மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஷேர்ன் வொர்னின் பெயர்

Australia Cricket

216
Shane Warne

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் கிரேட் சௌதெர்ன் அரங்கத்திற்கு மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேர்ன் வோர்னின் (SK Warne stand) பெயரிடப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த முன்னணி சுழல் பந்துவீச்சாளரான ஷேர்ன் வோர்ன் நேற்றைய தினம் (04) தன்னுடைய 52வது வயதில் திடீர் மாரடைப்பு  காரணமாக உயிரிழந்தார்.

>> NSL தொடரின் 2ஆவது நாளில் சஹன், நிபுன் சதமடித்து அபாரம்

இவரின் மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வாளர்கள் என அனைவரும் தங்களுடைய இறங்கல் செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில், அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள, மெல்போர்ன் சர்வதேச கிரிக்கட் மைதானத்தின் கிரேட் சௌதெர்ன் அரங்கிற்கு ஷேர்ன் கெயித் வோர்ன் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது.

ஷேர்ன் வோர்ன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமாக 708 விக்கெட்டுகளை வீழ்த்தி, இரண்டாவது அதிகூடிய டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

அதேநேரம், ஷேர்ன் வோர்ன் கடந்த 2006ம் ஆண்டு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பொக்ஸிங் டே கிரிக்கெட் போட்டியில் தன்னுடைய 700வது விக்கெட் என்ற மைல்கல்லையும் எட்டியிருந்தார். எனவே, மெல்போர்ன் கிரிக்கெட் கழகம் ஷேர்ன் வோர்னிற்கு மரியாதை செலுத்தும் முகமாக அவருடைய பெயரை அரங்கத்திற்கு சூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<