ஜனவரி மாதத்துக்கான ICC இன் சிறந்த வீரரானார் ரிஷாப் பண்ட்

ICC Men's Player of the Month

148

ஐ.சி.சி அறிமுகம் செய்துள்ள ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்திய அணியின் இளம் வீரரும், விக்கெட் காப்பாளருமான ரிஷாப் பண்ட் முதல் வீரராக வென்றுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட் பேரவை மாதந்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து கௌரவிக்க முடிவு செய்தது. அதன்படி ஜனவரி மாதத்துக்கான விருதுக்கு இந்தியாவின் ரிஷாப் பண்ட், இங்கிலாந்தின் ஜோ ரூட், அயர்லாந்து வீர்ர் போல் ஸ்டெர்லிங் ஆகிய மூலரினதும் பெயரை ஐ.சி.சி பரிந்துரை செய்திருந்தது.

ஜனவரி மாத சிறந்த வீரர்: ஐ.சி.சி பரிந்துரைப் பட்டியலில் மூன்று வீரர்கள்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல ரிஷாப் பண்ட் முக்கிய காரணமாக இருந்தார். சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்சில் 97 ஓட்டங்களையும், பிரிஸ்பேனில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களையும் அவர் விளாசினர்

இவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றியை ருசித்தது. இதனால் ரிஷாப் பண்ட் பெயரை ஐ.சி.சி பரிந்துரை செய்தது.

இங்கிலாந்து அணி தலைவர் ஜோ ரூட் இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 228 ஓட்டங்களையும், 2ஆவது டெஸ்டில் 186 ஓட்டங்களையும் விளாசினார். இதனால் இங்கிலாந்து 2-0 என இலங்கையை வீழ்த்தியது. இலங்கை தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்ததால் ஜோ ரூட்டின் பெயரையும் பரிந்துரை செய்தது

அதேபோல, அயர்லாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான போல் ஸ்டெர்லிங் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டிகளில் 3 சதங்களை விளாசினார். இதனால் அவரது பெயரையும் .சி.சி பரிந்துரை செய்தது.

டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வாய்ப்பை இழக்குமா இந்தியா?

எனவே, இவ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த மற்றைய இருவரான ஜோ ரூட், போல் ஸ்டெர்லிங் ஆகியோரைவிட அதிக வாக்குகள் பெற்று ரிஷாப் பண்ட் ஐ.சி.சி இன் ஜனவரி மாதத்தின் அதிசிறந்த வீரராக தேர்வாகினார்

இந்த நிலையில், .சி.சி இன் ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதினை வென்றமை தொடர்பில் ரிஷாப் பண்ட் கருத்து வெளியிடுகையில்

எந்தவொரு விளையாட்டு வீரருக்கும் அணியின் வெற்றிக்குப் பங்களிப்பது பெரிய விருது. ஆனால், இதுபோன்ற முன்னெடுப்புகள் என்னைப் போன்ற இளம் வீரர்களை ஒவ்வொரு முறையும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும்

இந்த விருதை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்குப் பங்காற்றிய ஒவ்வொருவருக்கும் சமர்ப்பிக்கிறேன். மேலும் எனக்காக வாக்களித்த ரசிகர்களுக்கு நன்றி” என தெரிவித்தார்.   

இதனிடையே, வீராங்கனைகளில் தென்னாபிரிக்காவின் ஷப்னீம் இஸ்மாயில் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதுக்கு இஸ்மாயிலின் சக வீராங்கனை மாரிஸ்ஆன் கெப், பாகிஸ்தானின் டயனா பெய்க் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்

ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவராக ஜெய் ஷா நியமனம்!

எனவே, .சி.சி இனால் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படவுள்ள இந்த விருதுக்கான வீரர்களை வாக்களிப்பு அகடமி தேர்வு செய்யும். வாக்களிப்பு அகடமியில் மூத்த பத்திரிகையாளர்கள், முன்னாள் வீரர்கள், ஒளிப்பரப்பாளர்கள், ஐசிசியின் ஹால்ஃப் பேம் உறுப்பினர்களில் சிலர் இடம்பெற்றுள்ளனர்.

வெற்றியாளர்கள் ஒவ்வொரு மாதத்தின் 2-ஆவது திங்கட்கிழமை அறிவிக்கப்படுவார்கள்

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<