உலக டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் முதல் தலைவர்கள் யார்?

832

ஐ.சி.சி. இன் முழு உறுப்பினர்களாக இருக்கும் பன்னிரண்டு நாடுகள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்துடன் இருக்கின்றன. இந்த நாடுகளில் ஆப்கானிஸ்தான் தவிர்ந்த ஏனைய பதினொரு நாடுகளும் (அவுஸ்திரேலியா, அயர்லாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், ஜிம்பாப்வே, இந்தியா) டெஸ்ட் போட்டிகளில்  விளையாடிய அனுபவத்தினைப் பெற்றுவிட்டன.

அர்ஜுனவின் மன உறுதி தேவை

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கான பயிற்சியை முடித்துக் கொண்டு இளம் சன்ஜீவ ரணதுங்க வீடு திரும்பி இருந்தார்.

இப்படியாக, டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்துடன் இருக்கும் நாடுகள், அவற்றினுடைய முதல் டெஸ்ட் போட்டிகளின் போது யாரினால் வழிநடாத்தப்பட்டிருந்தது என்பதை பார்ப்போம்.

இங்கிலாந்துஜேம்ஸ் லில்லிவைட் ஜூனியர்

கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது டெஸ்ட் போட்டியானது அவுஸ்திரேலிய அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையில் 1877 ஆம் ஆண்டு மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றிருந்தது.  

இந்த வரலாற்றுப்பூர்வமிக்க டெஸ்ட் போட்டியில் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து அணியினை வழிநடாத்தும் வாய்ப்பு இடதுகை சுழல் வீரரான ஜேம்ஸ் லில்லிவைட் ஜூனியருக்கு கிடைத்திருந்தது

©Getty Images
பழைய இங்கிலாந்து டெஸ்ட் அணி

 

கிரிக்கெட்டின் சொந்தக்காரர்கள் இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணியுடன் தோல்வியடைந்த போதிலும், லில்லிவைட்டினால் சிறந்த முறையில் பந்து வீச்சு வெளிப்படுத்தப்பட்டு இருந்தது. லில்லிவைட்   இங்கிலாந்து அணியின் முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்ததோடு, அடுத்த போட்டியிலேயே  (அவுஸ்திரேலியா உடன்) இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் வெற்றியினைச் சுவைக்கவும் காரணமாகவிருந்தார்.

அவுஸ்திரேலியாடேவ் கிரகோரி

கிரிக்கெட் மூதாதையர்களில் ஒருவரான அவுஸ்திரேலிய அணியினை அவர்களது வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டியில் தலைமை தாங்கும் சந்தர்ப்பம் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான டேவ் கிரகோரியிற்கு கிடைத்திருந்தது.  

கிரகோரியின் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி தமது முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று, டெஸ்ட் போட்டிகளில் முதல் வெற்றியினைப் பதிவு செய்த கிரிக்கெட் அணியாக புதிய அத்தியாயம் படைத்தது.

©PA Photos
பழைய அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி

கிரகோரி நல்ல தலைவராக இருந்த போதிலும் துடுப்பாட்ட வீரராக பிரபல்யமாக மாற குறிப்பிடும் படியான எதனையும் செய்திருக்கவில்லை. அவுஸ்திரேலிய அணியின் கன்னி டெஸ்ட் போட்டியில் நான்கு ஓட்டங்களினையே பெற்ற கிரகோரி, மூன்று டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் அவுஸ்திரேலிய அணியினை பிரதிநிதித்துவம் செய்திருந்தார். இம்மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் அவர் மொத்தமாக 60 ஓட்டங்களினையே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் சந்தேகம்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை (CWI) முகம்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்று டெஸ்ட் …..

தென்னாபிரிக்காஒவன் டனல்

1889 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் விளையாடிய டெஸ்ட் போட்டியின் மூலம், தென்னாபிரிக்க அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மூன்றாவது நாடாக பதிவாகியிருந்தது.

மூன்று நாட்கள் கொண்டதாக இடம்பெற்ற குறித்த டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்க அணி  மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரான ஒவன் டனலினால் வழிநடாத்தப்பட்டிருந்தது.   

பாய்விரிப்பில் (Matting) நடைபெற்ற இந்த டெஸ்டில் டனல் மொத்தமாக, 37 ஓட்டங்களினைப் பெற்றுக் கொடுத்தார். இப்போட்டியில் சக தென்னாபிரிக்க வீரர்கள் பெற்ற ஓட்டங்களுடன் ஒப்பிடும் போது டனல் இன் துடுப்பாட்டம் சிறந்தது என்றே கூற முடியும்.  

