இலங்கையில் ஐ.சி.சி. இன் பாரிய தொடர்கள் நடைபெறுமா?

57
AFP

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), 2023ஆம் ஆண்டு தொடக்கம் 2031ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஐ.சி.சி. இன் இரண்டு பாரிய கிரிக்கெட் தொடர்களை இலங்கையில் நடாத்த விருப்பம் காட்டியிருப்பதாக தெரியவருகின்றது.  

இலங்கை கிரிக்கெட் பயிற்சிகளுக்கான ‘Coach Education App’

கொரோனா வைரஸ் காரணமாக வீடுகளுக்குள் முடங்கிப்போயுள்ள கிரிக்கெட்…

2023ஆம் ஆண்டு தொடக்கம் 2031ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கிரிக்கெட் உலகக் கிண்ணம் உள்ளிட்ட ஐ.சி.சி. இன் 28 பாரிய கிரிக்கெட் தொடர்கள் நடாத்த தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. 

இந்த பாரிய கிரிக்கெட் தொடர்களை (குறிப்பிட்ட நாடுகளில்) நடாத்த ஐ.சி.சி. இலங்கையுடன் சேர்த்து அதன் அங்கத்துவ நாடுகள் 17 இடம் விருப்பம் கோரியிருந்த நிலையிலேயே, இலங்கை கிரிக்கெட் சபை இரண்டு தொடர்களை இலங்கையில் நடாத்த விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகின்றது. 

”நாம் (ஐ.சி.சி. இன்) இரண்டு (பாரிய) தொடர்களை நடாத்த விருப்பம் காட்டியிருக்கின்றோம். ஆனால், அந்தரங்கத்தன்மையை பேணுவதனால் அந்த கிரிக்கெட் தொடர்கள் எதுவென்று வெளிப்படுத்தவில்லை.” என இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது குறிப்பிட்டிருந்தார்.  

கடந்த 2012ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தின் பின்னர் ஐ.சி.சி. இன் பாரிய கிரிக்கெட் தொடர்கள் எதுவும் இலங்கையில் இதுவரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னர் 2011, 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர்களின் போட்டிகள் சில இலங்கையில் நடைபெற்றிருந்தன. இந்த தொடர்கள் தவிர, 2002ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணத் தொடர், 2000, 2006ஆம் ஆண்டுகளுக்கான இளையோர் உலகக் கிண்ணத் தொடர் என்பனவும் இலங்கையில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இதேநேரம், 2023 தொடக்கம் 2031 வரையிலான எட்டு வருட காலப்பகுதியில் இடம்பெறவிருக்கும் 28 கிரிக்கெட் தொடர்களையும் நடாத்த இலங்கை அடங்கலாக ஐ.சி.சி. இன் அங்கத்துவ நாடுகள் 17 உம் 93 விருப்பக் கோரிக்கைகளை சமர்ப்பித்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. கோரிக்கை சமர்ப்பித்த நாடுகளில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை முக்கியமானவையாகக் காணப்படுகின்றன.  

இந்தியாவின் செய்திச்சேவையான ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமது அறிக்கையில் ஐ.சி.சி. 2023 தொடக்கம் 2031 வரையிலான காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு உலகக் கிண்ணங்களை நடாத்த திட்டமிட்டிருப்பதாகவும் 2024, 2028ஆம் ஆண்டுகளில் 10 அணிகள் மாத்திரம் பங்குபெறும் T20 சம்பியன்ஷிப் தொடர் ஒன்றினை நடாத்தவிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது. 

பரோடா ரஞ்சி கிண்ண அணியின் பயிற்சியாளராகிறார் டேவ் வட்மோர்

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இலங்கை அணிக்கு 1996 உலகக்…

ஐ.சி.சி. ஆனது 2023 தொடக்கம் 2031 வரையிலான காலப்பகுதியில் நடாத்தவுள்ள உலகக் கிண்ணம் போன்ற பாரிய கிரிக்கெட் தொடர்களில் ஆடவர் அணிகளுக்காக நடாத்தவுள்ள தொடர்களின் எண்ணிக்கை 8 ஆக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, மகளிர் அணிகளுக்கும் அதே எண்ணிக்கையிலான தொடர்களை நடாத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. இதுதவிர, ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர், இளையோர் உலகக் கிண்ணத் தொடர் என்பனவும் 2023 தொடக்கம் 2031 வரையிலான காலப்பகுதியில் நடைபெறவிருக்கின்றன. 

ஐ.சி.சி. இன் பாரிய தொடர்கள் ஒருபுறமிருக்க 2021ஆம் ஆண்டு மகளிர் உலகக் கிண்ணத்தின் மேலதிக மூன்று நாடுகளினையும் தெரிவு செய்யும் தகுதிகாண் தொடர் இந்த ஆண்டு ஜூலை 7ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதி வரை இலங்கையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.   

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் உள்ளடங்கலாக மொத்தமாக 10 நாடுகளின் மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்குபெறும் இந்த தொடர் தற்போது உலகில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக நடைபெறுமா? இல்லையா? என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.  

செய்தி மூலம் – Daily News  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<