கேன் வில்லியம்சனுக்கு கொவிட்-19 தொற்று

New Zealand tour of England 2022

115

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முதல் நாள் (09) எடுக்கப்பட்ட கொவிட்-19 பரிசோதனையில், கேன் வில்லியம்ஸனுக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மூன்றாவது T20I போட்டியிலிருந்தும் நீக்கப்படும் ஸ்டார்க்!

எனவே கேன் வில்லியம்சன் எதிர்வரும் 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று (10) ஆரம்பிக்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து வில்லியம்சன் நீக்கப்பட்டுள்ளார்.

கேன் வில்லியம்சன் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஹமிஸ் ரதபோர்ட் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

“நாம் செய்த தவறை ஏற்றுக்கொள்கின்றோம்” – வனிந்து ஹஸரங்க

அதேநேரம், அணித்தலைவர் கேன் வில்லியம்சனின் இழப்பு காரணமாக, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியின் தலைவராக டொம் லேத்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்திருந்த நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றைய தினம் நோட்டிங்கம் டிரெண்ட்-பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<