ஆட்டநிர்ணய குற்றச்சாட்டை மறுக்கும் ரவீன் விக்ரமரட்ன

152

கிரிக்கெட்டுடன் தொடர்புடைய அதிகாரியொருவருக்கு தனியாக ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட முடியாது எனவும், களுத்துறை மற்றும் பாணந்துறை விளையாட்டுக் கழகம் என்பவற்றுக்கு இடையில் நடைபெற்ற போட்டியின் போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் ஆட்டநிர்ணயத்துக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உதவிச் செயலாளர் ரவீன் விக்ரமரட்ண தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்ளூர் கிரிக்கெட்டில் ஆட்ட நிர்ணய சதி?

இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் (SLC)…….

கடந்த வருடம் ஜனவரி மாதம் 23ஆம் திகதி மக்கொன சர்ரே மைதானத்தில் களுத்துறை பௌதீக கலாசார கழகம் மற்றும் பாணந்துறை விளையாட்டுக் கழகம் என்பவற்றுக்கு இடையிலான பிரீமியர் லீக் பி குழுவிற்கான கிரிக்கெட் போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதாக சர்ச்சை எழும்பியது.

அதேபோன்று, இந்த ஆட்டநிர்ணயத்துக்கும், இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய உதவிச் செயலாளர் ரவீன் விக்ரமரட்ணவுக்கும் தொடர்பு இருப்பதாக அண்மைக்காலமாக ஊடகங்கள் வாயிலாக பரவலாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், எதிர்வரும் 31ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக சபைத் தேர்தலில் மீண்டும் உதவிச் செயலாளர் பதவிக்கு போட்டியிடவுள்ள ரவீன் விக்ரமரட்ண, சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு குறித்த விடயம் தொடர்பில் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நேற்று (22) இடம்பெற்ற குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

”இவ்விரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற போட்டியின் போது ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் கடந்த சில மாதங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதன் காரணமாக எனது தரப்பிலான நிலைப்பாட்டை ஊடகங்களுக்கு தெரிவிக்க முடியாமல் போனது.

மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்

இலங்கை அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும்…….

எனினும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று குழு உறுப்பினராக செயற்பட்டு வருகின்ற எனக்கு எதிராக ஒரு சில ஊடகங்களினால் தொடர்ந்து தவறான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை எனக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட்டில் உயர் பதவியொன்றில் இருக்கின்ற ஒரு நபராக நான் ஊடகங்களுடன் சிறந்த நட்பை பேணி வருகிறேன். எனினும், குறிப்பாக ஒரு சில ஊடகங்கள் எனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

நான் பாணந்துறை பகுதியைச் சேர்ந்தவன். சுமார் 10 வருடங்களாக பாணந்துறை கிரிக்கெட் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றி உள்ளேன். 2015இல் குறித்த பதவியிலிருந்து விலகிய பிறகு அந்த கழகத்துக்கும் எனக்கும் தற்போது எந்தவொரு தொடர்பும் இல்லை. எனவே, இவ்வாறான சம்பவமொன்று நடந்திருந்தால், அதில் இரண்டு பக்கங்கள் இருக்கும். அதனை சரியாக ஆராய்ந்து உண்மையை தெரியப்படுத்த வேண்டும். அதைவிடுத்து தொடர்ச்சியாக என் மீது சேறு பூசுவதை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் உள்ளது. எனவே இந்த விடயம் தொடர்பில் நிச்சயம் நான் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பேன், இதுதொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவை தெளிவுபடுத்வதற்கு எதிர்பார்த்துள்ளேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, பாணந்துறை கிரிக்கெட் கழக வீரர்களை நீங்கள் சந்திக்கவில்லையா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, போட்டிக்கு முன்னரா அல்லது பின்னரா என ரவீன் விக்ரமரட்ண கேள்வியெழுப்பினார்.  அதற்கு ஊடகவியலாளர் போட்டியின் பின்னர் என பதிலளித்தார்.

இதற்கு மீண்டும் பதிலளித்த அவர், ஆட்டநிர்ணய சதியொன்று மேற்கொள்ளப்படுவதாக இருந்தால் அது போட்டிக்கு முன்னர்தான் இடம்பெறும். எனவே, பாணந்துறை கழகத்தின் வீரர்களை நான் போட்டியின் முன்னர்தான் சந்திருக்க வேண்டும் என ரவீன் விக்ரமரட்ண சுட்டிக்காட்டினார்.

இதேநேரம், ”நான் பாணந்துறை கிரிக்கெட் கழகத்தின் ஆயுட்கால உறுப்பினராவேன். எமது கழகத்தின் தலைவரின் வேண்டுகோளுக்கு அமைய நான் பாணந்துறை வீரர்களை போட்டியின் பிறகு சந்தித்து ஆறுதல் கூறினேன். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் எனவும் கூறி அவர்களை நான் தையரிப்படுத்தினேன்” எனவும் ரவீன் தெரிவித்தார்.

அத்துடன், ஆட்டநிர்ணயத்தியில் ஈடுபட்டதாக தனக்கு தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், தான் நிரபராதி என்றும், இப்போட்டியில் எந்தவொரு ஆட்டநிர்ணயமும் இடம்பெறவில்லை எனவும் அவர் உறுதியாகச் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இப்போட்டியின் மூன்றாம் நாளன்று இடம்பெற்றதாக கூறப்படும் விளையாட்டுக்கு முரணான சில நிகழ்வுகள் தொடர்பாக இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் முறைப்பாடு செய்தது.

இதனையடுத்து சுமார் 7 மாதங்களாக இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் நிறைவேற்றுக் குழுவினால் கடந்த செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய குறித்த இரு கழகங்ளையும் சேர்ந்த 27 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு போட்டித் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க