தங்கப் பாதணி கிரீஸ்மனுக்கு வெள்ளிப் பாதணி ரொனால்டோவுக்கு

201

யூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துக்கல் அணி 1-0 என பிரான்சை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம்வென்றுள்ளது.

இந்தத் தொடரில் பிரான்ஸ்அணியின் ஆண்டோனி கிரீஸ்மன் அதிக கோல்களை (6 கோல்கள்) அடித்துத் தங்கப் பாதணியை  தட்டிச் சென்றுள்ளார்.

போர்த்துக்கல் அணியின் தலைவர் ரொனால்டோ 3 கோல்களுடன் வெள்ளிப் பாதணியையும், பிரான்ஸ் வீரர் ஆலிவிர் ஜிரோட் 3 கோல்களுடன் வெண்கலப் பாதணியையும் வென்றனர்.

மேலும், யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிகளில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் தலா 9 கோல்கள் அடித்து போர்த்துகலின் ரொனால்டோவும் பிரான்ஸ் அணியின் மைக்கேல் பிளாட்னியும் உள்ளனர்.

அதேபோல் யூரோ கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் ரொனால்டோ தான் அதிக முறை (21 முறை) பங்கேற்றவராக இருக்கிறார்.

இதேவேளை இந்த வெற்றி குறித்து போர்த்துக்கல் அணியின் ரொனால்டோ கூறுகையில், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தருணத்திற்காக தான் நீண்ட காலமாக, 2004ஆம் ஆண்டில் இருந்து காத்திருந்தேன்.

போர்த்துக்கல் அணி வீரர்கள் இந்த வெற்றிக்குத் தகுதியானவர்கள். துரதிருஷ்டவசமாக எனக்கு சில விடயங்கள் சிறப்பானதாக அமையவில்லை. ஆனால் நான் எனது அணி வீரர்களை முழுவதும் நம்பினேன். அவர்களுக்குத் தகுதியும் திறமையும் இருக்கிறது.

இது எனது வாழ்நாளின் சிறந்த தருணம். போர்த்துக்கல் அணிக்காக கிண்ணம் வெல்லவேண்டும், வரலாறு படைக்க வேண்டும் என்பது எப்போதும் சொல்லும் ஒன்று தான்.

இது ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் கிடைத்த வெற்றி. இதை என்னால் மறக்கவே முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்