இங்கிலாந்து அணி தென்னாபிரிக்காவின் முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுக்களால் இலகு வெற்றி ஒன்றினை சுவீகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள்கார்ல் நனஸ்

மேற்கிந்திய தீவுகள் அணி 1928 ஆம் ஆண்டு தமது கன்னி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் ஆடியிருந்தது. இந்தப் போட்டியின் மூலம்  மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நான்காவது நாடாக பதிவாகியது.  

குறித்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியினை கிங்ஸ்ட்டோன் நகரினை பிறப்பிடமாகக் கொண்ட முன்வரிசை துடுப்பாட்ட வீரரான கார்ல் நனஸ் வழிநடாத்தியிருந்தார்.  

மேற்கிந்திய தீவுகள் இப்போட்டியில் தோல்வியினை தழுவியிருந்த போதிலும்  நனஸ் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

நியூசிலாந்துடொம் லொவ்ரி

கிரிக்கெட் விளையாட்டு துரிதகதியில் பிரபல்யமாக மாறியதனை அடுத்து 1930 ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணியும் தமது டெஸ்ட் பிரவேசத்தினை மேற்கொண்டிருந்தது.

©Getty Images
அப்போதைய நியூசிலாந்து கிரிக்கெட் அணி

இதன்படி, கிரிஸ்ட்சேர்ச்சில் நியூசிலாந்து அணியினர் இங்கிலாந்து அணியுடன் தமது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினர்.  இப்போட்டியில் நியூசிலாந்து அணியினை வழிநடாத்திய விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான டொம் லொவ்ரி முதல் இன்னிங்சில் ஓட்டம் எதனையும் பெறாவிட்டாலும், இரண்டாவது இன்னிங்சில் 40 ஓட்டங்களினை நியூசிலாந்து அணிக்காக பெற்றிருந்தார். இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுக்களால் வெற்றி அடைந்தது.  

அதனை அடுத்து நியுசிலாந்து அணி பங்குபற்றிய ஆறு டெஸ்ட் போட்டிகளுக்கு அணித்தலைவராக டோம் லோவ்ரியே செயற்பட்டார்.

வேகப்பந்துவீச்சாளர்களின் தொடர் உபாதையும், ஹத்துருசிங்கவின் புதிய வியூகமும்

சுமார் ஒன்றரை வருடங்களாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இலங்கை அணி, இவ்வருடம் முதல் ….

இந்தியா – C.K. நாயுடு

இந்திய கிரிக்கெட் அணி 1932 ஆம் ஆண்டு, தமது முதல் டெஸ்ட் போட்டியில் அவர்களுடைய அப்போதைய ஆட்சியாளர்களான இங்கிலாந்து அணியுடன் விளையாடியிருந்தனர்.

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில், இந்தியத் தரப்பினை மகராஷ்டிரா மாநில வீரரான C.K. நாயுடு தலைமை தாங்கியிருந்தார்.

சகலதுறை வீரர்களில் ஒருவரான நாயுடு, இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டியில் 50 ஓட்டங்களினையும்,  2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார். இந்தப் போட்டியோடு சேர்த்து மொத்தமாக  7 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடிய நாயுடு கிரிக்கெட் விளையாட்டு தவிர ஹொக்கி, கால்பந்து ஆகியவற்றிலும் அப்போது சிறப்பாக விளங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான்அப்துல் கர்டார்

1947 ஆம் ஆண்டு பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடாக மாறியது. இதனையடுத்து தமக்கென ஒரு கிரிக்கெட் அணியினை உருவாக்கி கொண்ட பாகிஸ்தான், அவர்களுடைய கன்னி டெஸ்ட் போட்டியில் 1952 ஆம் ஆண்டு இந்தியாவினை எதிர்த்து ஆடியிருந்தனர்.

 காணொளிகளைப் பார்வையிட  

இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியினை சகலதுறை வீரரான அப்துல் கர்டார் வழிநடாத்தியிருந்தார். பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தந்தை என அழைக்கப்படும் கர்டார் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களால் இன்றும் பேசப்படும் ஒரு வீரராக உள்ளார்.  

