இலங்கை ரக்பி அணி மீது முழு நம்பிக்கை வைத்துள்ள பிஜி பயிற்றுவிப்பாளர்

179
Fereti Verebula

இலங்கை ரக்பி வாரியமானது (SLR), இம்மாதம் (மே) 14ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபெறவுள்ள இலங்கை அணிக்கு பயிற்றுவிப்பாளராக பிஜி நாட்டின் பெரெட்டி வெரபியூலாவை நியமித்துள்ளது.

தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறும் பாசில் மரிஜா

அணிக்கு 7 பேர் கொண்ட மற்றும் அணிக்கு 15 பேர் கொண்ட இலங்கை ரக்பி அணியின்..

பபுவா நியூ கினியா எழுவர் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளரான வெரபியூலா, இலங்கை ராணுவப்படை ரக்பி கழக அணியின் பயிற்றுவிப்பாளராக கடந்த வருடத்தில் செயற்பட்டிருந்தார். இவரின் மேற்பார்வையின் கீழ் இருந்த படை வீரர்கள் டயலொக் ரக்பி லீக்கின் கடந்த இரண்டு பருவகாலங்களிலும் அதி சிறப்பான ஆட்டத்தினை வெளிக்காண்பித்திருந்தனர்.

இந்நிலையில் ThePapare.com உடன் கலந்துரையாடிய வெரபியூலா அவர்கள்,

குறைவான பயிற்சிகளுடன் நமக்குத் தரப்பட்டிருக்கும் ஒரு வேலையை செய்து முடிப்பது எப்போதும் கடினமாகவே இருக்கும். கழக அணிகளிடையிலான ரக்பி தொடரின் பருவகாலம் முடிந்து நீண்டதொரு இடைவேளை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், மூன்று வாரங்களில் அனைத்து விடயங்களையும் ஒன்றிணைத்து மீண்டும் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதுவரை அந்த ஒன்றிணைக்கும் செயற்பாடுகள் சரியான நிலையிலேயே அமைந்துள்ளனஎனக் கூறியிருந்தார்.

மேலும், தனுஷ்க ரன்ஞன், றிச்சர்ட் தர்மபால, ஜேசன் திஸ்ஸாநாயக்க, சுஹிரு அந்தோனி மற்றும் முன்னாள் அணித் தலைவர் பாஸில் மரிஜா போன்ற எழுவர் அணி வீரர்களின் உள்ளடக்கம் குறித்து அவரிடம் விசாரித்த பொழுது,

அனுபவம் மிக்க வீரர்களை அணியில் உள்ளடக்கியிருப்பது எப்போதும் நல்லதொரு விடயமாகவே காணப்படும். அதோடு, தனது இறுதி சுற்றுப் பயணத்தில் பங்கேற்கும் பாஸில் மரிஜா இருப்பது அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும். எனவே, இத்தொடர் மூலம் அனுபவமிக்க அவரிடம் இருந்து அனைத்து வீரர்களும் பலவற்றை கற்றுக்கொள்ள முடியும்.

மேலும், ரஞ்சன், றிச்சர்ட், ஜேசன் ஆகியோரும் எழுவர் குழாத்தில் பங்கெடுப்பது அணிக்கு மேலும் வலுவினை தரக்கூடிய ஒரு விடயம். இலங்கை ரக்பி ஒன்றியமானது வீரர்களை இரு வகையான ஆட்டங்களுக்கும் பிரித்து விளையாட வைக்க முயற்சிப்பதும் நல்லதொரு திட்டம்என அவர் மேலும் மேற்குறிப்பிட்டார்.

இலங்கை அணியை பயிற்றுவிக்கவுள்ள பிஜி நாட்டின் பெரேடி வெரெபுலா

இரு வருடங்களுக்கு முன்பு பபுவா நியூகினியா தேசிய அணியின் பயிற்றுவிப்பாளராக..

