டெஸ்ட் தரவரிசையில் பிரபாத் ஜயசூரிய அசுர முன்னேற்றம்

130

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்காக வெளியிடப்பட்டிருக்கும் ஐ.சி.சி. (ICC) இன் புதிய பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூரிய முதல் 10 இடங்களுக்குள் முதல் தடவையாக முன்னேறியிருக்கின்றார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் சௌத் ஷகீல் புதிய சாதனை!

கடந்த ஆண்டு (2022) அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் மூலம் இலங்கை அணிக்காக டெஸ்ட் அறிமுகம் பெற்ற பிரபாத் ஜயசூரிய இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருப்பதோடு மொத்தமாக 57 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருக்கின்றார்.

கடைசியாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்த போதும் பிரபாத் ஜயசூரிய 7 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிரபாத் ஜயசூரிய வெளிப்படுத்திய தொடர்ச்சியான சிறந்த ஆட்டம் அவர் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வருவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

அந்தவகையில் பிரபாத் ஜயசூரிய பாகிஸ்தான் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுக்களை கைப்பற்றியதன் காரணமாக டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 7 இடங்கள் முன்னேறி 781 புள்ளிகளுடன் தற்போது 7ஆவது இடத்தினைப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர சுழல்வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் 879 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுவதோடு, இரண்டாம் மூன்றாம் இடங்களில் முறையே தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ககிஸோ றாபாடாவும், அவுஸ்திரேலியாவினைச் சேர்ந்த பெட் கம்மின்ஸ் உம் காணப்படுகின்றனர்.

அதேநேரம் நான்காவது இடத்தில் இங்கிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சனும் இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் பங்கேற்று வரும் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளரான சஹீன் அப்ரிடி டெஸ்ட் போட்டிகளில் ஐந்தாம் இடத்திலும் காணப்படுகின்றார். ஆறாவது இடத்தில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா காணப்படுகின்றார்.

இதேவேளை டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் எட்டாம், ஒன்பதாவது இடங்களில் முறையே இங்கிலாந்தின் ஸ்டுவார்ட் புரோட் மற்றும்  ஒல்லி ரொபின்சன் ஆகியோரும் 10ஆவது இடத்தில் அவுஸ்திரேலியாவின் சுழல் நட்சத்திரம் நதன் லயனும் காணப்படுகின்றனர்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<