சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஏராளமான தலைவர்கள் வெற்றி பெறுவதை கிரிக்கெட் உலகம் நிறைய கண்டிருக்கிறது. கிரிக்கெட்டில் மட்டுமல்ல உலகின் எந்தவொரு விளையாட்டிலும் தலைவர் பொறுப்பு என்பது எளிதான விடயமல்ல.  

எந்தவொரு விளையாட்டிலும் ஒரு அணியை வழிநடத்துவது ஒரு வீரர் எதிர்கொள்ள வேண்டிய மிகக் கடினமான சவால்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு நாட்டின் அபிலாஷைகளை உங்கள் தோள்களில் சுமக்கும் பொறுப்பை இது நிச்சயமாக சேர்க்கிறது

இலங்கையில் ஐ.சி.சி. இன் பாரிய தொடர்கள் நடைபெறுமா?

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), 2023ஆம்…

ஒரு அணி வெற்றி பெற்றால் அதற்கு அனைவரையும் பாராட்டியும், தோல்வியைத் தழுவினால் அதன் முழுப் பொறுப்பையும் தலைவர் தான் பொறுப்பேற்க வேண்டும்

மேலும் எப்படிப்பட்ட சூழலிலும் அணியை ஒற்றுமையாக வைத்திருப்பதை ஒரு தலைவர் உறுதி செய்ய வேண்டும். இது போன்ற பல சிக்கலான சவால்களை கொண்டது தான் தலைவர் பொறுப்பு.

எனவே, கிரிக்கெட்டில் இவ்வாறு கடினமான சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஆனால் .சி.சியினால் நடத்தப்படுகின்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெல்லாத தலைவர்களை இங்கு பார்க்கலாம்.

  • கிரேம் ஸ்மித்

தென்னாபிரிக்க அணியின் தலைவராக கடந்த 2003 முதல் 2011 வரை கிரேம் ஸ்மித் செயல்பட்டார். இந்த காலப்பகுதியில் தென்னாபிரிக்க அணியை 150 ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தி 92 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார் ஸ்மித்

இவரின் தலைமையில் தென்னாபிரிக்க அணி பல .சி.சி தொடர்களில் பங்கேற்றது. அதில் 2007, 2011 ஆம் ஆண்டுகளில் ஒருநாள் உலகக் கிண்ணம், 2007, 2009, 2010 ஆம் ஆண்டுகளில் டி20 உலகக் கிண்ணம் மற்றும் 2006, 2009 சம்பியன்ஸ் கிண்ணம் என பங்கேற்றாலும் ஒரு தொடரில் கூட வென்றது கிடையாது

இதன்காரணமாக, கிரிக்கெட் உலகில் தென்னாப்பிரிக்க அணிக்கு சோக்கர்ஸ் என முத்திரை குத்தப்பட்டது.

  • மஹேல ஜயவர்தன
(AP Photo/Andres Leighton)

மஹேல ஜயவர்தன விளையாடிய காலகட்டத்தில் அப்போதைய தனித்துவமிக்க தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். இவரது தலைமையில் இலங்கை அணி 129 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 71 போட்டிகளில் வென்றுள்ளது. வெற்றி சதவீதம் 59.09 ஆக காணப்பட்டது.

இவரது தலைமையில் 2007 இல் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி முன்னேறியது.

எனினும், டக்வர்த் லூவிஸ் முறைப்படி துரதிஷ்டவசமாக அவுஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது. மேலும் டி-20 உலகக் கிண்ணம், சம்பியன்ஸ் கிண்ணம் என மஹேல ஜயவர்தன தலைமையில் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஏமாற்றமே மிஞ்சின

எனினும், சிறந்த வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, இலங்கை அணிக்காக பெரும் பங்காற்றிய வரலாறுகள் அவருக்கு உண்டு.

உலகிற்கு மறைந்திருந்த சனத் மற்றும் டில்ஷான்

பந்துவீச்சாளர்களாக அறிமுகமாகி பின்னர்….

  • இன்சமாம் உல் ஹக்

பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றி தலைவர்களில் ஒருவர் இன்சமாம் உல் ஹக். இவரின் தலைமையில் பாகிஸ்தான் அணி 90 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 52 இல் வெற்றி பெற்றுள்ளது

வெறும் 34 போட்டிகளில் மட்டுமே பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்துள்ளது.நான்கு போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை

கடந்த 2007இல் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்சமாம் தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. எனினும், குறித்த காலத்தில் காணப்பட்ட பாகிஸ்தான் அணி மீது பலருக்கும் உலகக் கிண்ணம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

  • ஏபி.டி. வில்லியர்ஸ்

ஸ்மித் போன்றே ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாபிரிக்க அணியின் வெற்றி தலைவர்களில் ஏபி. டி. வில்லியர்ஸுக்கும் முக்கிய இடம் உண்டு

இவரின் தலைமையில் தென்னாபிரிக்க அணி 103 போட்டிகளில் பங்கேற்று 59இல் வெற்றி பெற்றுள்ளது. இவரின் வெற்றி சராசரி 60.10 ஆக உள்ளது

ஆனால், இப்படிப்பட்ட சிறப்பான வெற்றி சதவீதம் இருந்த போதும் .சி.சியினால் நடத்தப்படுகின்ற தொடர்களில் தென்னாபிரிக்கா அணி இவரின் தலைமையில் சாதிக்கவில்லை

இறுதியாக டி வில்லியர்ஸ் தலைமையில் தென்னாபிரிக்க அணி கடந்த 2015இல் நடைபெற்ற உலகக் கிண்ண தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.

  • விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைவராக விராட் கோஹ்லி செயல்பட்டு வருகின்றார். இவரின் தலைமையில் இந்திய அணி இதுவரை 89 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 62 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது

இவரின் வெற்றி சதவீதம் 71.82 ஆக உள்ளது. கோஹ்லி தலைமையில் 2017இல் சம்பியன்ஸ் கிண்ணம் மற்றும் 2019 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர்களில் இந்தி அணி களமிறங்கியது

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்தது. 2019இல் உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் வீழ்ந்தது

இவ்வாறு சிறப்பாக செயற்பட்டும் அணிக்காக முக்கிய கிண்ணங்களை வென்று கொடுக்காத அணித் தலைவர்களை உங்களுக்கு தெரியும் என்றால் அவர்கள் குறித்து கீழே பதிவிடுங்கள். 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<