இரட்டைச் சதமடித்து லஹிரு உதார வரலாற்று சாதனை

SLC Major League Tournament 2022

2122

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் 12ஆவது வாரத்துக்கான 10 போட்டிகள் நேற்று (06) நிறைவுக்கு வந்தன.

எனினும், சீரற்ற காலநிலை காரணமாக குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் மற்றும் BRC கழகத்துக்கும் இடையிலான போட்டியும், பாணந்துறை விளையாட்டுக் கழகம் மற்றும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்துக்கும் இடையிலான போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டன.

இதில் Ace Capitals கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் NCC கழகத்தின் 28 வயது வலது கை துடுப்பாட்ட வீரர் லஹிரு உதார இரட்டைச் சதமடித்து சாதனை படைத்தார். 155 பந்துகளில் 201 ஓட்டங்களைக் குவித்த அவர், முதல்தர கிரிக்கெட்டில் தன்னுடைய 2ஆவது இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்ததுடன், முதல் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டைச் சதமடித்த 2ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.

இந்தப் பட்டியலில் 129 பந்துகளில் இரட்டைச் சதமடித்து பானுக ராஜபக்ஷ முதலிடத்திலும், 151 இரட்டைச் சதமடித்து லஹிரு உதார 2ஆவது இடத்திலும், 161 பந்துகளில் இரட்டைச் சதமடித்து டில்ஹார லொகுஹெட்டிகே 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

அத்துடன், இம்முறை மேஜர் பிரீமியர் லீக்கில் இரட்டைச் சதமடித்த 6ஆவது வீரராகவும் இடம்பிடித்தார்.

முவர்ஸ் கழகத்துக்காக சகலதுறையிலும் பிரகாசித்த ரமேஷ் மெண்டிஸ்

இதனிடையே, கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் 22 வயது வலது கை துடுப்பாட்ட வீரராhன சமிந்து விஜேசிங்க (102) பொலிஸ் கழகத்துடனான போட்டியில் சதமடித்தார். முதல்தரப் போட்டிகளில் அவரது கன்னி சதம் இதுவாகும்.

பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் அகில தனன்ஜய (8/53), இராணுவ விளையாட்டுக் கழகத்தின் சீக்குகே பிரசன்ன (5/88), சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்தின் துஷான் விமுக்தி (8/75), செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகத்தின் தரிந்து ரத்நாயக (5/146), கண்டி சுங்க விளையாட்டுக் கழகத்தின் சச்சித்ர பெரேரா (7/28) லங்கன் கிரிக்கெட் கழகத்தின் மிரங்க விக்ரமகே (7/65) ஆகியோர் 5 விக்கெட் குவியலைப் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை, முவர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கான ஆடி வரும் யாழ். வீரர் தீசன் விதுஷன், செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும், 2ஆவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் முவர்ஸ் விளையாட்டுக் கழகம்

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 197 (52.3) – தரூஷ பெர்னாண்டோ 44, லொஹான் டி சொய்சா 39, சந்துன் பெர்னாண்டோ 36, ரமேஷ் மெண்டிஸ் 5/62, திலங்க உதேஷன 3/35, தீசன் விதுஷன் 2/32

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 355 (99.4) – சொஹான் டி லிவேரா 125, பசிந்து சூரியபண்டார 62, ரமேஷ் மெண்டிஸ் 65*, மொஹமட் சமாஸ் 26, தரிந்து ரத்நாயக 5/146, சாமிக எதிரிசிங்க 3/111

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 212/9 (59) – ரையன் பெர்னாண்டோ 47, சச்சித ஜயதிலக 47, தீசன் விதுஷன் 4/63, திலங்க உதேஷன 3/46

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம்

லங்கன் கிரிக்கெட் கழகம் – 210 (89) – இஷிவர திஸாநாயக 85, பிரசன்ன ஜயமான்னெ 45, கீத் குமார 37, சச்சித்ர பெரேரா 5/61, சஹன் அதீஷ 2/30

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 254 (72.1) – இயென் தேவ் சிங் 66, மிதுன் ஜயுவிக்ரம 63, சானக விஜேசிங்க 60, இமேஷ் உதயங்க 22, மிரங்க விக்ரமகே 7/65, கசுன் அபேரட்ன 2/22

லங்கன் கிரிக்கெட் கழகம் – 76 (26.1) – கசுன் அபேரட்ன 21, சச்சித்ர பெரேரா 7/28

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 34/5 (7.5) – மிரங்க விக்ரமகே 3/13, தமித சில்வா 2/08

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


SSC கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

SSC கழகம் – 308/8d (84.1) – நுவனிந்து பெர்னாண்டோ 67, க்ரிஷான் சன்ஜுல 63, நிபுன் தனன்ஜய 60, சதுர லக்ஷான் 4/78, கவிந்து எதிரிவீர 3/31

காலி கிரிக்கெட் கழகம் – 36/1

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 191 (58.2) – சமிந்து விஜேசிங்க 68, பவன் பத்திரன 51, சொனால் தினூஷ 24, மினோத் பானுக 22, நளின் ப்ரியதர்ஷன 6/72, மன்ஜுல ஜயவர்தன 4/29

