கிரிக்கெட் பிரபல்யம் இல்லாத இடங்களில் இடம்பெற்ற சர்வதேச தொடர்கள்

1473

பந்து சேதப்படுத்தல் சர்ச்சையில் சிக்கி, ஒரு வருட போட்டித் தடையினைப் பெற்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் கனடாவில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள குளோபல் T20 தொடரில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டீவ் ஸ்மித் போன்று வெளிநாட்டு, உள்நாட்டு வீரர்களினை ஆடக்கிய ஆறு அணிகள் இந்த T20 தொடரில் பங்கேற்கவுள்ளதோடு, தொடரின் அனைத்துப் போட்டிகளும் டொரோன்டோ நகருக்கு அண்மையில் இருக்கும் மெப்ல் லீப் கழக மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றன.

உலக டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் முதல் தலைவர்கள் யார்?

ஐ.சி.சி. இன் முழு உறுப்பினர்களாக இருக்கும் பன்னிரண்டு நாடுகள் டெஸ்ட்…..

மெப்ல் லீப் கழக மைதானத்தில் இதற்கு முன்னர் 22 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடாத்தப்பட்டிருந்தன. அதில் கிரிக்கெட் உலகின் முன்னணி நட்சத்திரங்களான சனத் ஜயசூரிய, மஹேல ஜயவர்தன, மிஸ்பா உல் ஹக் மற்றும் சஹீட் அப்ரிடி ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

கனடாவின் மெப்ல் லீப் கழக மைதானம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு ஓரளவு பரீட்சயமாக இருக்கின்ற போதிலும், கிரிக்கெட் விளையாட்டு பிரபல்யமாக இருக்காத நாடுகளின் மைதானங்களிலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றிருக்கின்றன. அப்படியான இடங்கள் சிலவற்றை பார்ப்போம்.

சிங்கப்பூர்

Getty Images

சனத்தொகை அடர்த்தியாக இருக்கும் நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர், கிரிக்கெட்டினை தமது வழமையான விளையாட்டுக்களில் ஒன்றாக எடுத்துக் கொள்வதில்லை. எனினும், இந்த நாட்டின் இரண்டு மைதானங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இதில் முதலாவது மைதானமாக பெடாங் விளையாட்டு மைதானம் என அழைக்கப்படும் சிங்கப்பூர் கிரிக்கெட் கழகத்தின் மைதானத்தினை குறிப்பிட முடியும். 1837 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கழகத்தின் மைதானம் ஒரு காலத்தில் அவுஸ்திரேலிய-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடர் வழமையாக நடைபெறும் இடங்களில் ஒன்றாக இருந்தது.

விளையாட்டு வீரர்களின் திடீர் உயிரிழப்புகளுக்கு காரணம் என்ன?

விளையாட்டுகள் உலகளாவிய ரீதியில் ……….

அதோடு, இந்த மைதானத்தில் 1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற சிங்கர் கிண்ண ஒரு நாள் தொடர், பின்னர் அனைவராலும் பேசப்பட்டிருந்தது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் பங்குபற்றியிருந்த இந்த தொடரில் இலங்கையின் அதிரடி வீரரான சனத் ஜயசூரிய 48 பந்துகளில் சதம் விளாசியதோடு, 17 பந்துகளில் அரைச்சதத்தினையும் பதிவு செய்திருந்தார். இந்த இரண்டு அடைவுகளும் பாகிஸ்தான் அணிக்கெதிராக பெறப்பட்டிருந்ததுடன், அப்போது பதிவாகிய உலக சாதனைகளாகவும் அவை  இருந்தன.

பெடாங் மைதானம் தவிர, சிங்கப்பூரில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற ஏனைய இடமாக  கல்லாங் மைதானம் இருக்கின்றது. இந்த மைதானத்தில் 1999 மற்றும் 2000 ஆகிய ஆண்டுகளில் சிங்கப்பூர் சவால் கிண்ணத் தொடர் என்னும் ஒரு நாள் தொடர் நடாத்தப்பட்டிருந்தது. இந்த தொடரில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் பங்குபற்றியிருந்தன.

