கான கரீபியன் பிரீமியர் லீக் (CPL) T20 தொடரில் தாம் தக்கவைக்கவுள்ள வீரர்கள் பட்டியலை நேற்று (06) வெளியிட்டிருந்ததது. அதன்படி இந்த பட்டியலில் தக்க வைக்கப்பட்டுள்ள முன்னணி வீரர்களில் ஒருவராக இலங்கை கிரிக்கட் அணியின் அதிரடி துடுப்பாட்டவீரரான பானுக்க ராஜபக்ஷ காணப்படுகின்றார்.

பானுக்க ராஜபக்ஷ ஒரு பக்கமிருக்க தென்னாபிரிக்காவின் நட்சத்திர வீரர் ஹெய்ன்ரிச் கிளாசன், ஆப்கானின் சுழல்வீரர் நூர் அஹ்மட் நமீபியாவின் வேகப்பந்து சகலதுறைவீரர் டேவிட் வீஸே, தென்னாபிரிக்காவின் முன்னணி துடுப்பாட்டவீரர் பாப் டு பிளேசிஸ் ஆகியோரும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி மூலம் தக்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

எனினும் நியூசிலாந்தின் முன்னணி துடுப்பாட்ட நட்சத்திரமான கொலின் மன்ரோ ஜிம்பாப்வே வீரர்களான சிக்கன்தர் ரஷா மற்றும் ஷோன் வில்லியம்ஸ் ஆகிய வீரர்கள் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியினால் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

>>நசாவ் ஆடுகளத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஐசிசி!<<

அதேநேரம் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்களான ஜோன்சன் சார்ள்ஸ், ரொஸ்டன் சேஸ் மற்றும் அல்சாரி ஜோசேப் ஆகிய வீரர்களும் செயின்ட் லூசியா அணியினால் தக்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கரீபியன் பிரீமியர் லீக் (CPL) T20 தொடரின் வீரர்கள் நிரல் (Players Draf) ஜூலை மாதம் இடம்பெறுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

செயின்ட் லூசியா கிங்ஸ் தற்போதைய வீரர்கள் குழாம்

ஹெய்ன்ரிச் கிளாசன், பாப் டு பிளேசிஸ், அல்சாரி ஜொசேப், ஜோன்ஸ்சன் சார்ள்ஸ், ரொஸ்டன் சேஸ், நூர் அஹ்மட், டேவிட் வீஸே, பானுக்க ராஜபக்ஷ, மெதிவ் போர்டே, கரீ பிய்ர்ரே, சாட்ராக் டெஸ்கார்டே, மெக்கன்னி கிளார்க்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<