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 116 (38.5) – நதீர பாலசூரிய 25, நிபுன காரியவசம் 23, மாலிந்த புஷ்பகுமார 5/53

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 293 (80.3) – சமிந்து விஜேசிங்க 102*, பவன் பதிராஜ 71, மினோத் பானுக 31, நிமேஷ குணசிங்க 25, சதுர ரன்துனு 4/110, நுவன் பிரதீப் 3/43, நிபுன காரியவசம் 2/16

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 130/4 (36) – நதீர பாலசூரிய 70*, ஹேஷான் தனுஷ்க 25, மாலிந்த புஷ்பகுமார 4/46

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 400/9d (116.3) – யொஹான் டி சில்வா 111, மதுக லியனபத்திரனகே 56*, கஜித கொடுவேகொட 42, ஹஸ்னைன் பொக்ஹாரி 40, சரித குமாரசிங்க 31, நிர்மல ரத்நாயக 2/60, புத்திக சன்ஜீவ 2/66, சலன டி சில்வா 2/110

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 182 (38.2) – மலி;ந்து மதுரங்க 59, சலன டி சில்வா 37, ரனேஷ் சில்வா 36, ஹஸ்னைன் பெக்ஹாரி 3/57, மதுக லியனபதிரனகே 2/16, உஸ்மான் இஷாக் 2/51

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 22/2 (4)

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 204 (48.1) – கசுன் ஏகநாயக 33, சுபேஷல ஜயதிலக 48, மொவின் சுபசிங்க 24, ரொஸ்கோ தட்டில் 21, சீக்குகே பிரசன்ன 6/71

இராணுவ விளையாட்டுக் கழகம் – 309 (83) – அசேல குணரட்ன 72, ஹிமாஷ லியனகே 54, மஹேஷ் குமார 52, அஷான் ரன்திக 25, மொவின் சுபசிங்க 5/78, கயான் சிறிசோம 2/81

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 211 (66.5) – கெமிர விஜேநாயக 51, ரொஸ்கோ தட்டில் 47, மொவின் சுபசிங்க 31, சீக்குகே பிரசன்ன 5/88, அசேல குணரட்ன 3/34

இராணுவ விளையாட்டுக் கழகம் – 109/6 (24) – அஷான் ரன்திக 37, கயான் சிறிசோம 3/37, மொவின் சுபசிங்க 2/44

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


NCC கழகம் எதிர் Ace Capitals கிரிக்கெட் கழகம்

NCC கழகம் – 183 (41) – சஹன் ஆரச்சிகே 67, அஹான் விக்ரமசிங்க 34, கவின் பண்டார 32, ரொஷான் ஜயதிஸ்ஸ 5/21, வனுஜ சஹன் 3/39

Ace Capitals கிரிக்கெட் கழகம் – 151 (46.4) – ஹர்ஷ குரே 34, ப்ரமோத் ஹெட்டிவத்த 31, லசித் க்ரூஸ்;புள்ளே 30, அம்ஷி டி சில்வா 3/20, லசித் எம்புல்தெனிய 3/41, டில்ஷான் நிபுனஜித் 3/43

NCC கழகம் – 372/3d (47.2) – லஹிரு உதார 201* கவின் பண்டார 56, சஹன் ஆரச்சிகே 51, சந்துன் வீரக்கொடி 41

Ace Capitals கிரிக்கெட் கழகம் – 210/5 (46) – லசித் க்ரூஸ்புள்ளே 62, தனுக தாபரே 46, வனுஜ சஹக் 42*, சஹன் ஆரச்சிகே 2/22, நிபுன் ரன்சிக 2/72

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் நுகேகொட விளையாட்டுக் கழகம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 284 (94.4) – ஜடின் சக்சேனா 97, பசிந்து லக்சங்க 64, அஞ்சலோ ஜயசிங்க 20, ரனித லியனாரச்சி 3/39, அரவிந்த ப்ரேமரத்ன 2/31

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 294 (94.5) – ருமேஷ் புத்திக 63, அபிஷேக் லியனாரச்சி 60, கரன் கைலா 41, உபுல் இந்திரசிறி 4/76, ஜடின் சக்சேனா 3/52

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 36/1 (8)

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 278 (97) – நவிந்து விதானகே 89, ஹஷேன் ராமநாயக 55, மிலிந்த சிறிவர்தன 51, யுரான் நிமாஷ 4/90, வினோத் பெரேரா 3/34, நவின் கவிகார 3/86

கடற்படை விளையாட்டுக் கழகம் – 196 (60.2) – வினோத் பெரேரா 61, மாலிங்க மாலிகஸ்பே 55, துஷான் விமுக்தி 8/75

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 204/5d (38) – மிலிந்த சிறிவர்தன 60, நவிந்து விதானகே 57, கவின் கவிகார 2/93

கடற்படை விளையாட்டுக் கழகம் – 28/2 (9.5)

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


களுத்துறை நகர கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

களுத்துறை நகர கழகம் – 96 (41) – சவன் கன்கானம்கே 42, அகில தனன்ஜய 8/53

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 142/5 (34) – ஹஷான் துமிந்து 83*, சங்கீத் குரே 33, சாரங்க ராஜகுரு 3/43

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<