1999 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்த சிங்கப்பூர் சவால் கிண்ணத் தொடரில் சச்சின் டெண்டுல்கர், ப்ரெய்ன் லாரா மற்றும் என்டி ப்ளவர் போன்ற முக்கிய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இத்தொடரின் ஒவ்வொரு போட்டிகளிலும் 12.75 என்கிற சராசரியில் சிக்ஸர்கள் விளாசப்பட்டிருந்தன. குறித்த ஆண்டுக்கான தொடரினை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியிருந்தது.

இதன் பின்னர், 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடரில்  தென்னாபிரிக்க அணி சம்பியன் பட்டம் வென்றிருந்தது. .


மொரோக்கோ

Getty Images

வட ஆபிரிக்கான நாடான மொரோக்கோவில் 2002 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் தொடரொன்று இடம்பெற்றிருந்தது. மொரோக்கோ கிண்ணம் என்ற பெயரில் அமைந்த இந்த ஒரு நாள் தொடர் 7 போட்டிகளினை கொண்டிருந்தது. குறித்த தொடரில் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் பங்குபற்றியிருந்தன.

2002 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் இடம்பெற்றிருந்த இத் தொடரினை ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரபல வர்த்தகர்களில் ஒருவரான அப்துல் ரஹ்மான் புகாத்தீர் ஒழுங்கு செய்திருந்தார். இந்த கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்திலேயே ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், தொடர் நடாத்த திட்டமிடப்பட்ட காலப்பகுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் மிகவும் உஷ்ணமான காலநிலை நிலவும் என்பதால் மொரோக்கோவுக்கு மாற்றப்பட்டிருந்தது. அதோடு, மொரோக்கோ போன்ற வட ஆபிரிக்க நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டினை பிரபல்யப்படுத்துவதும் இந்த தொடரின் நோக்கமாகவிருந்தது.

இந்த தொடரில் ஐந்து போட்டிகளில் பங்குபற்றி நான்கு வெற்றிகளை சுவீகரித்த இலங்கை அணியே மொரோக்கோ கிண்ணத்தின் வெற்றியாளர்களாக நாமம் சூடியிருந்தது. இலங்கை அணியின் தலைவரான சனத் ஜயசூரிய இந்த தொடரில் மொத்தமாக 299 ஓட்டங்கள் பெற்று அதிக ஓட்டங்கள் பெற்றவராக மாறியிருந்தார்.

ஆட்டநிர்ணய குற்றச்சாட்டை மறுக்கும் ரவீன் விக்ரமரட்ன

கிரிக்கெட்டுடன் தொடர்புடைய அதிகாரியொருவருக்கு…….

மறுமுனையில் முத்தையா முரளிதரன், வகார் யூனுஸ் மற்றும் அலன் டொனால்ட் போன்றவர்களும் ஜொலித்திருந்தனர். இந்த தொடரினை அடுத்து இன்றுவரை சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் எதுவும் மொரோக்கோவில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மலேசியா

Getty Images

கிரிக்கெட் நிருவாகிகளுக்கு கிரிக்கெட் விளையாட்டினை பல்வேறு நாடுகளுக்கு அறிமுகம் செய்யும் திட்டமிருந்தது. இதன்படி, அவர்கள் 2006 ஆம் ஆண்டு டி.எல்.எப் கிண்ணம் என்ற பெயரில் முக்கோண ஒரு நாள் தொடரொன்றினை மலேசியாவில் நடாத்தியிருந்தனர். இந்த முக்கோண தொடரில் இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்கேற்றிருந்தது.

இந்த தொடரின் போட்டிகள் மலேசியாவில் விரைவாக கட்டி முடிக்கப்பட்டிருந்த கோலாலம்பூர் கின்ராரா  ஓவல் அரங்கில் இடம்பெற்றன.  தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி வரத்தவறியிருந்ததுடன், அவுஸ்திரேலிய அணி சம்பியன் பட்டத்தினை வென்றிருந்தது.

இந்தப் போட்டித் தொடரினை கண்டுகளிக்க மலேசிய கிரிக்கெட் இரசிகர்கள் பலர் வருகைத்தந்திருந்தனர். தொடரின் மூன்றாவது போட்டியில் 24 வயதாக இருந்த அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஜோன்சன், தான் வீசிய எட்டு பந்துகளுக்குள்ளேயே இந்திய அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் நால்வரினை ஓய்வறை அனுப்பி அசத்தியிருந்தார்.

மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்

இலங்கை அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையில் அடுத்த மாதம்……….

மிச்செல் ஜோன்சன் மாத்திரமல்லாது தொடரில் சச்சின் டெண்டுல்கர், ப்ரெய்ன் லாரா மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோரும் தங்களது திறமைகளினை வெளிக்காட்டியிருந்தனர்.

இந்த தொடரின் பின்னர்,  கடந்த ஒரு தசாப்த காலமாக மலேசியாவில் சர்வதேச தொடர்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிகவிரைவில் அங்கே போட்டிகளில் விளையாடவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஐக்கிய அமெரிக்கா

Getty Images

1844 ஆம் ஆண்டே அமெரிக்க அணியும், கனடா அணியும் சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றில் பங்குபற்றியிருந்த போதிலும் சில பிரச்சினைகளின் காரணமாக அங்கே அண்மைய நாட்களிலேயே உயர்நிலை கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டு வருகின்றன.

ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள லோடர்ஹில் மைதானம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்படும் முக்கிய இடமாக இருக்கின்றது.

இந்த மைதானத்தில் 2010 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஆறு T20 சர்வதேச போட்டிகள் இடம்பெற்றிருக்கின்றன. அதோடு, கரீபியன் பிரீமியர் லீக் T20 தொடரின் சில போட்டிகளும் இங்கு நடாத்தப்பட்டிருக்கின்றன.

அர்ஜுனவின் மன உறுதி தேவை

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கான பயிற்சியை…..

இந்த மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், இந்திய அணிக்கும் நடைபெற்றிருந்த T20 போட்டியொன்றில் மொத்தமாக 489 ஓட்டங்கள் பெறப்பட்டிருந்தது.

குறித்த போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 245 ஓட்டங்களைக் குவித்திருந்தது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஈவின் லூயிஸ் சதம் ஒன்றினைக் கடந்து உதவியிருந்தார். பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணியில் 51 பந்துகளினை மாத்திரம் எதிர் கொண்டு லோக்கேஷ் ராகுல் 110 ஓட்டங்களைப் பெற்று அணியினை வெற்றிப்பாதைக்கு வழிநடாத்திய போதிலும் துரதிஷ்டவசமாக ஒரு ஓட்டத்தினால் இந்திய அணி தோல்வியினைத் தழுவியிருந்தது.


கனடா

Getty Images

கனடாவின் குளோபல் T20 தொடர் இடம்பெறும் மெப்ல் லீப் கழக மைதானமே அங்கு சர்வதேசப் போட்டிகள் இடம்பெற்ற ஒரே இடமாக இருக்கின்றது. இந்த மைதானத்தில் 5000 பார்வையாளர்களுக்கே இருக்க முடியும் என்ற போதிலும் அங்கே 90 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இந்திய-பாகிஸ்தான் இடையிலான ஒரு நாள் போட்டிகள் அனைவரினையும் கவர்த்திழுந்திருந்தன.

சஹாரா நட்புக் கிண்ணம் என்ற பெயரில் நடைபெற்ற குறித்த ஒரு நாள் தொடர் 1997,1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் கனடாவில் நடாத்தப்பட்டிருந்தது. இந்த கிண்ணத்தினை இரண்டு தடவைகள் பாகிஸ்தான் அணி கைப்பற்றியிருந்ததோடு ஒரு தடவை இந்திய அணி வென்றிருந்தது.

இந்த தொடரின் போட்டிகளின் போது சச்சின் டெண்டூல்கார், வசீம் அக்ரம், ராகுல் ட்ராவிட் சயீட் அன்வர் போன்ற வீரர்கள் சிறப்பாக செயற்பட்டிருந்தனர்.

வட அமெரிக்காவில் பிரபல்யமாக இருந்த இந்தக் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் – இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையில் தோன்றிய அரசியல் பிளவுகளினால் பின்னர் கைவிடப்பட்டது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<