Home Tamil உலகக் கிண்ணத் தொடரில் தோல்வியடையாத அணியாக முன்னேறும் இந்தியா

உலகக் கிண்ணத் தொடரில் தோல்வியடையாத அணியாக முன்னேறும் இந்தியா

138
India vs Afghanistan
ICC
கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 29 ஆவது லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியினை இந்தியா 11 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

இன்று (22) செளத்எம்ப்டன் நகரில் வைத்து ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தமது தரப்பிற்காக தெரிவு செய்தார்.

இங்கிலாந்தை சோதித்து பல சாதனைகள் படைத்த இலங்கை

சர்வதேச கிரிக்கட்டில் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய…

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் கடைசியாக தாம் பாகிஸ்தான் அணியுடன் பெற்ற வெற்றியுடன் தோல்விகள் ஏதுமின்றி முன்னேறும் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியுடனான மோதலிற்காக ஒரு மாற்றத்தினை மேற்கொண்டிருந்தது. அதன்படி, காயமுற்ற வேகப்பந்துவீச்சாளர் புவ்னேஸ்குமாரிற்கு பதிலாக மொஹமட் ஷமி இந்திய அணியில் உள்வாங்கப்பட்டிருந்தார்.

இந்திய அணி – லோக்கேஷ் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி (அணித்தலைவர்), விஜய் சங்கர், மஹேந்திர சிங் டோனி, ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ், மொஹமட் ஷமி, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரிட் பும்ரா

மறுமுனையில் இந்த உலகக் கிண்ணத்தில் வெற்றிகள் எதனையும் பெறாத குல்படின் நயீப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, இப்போட்டியில் தமது முதல் வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணியில் நூர் அலி மற்றும் தவ்லாத் சத்ரான் ஆகியோருக்கு பதிலாக ஹஷ்ரத்துல்லாஹ் சஷாய் மற்றும் அப்தாப் ஆலம் ஆகியோர் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

ஆப்கானிஸ்தான் அணி – ஹஷ்ரத்துல்லாஹ் சஷாய், குல்படின் நயீப் (அணித்தலைவர்), றஹ்மத் சாஹ், ஹஸ்மத்துல்லா சஹிதி, அஸ்கர் ஆப்கான், மொஹமட் நபி, இக்ராம் அலி கில், நஜிபுல்லா சத்ரான், ரஷீத் கான், அப்தாப் ஆலம், முஜிபுர் ரஹ்மான்

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக ரோஹித் சர்மா, லோக்கேஷ் ராகுல் ஆகியோருடன் இந்திய அணி தமது துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.

இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ரோஹித் சர்மா முஜிபுர் ரஹ்மானின் சுழலில் போல்ட் செய்யப்பட்டு வெறும் ஒரு ஓட்டத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால், ஆப்கானிஸ்தான் அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொண்டது.

ரோஹித் சர்மாவினை அடுத்து இந்திய அணியின் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லோக்கேஷ் ராகுல் 30 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.

இந்த வெற்றியை உற்சாக மருந்தாக கொண்டு இலங்கை முன்னேற வேண்டும் – சங்கக்கார

லீட்ஸ் நகரில் நேற்று (21) இடம்பெற்று முடிந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 27….

இதன் பின்னர் இந்திய அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களில் அதன் தலைவர் விராட் கோஹ்லி, கேதர் ஜாதவ் தவிர ஏனையோர் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறினர்.

இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் விராட் கோஹ்லி அவரின் 52ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 63 பந்துகளில் 67 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அத்தோடு, கோலியின் இந்த 67 ஓட்டங்கள் அவர் இந்த உலகக் கிண்ணத் தொடரில் தொடர்ச்சியாக பெற்ற மூன்றாவது அரைச்சதமாகவும் அமைந்தது. இதேநேரம், கேதர் ஜாதவ் அவரின் 6ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 68 பந்துகளில் ஒரு சிக்ஸர் 3 பெளண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களை பெற்றார்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் அதன் தலைவர் குல்படின் நயீப் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 225 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி, 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 213 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவியது.

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் வெற்றிக்காக போராட்டம் காண்பித்திருந்த மொஹமட் நபி அவரின் 13ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 55 பந்துகளில் 4 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 52 ஓட்டங்கள் பெற்றிருந்தார். இதேநேரம், றஹ்மத் ஷாஹ் 36 ஓட்டங்களுடன் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்காக முயற்சி செய்திருந்தார்.

இங்கிலாந்தை வீழ்த்த முடியும் என்ற தன்னம்பிக்கையோடு பந்து வீசினோம் – மாலிங்க

இங்கிலாந்ததை வீழ்த்த முடியும் என்ற தன்னம்பிக்கையோடு பந்து வீசியதால்….