©Getty Images
முன்னைய பாகிஸ்தானின் டெஸ்ட் அணி

 

பாகிஸ்தான் அணி தமது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் இன்னிங்ஸ் தோல்வியினை தழுவியிருந்த போதிலும், கர்டார் சகலதுறைகளிலும் சிறப்பாக செயற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

இலங்கைபந்துல வர்ணபுர

டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் எட்டாவது நாடாக இலங்கை அணி 1982 ஆம் ஆண்டு மாறியிருந்தது. கொழும்பில் வைத்து தமது முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் இலங்கை மோதியிருந்தது.

கிட்டத்தட்ட 150 வருடகால காத்திருப்புக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இலங்கை அணியினை பந்துல வர்ணபுர தலைமை தாங்கியிருந்தார்.  

©Wisden Cricket Monthly
இலங்கை அணியின் முதல் டெஸ்ட் போட்டி

ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பந்துல குறித்த போட்டியில் இலங்கை அணிக்காக வீசப்பட்டிருந்த முதல் பந்தினை எதிர்கொண்டிருந்ததுடன் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை சார்பில் வீழ்த்தப்பட்ட முதல் விக்கெட்டாகவும் மாறியிருந்தார். பந்துல வர்ணபுர இலங்கையின் முதல் டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 40 ஓட்டங்களினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

இலங்கை அணியின் களத்தடுப்புக்கு என்ன நடந்தது?

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், இலங்கை அதி சிறப்பான களத்தடுப்பைக் (Fielding) கொண்ட அணியாக ….

ஜிம்பாப்வேடேவிட் ஹூக்டன்

இந்திய அணியுடன் 1992 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணி தமது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியிருந்தது. இப்போட்டியில் ஜிம்பாப்வே அணியினை மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான டேவிட் ஹூக்டன் வழிநடாத்தியிருந்தார்.  

பலமிக்க இந்திய அணியுடன் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டி ஜிம்பாப்வே அணியினரின் ஆதிக்கத்தோடு சமநிலையில் முடிந்தது.

ஹூக்டன் இந்த டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி டெஸ்ட் அணியொன்றின் முதல் போட்டியில் சதம் கடந்த முதல் அணித்தலைவராகவும் வரலாற்றில் இடம்பிடித்திருந்தார்.

ஜிம்பாப்வேயின் கன்னி டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 162 ஓட்டங்களினை பெற்றுக் கொண்டதற்காக ஹூக்டனுக்கு போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.  

பங்களாதேஷ்நைமுர் ரஹ்மான்

2000 ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் அந்தஸ்தினைப் பெற்றுக் கொண்ட பங்களாதேஷ் அணி, ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் போன்று இந்திய அணியுடன் தமது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியிருந்தது.

இப்போட்டியில் பங்களாதேஷ் அணியினை சகலதுறை வீரர்களில் ஒருவரான நயிமுர் ரஹ்மான் வழிநடாத்தியிருந்தார். பங்களாதேஷ் அணி குறித்த டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வி ஒன்றினை பதிவு செய்திருந்த போதிலும், வலதுகை சுழல் வீரரான நயிமுர் ரஹ்மானினால் குறித்த போட்டியில் ஆறு விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டு சிறப்பான பந்து வீச்சு பதிவு செய்யப்பட்டிருந்தது.

எனினும், நயீமுர் ரஹ்மான் பங்களாதேஷ் அணியின் முதல் டெஸ்ட் போட்டியின் பின்னர் பெரிதாக சோபிக்காத காரணத்தினால், எட்டு டெஸ்ட் போட்டிகளுடன் தனது கிரிக்கெட் வாழ்வினை முடித்துக் கொண்டார்.

அயர்லாந்து – வில்லியம் போடர்பீல்ட்

அயர்லாந்து அணி கடந்த வாரத்திலேயே டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நாடுகளில் ஒன்றாக மாறியிருந்தது. அயர்லாந்து தமது கன்னி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியினை எதிர் கொண்டிருந்தது.  

இப்போட்டியில் அயர்லாந்து அணியினை அனுபவமிக்க வில்லியம் போடர்பீல்ட் தலைமை தாங்கியிருந்தார்.

©Getty Images
வில்லியம் போடர்பீல்ட்

அதிக திறமை கொண்ட வேகப்பந்து வீச்சாளர்களை தம்மிடம் கொண்டிருந்த பாகிஸ்தான் அணி அயர்லாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியினைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இந்த இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து அயர்லாந்து அணியினைக் காப்பாற்ற அணித்தலைவரின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டமும் ஒரு காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க