இலங்கை அணியை பயிற்றுவிக்கவுள்ள பிஜி நாட்டின் பெரேடி வெரெபுலா

235
Fereti-Header

பிஜி ரக்பி அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளரும் கடந்த பருவகால ராணுவப்படை ரக்பி அணியின் பயிற்றுவிப்பாளருமான பெரேடி வெரெபுலா இலங்கை தேசிய அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வரலாற்றில் முதல் முறையாக பொதுநலவாய கனிஷ்ட போட்டிகளில் இலங்கை ரக்பி அணி

இரு வருடங்களுக்கு முன்பு பபுவா நியூகினியா தேசிய அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியுள்ள வெரெபுலா, நியூஸிலாந்து ப்ரிமியர்ஷிப் மற்றும் பிஜி பெண்கள் தேசிய அணிகளையும் பயிற்றுவித்துள்ளார்.

2015இல் இலங்கையில் காலடி எடுத்து வைத்த வெரெபுலா, டயலொக் ரக்பி லீக் போட்டித் தொடரில் ராணுவப்படையை பயிற்றுவிக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். இரண்டு பருவகாலங்கள் பயிற்றுவித்த வெரெபுலா, ராணுவப்படையின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய பங்கு வகித்தவராவார். இதன் காரணமாக ராணுவப்படை அணி இன்று பல நட்சத்திர அணிகளுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்கும் அணியாகக் காணப்படுகிறது.

பெரேடி வெரெபுலாவிற்கு முன்பு இலங்கை தேசிய அணியை, கண்டி விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஜொஹான் டெய்லர் பயிற்றுவித்து வந்தார். கடந்த 2015இல் பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறப்பாக செயற்பட்டதன் காரணமாக 2016ஆம் ஆண்டும் தொடர்ந்து பயிற்றுவிப்பாளராக நிலைத்த ஜொஹான் டெய்லர், கடந்த வருடம் மலேசியாவில் கண்ட படுதோல்வியின் பின் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கிங்ஸ்வூட் மற்றும் லும்பினி கல்லூரிகள் B பிரிவில் முன்னிலையில்

இலங்கை தேசிய ரக்பி அணி எதிர்வரும் மே மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசிய ‘டிவிஷன் I’ போட்டித் தொடரில் பங்குபெறவுள்ளது.  ஆசியாவில் முதல்தர போட்டித் தொடரில் பங்குபெற வேண்டுமாயின் இலங்கை அணி பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு ராட்சியம் மற்றும் மலேசியா அணிகளை வீழ்த்தியாக வேண்டும். மலேசியாவில், பல வெளிநாட்டு அணிகள் இலங்கை அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

வெரெபுலாவிற்குக் கீழான போட்டித் தொடருக்கான பயிற்சிகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ள இலங்கை அணி இன்னும் மூன்று வாரங்களில் மலேசியாவிற்கு பயணமாகும்.