இதேநேரம் இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் மொஹமட் ஷமி 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். அத்தோடு மொஹமட் ஷமி ஆப்கானிஸ்தான் அணியின் கடைசி மூன்று விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இப்போட்டியில் ஹெட்ரிக் சாதனையை புரிந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இவரோடு, ஜஸ்பிரிட் பும்ரா, யுஸ்வேந்திர சஹால் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா தெரிவு செய்யப்பட்டார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கிடைத்த வெற்றியோடு உலகக் கிண்ணத்தில் எந்த தோல்விகளுமின்றி முன்னேறும் இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியினை தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் மன்செஸ்டர் நகரில் வைத்து எதிர்வரும் வியாழக்கிழமை (27) சந்திக்கின்றது.

இதேநேரம் ஆப்கானிஸ்தான் அணி தமது அடுத்த உலகக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷ் அணியினை இந்திய அணியுடனான போட்டி இடம்பெற்ற இதே செளத்எம்ப்டன் நகரில் வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (24) சந்திக்கின்றது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<

ஸ்கோர் விபரம்

Result


India
224/8 (50)

Afghanistan
213/10 (49.5)

Batsmen R B 4s 6s SR
Lokesh Rahul c Hazratullah Zazai b Mohammad Nabi 30 53 2 0 56.60
Rohit Sharma b Mujeeb ur Rahman 1 10 0 0 10.00
Virat Kohli c Rahmat Shah b Mohammad Nabi 67 63 5 0 106.35
Vijay Shankar lbw b Rahmat Shah 29 41 2 0 70.73
MS Dhoni st Ikram Alikhil b Rashid Khan 28 52 3 0 53.85
Kedar Jadhav c Noor Ali Zadran b Gulbadin Naib 52 68 3 1 76.47
Hardik Pandya c Ikram Alikhil b Aftab Alam 7 9 0 0 77.78
Mohammed Shami b Gulbadin Naib 1 2 0 0 50.00
Kuldeep Yadav not out 1 1 0 0 100.00
Jasprit Bumrah not out 1 1 0 0 100.00


Extras 7 (b 0 , lb 0 , nb 0, w 7, pen 0)
Total 224/8 (50 Overs, RR: 4.48)
Fall of Wickets 1-7 (4.2) Rohit Sharma, 2-64 (14.2) Lokesh Rahul, 3-122 (26.1) Vijay Shankar, 4-135 (30.3) Virat Kohli, 5-192 (44.3) MS Dhoni, 6-217 (48.4) Hardik Pandya, 7-222 (49.3) Mohammed Shami, 8-223 (49.5) Kedar Jadhav,

Bowling O M R W Econ
Mujeeb ur Rahman 10 0 26 1 2.60
Aftab Alam 7 1 54 1 7.71
Gulbadin Naib 9 0 51 2 5.67
Mohammad Nabi 9 0 33 2 3.67
Rashid Khan 10 0 38 1 3.80
Rahmat Shah 5 0 22 1 4.40


Batsmen R B 4s 6s SR
Hazratullah Zazai b Mohammed Shami 10 24 1 0 41.67
Gulbadin Naib c Vijay Shankar b Hardik Pandya 27 42 2 0 64.29
Rahmat Shah c Yuzvendra Chahal b Jasprit Bumrah 36 63 3 0 57.14
Hashmatullah Shahidi c & b Jasprit Bumrah 21 45 2 0 46.67
Asghar Afghan b Yuzvendra Chahal 8 19 0 0 42.11
Mohammad Nabi c Hardik Pandya b Mohammed Shami 52 55 4 1 94.55
Najibullah Zadran c Yuzvendra Chahal b Hardik Pandya 21 23 2 0 91.30
Rashid Khan st MS Dhoni b Yuzvendra Chahal 14 16 1 0 87.50
Ikram Alikhil not out 7 10 0 0 70.00
Aftab Alam b Mohammed Shami 0 1 0 0 0.00
Mujeeb ur Rahman b Mohammed Shami 0 1 0 0 0.00


Extras 17 (b 4 , lb 4 , nb 0, w 9, pen 0)
Total 213/10 (49.5 Overs, RR: 4.27)
Fall of Wickets 1-20 (6.3) Hazratullah Zazai, 2-64 (16.5) Gulbadin Naib, 3-106 (28.4) Rahmat Shah, 4-106 (28.5) Hashmatullah Shahidi, 5-130 (34.6) Asghar Afghan, 6-166 (41.3) Najibullah Zadran, 7-190 (45.4) Rashid Khan, 8-213 (49.3) Mohammad Nabi, 9-213 (49.4) Aftab Alam, 10-213 (49.5) Mujeeb ur Rahman,

Bowling O M R W Econ
Mohammed Shami 9.5 1 40 4 4.21
Jasprit Bumrah 10 1 39 2 3.90
Yuzvendra Chahal 10 0 36 2 3.60
Hardik Pandya 10 1 51 2 5.10
Kuldeep Yadav 10 0 39 0 3.90



முடிவு – இந்திய அணி 11 ஓட்டங்களால் வெற்றி