இதற்கு மேலதிகமாக,  இலங்கையை சேர்ந்த ஒருவர் ரக்பி எழுவர் அணிக்கு தலைமைப் பயிற்றுவிப்பாளராக வருவதற்கு தான் விரும்புவதாகவும் அவருக்கு தன்னால் முடிந்த உதவியை வழங்க நாடியிருப்பதாகவும் தனது அபிப்பிராயத்தினை வெரபியூலா வெளியிட்டிருந்தார். அதோடு, தற்போது இலங்கை ரக்பி வாரியத்தின் இயக்குனராக இருக்கும் இந்தி மரிக்கார், உதவி பயிற்றுவிப்பாளர் ராஜீவ் பெரேரா மற்றும் பயிற்சியாளர் நிக் குரோபே ஆகியோரின் செயற்பாடுகள் குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்திருந்தார்.sdss

மேலிருக்கும் படத்தில் உள்ளபடி இலங்கையானது, மலேசிய அணியுடன் 42-17 என படுதோல்வியடைந்ததை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மலேசிய அணியே மீண்டும் டிவிஷன் – I தொடரில் ஆதிக்கம் செலுத்தும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மலேசிய அணியிலும் திறமை வாய்ந்த பிஜி நாட்டு வீரர்கள் அடங்கியுள்ளனர். அவர்களது நுணுக்கங்களும் உடல்வாகுமே எமக்கு கவனத்திற் கொள்ள வேண்டிய  விடயமாக இருக்கின்றது.

மலேசிய அணியானது எமது தடுப்பினை சிதைக்கக் கூடிய சில திறமைமிக்க பிஜி வீரர்களை கொண்டுள்ளனர். எமது தடுப்பு வகைகளை நாம் முன்னேற்றுவதற்கும் தற்போது நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். எனினும், எமது உல்லத்தில் இப்போட்டிகள் அனைத்தும் பதினைந்து வீரர்கள் எதிர் பதினைந்து வீரர்கள் போட்டியாகவே கருதப்படுகின்றன. அதேபோன்று தொடரில் பங்கேற்கும் ஏனைய அணிகளான பிலிப்பைன்ஸ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றினையும் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. அவர்களை வீழ்த்துவதும் எமக்கு சவாலாகவே இருக்கும்

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இமாத் ரியால், ஐக்கிய அரபு இராச்சியத்தில் காணப்படும் சிறந்த வீரர்களில் ஒருவராவர். அழகிய பாதவேலைகள் மூலம் இமாத் கடந்த வருட டிவிஷன் – II ஆட்டங்களில் சிறப்பான ட்ரைகளை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக திறமை கொண்ட அவர் இம்மாதம் 17ஆம் திகதி இடம்பெற இருக்கும் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளேட் கிண்ணத்தில் தர்மராஜ மற்றும் அந்தோனியார் கல்லூரிகள் அசத்தல்

மலையகத்தை சார்ந்த இரு அணிகளாகிய தர்மராஜ மற்றும் கிங்ஸ்வூட் கல்லூரி..

இதேவேளையில், ரீஸா முபாரக் போன்ற சிறந்த உதை வீரர்கள் இக்குழாத்தில் சில காரணங்களுக்காக பயிற்சியில் ஈடுபடவில்லை. எனினும், தற்போது இருக்கும் வீரர்களின் திறமை குறித்து வெரபியூலா திருப்தியுடனேயே இருக்கின்றார் என்பதை அவதானிக்க முடியுமாக இருக்கின்றது.

கண்டி விளையாட்டுக் கழகத்தின் ரொஷான் வீரரத்ன இத்தொடரில் இலங்கையை தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருட அணிக்குழாம் அறிவிப்பில், ரொஷான் இலங்கை அணியைத் தலைமை தாங்கும் காலம் வரும் என இலங்கை ரக்பி வாரிய தலைவர் அசங்க செனவிரத்ன குறிப்பிட்டிருந்தமை நிறைவுகூறத்தக்கது.

இலங்கை ரக்பி வாரியமானது, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (5) தொடரில் விளையாடவுள்ள அணிக் குழாத்தின் வீரர்கள் பட்டியலையும் அணித் தலைவரையும் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.