உலகக் கிண்ண கால்பந்து தொடரில் வெற்றிநடை போடத் தயாராகும் பயிற்றுவிப்பாளர்கள்

993

2018 உலகக் கிண்ண கால்பந்தில் ஜொலிக்கவுள்ள பயிற்றுவிப்பாளர்கள்

கால்பந்து போட்டிகளை பொருத்தவரையில் திறமையான வீரர்கள் அணியில் இருந்தாலும் வெற்றிக்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. எல்லா வெற்றிகரமான அணிகளுக்கும் தொழில்சார் பயிற்றுவிப்பாளர்கள் தேவை.

நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய அணிக்கும் இதே நிலைமைதான். உத்திகளை உருவாக்கும் திறன், எதிரணியின் பலவீனங்களை கண்டறிவது, தந்திரோபாயங்களைத் திட்டமிடுதல், வீரர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை உரிய இடத்தில் களமிறக்குவது, மாறும் சூழ்நிலைக்கு தகுந்தபடி விரைவாக செயற்படுவது உள்ளிட்ட விடயங்களில் ஒரு அணியின் பயிற்றுவிப்பாளர் தான் மிகவும் முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்.

ரஷ்யாவின் கோல் மழையுடன் உலகக் கிண்ண போட்டி ஆரம்பம்

போட்டியை நடாத்தும் ரஷ்யா, பெரும் கோல் மழையுடன் …..

நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய பிரேசில் அணி சரியான களவியூகங்கள், திட்டமிடுதல் இல்லாமல் 1982 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் எதிர்பாராத தோல்வியைத் தழுவியது. ஸிகோ, ஸ்கோரெட்ஸ், பால்கோ உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய பிரேசில் அணி அரையிறுதிக்குத் தகுதிபெறத் தவறியிருந்தது. இத்தாலியிடம் தோல்வியடைந்ததால் பிரேசில் அணி அந்தத் தொடரிலிருந்து வெளியேறியது. பிரேசில் அணி வீரர்களால் எதிரணியை நிர்மூலமாக்கும் வகையிலான திட்டங்களை மேற்கொள்ள முடியாமல் போனதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த தோல்வியினை அடுத்து பிரேசில் அணியின் பயிற்றுவிப்பாளர் டெலி சான்டனா தனது பதவியையும் இராஜினாமாச் செய்தார்.

எனவே, கால்பந்து விளையாட்டை பொருத்தமட்டில் அவ்வணியின் வெற்றிக்கு பயிற்றுவிப்பாளரின் பாகம் முக்கிய இடத்தை வகிக்கின்றன என்பதை பிரேசில் அணியின் தோல்வி எடுத்துக்காட்டியது.

அதுமாத்திரமின்றி உலகக் கிண்ண வரலாற்றில் இதுவரை வெளிநாட்டு பயிற்றுவிப்பாளரைக் கொண்ட அணி உலகக் கிண்ணத் தொடரை வென்றது கிடையாது. எனவே, ரஷ்யாவில் ஆரம்பமாகியுள்ள 21 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்கும் 32 அணிகளில் 20 அணிகள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை பயிற்றுவிப்பாளராக நியமித்துள்ளது. அதிலும் ஒரு சில சிறிய அணிகளே வெளிநாட்டைச் சேர்ந்தவர்களைப் பயிற்றுவிப்பாளராக கொண்டுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.

இதற்கு காரணம் உள்நாட்டைச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர் வீரர்களுடன் சிறப்பான தொடர்பாடலை ஏற்படுத்தி, அவர்களை வழிநடத்துவதற்கு இலகுவாக இருக்கும். என்பதால் பெரும்பாலான நாடுகள் இவ்வாறு தத்தமது நாடுகளில் உள்ள அனுபவமிக்க முன்னாள் வீரர்களை பயிற்றுவிப்பாளர்களாக நியமித்து வருகின்றது.

உலகக் கிண்ண வெற்றி அணியை முன்கூட்டியே கணிக்கும் காது கேட்காத பூனை

உலகக் கிண்ண கால்பந்து தொடர் இன்று ரஷ்யாவில்….

எனவே இம்முறை பிபா உலகக் கிண்ணத்தில் பிராகாசிக்கலாம் என எதிர்பார்க்கின்ற ஒருசில முக்கிய அணிகளது பயிற்றுவிப்பாளர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்போம்.

டைட் (57 வயது), பிரேசில்

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் நொக் அவுட் சுற்றுக்கு பிரேசில் அணி தகுதி பெறவில்லை. இதனையடுத்து முன்னாள் பயிற்றுவிப்பாளரான துங்கா (Dunga) தனது பதவியை இராஜினாமாச் செய்தார். இதனையடுத்து அவ்வணியின் புதிய பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரரான டைட் நியமிக்கப்பட்டார். இதையடுத்து நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் பிரேசில் அணி தொடர்ச்சியாக ஏழு வெற்றிகளைப் பதிவு செய்திருந்ததுடன், இம்முறை உலகக் கிண்ணத்திற்கு முதலாவது அணியாகவும் தகுதிபெற்றது. எனவே இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற பிரபல பிரேசில் அணிக்கு டைட்டின் பயிற்றுவிப்பு நல்ல பெறுபேறைப் பெற்றுக்கொடுக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

பெர்னாண்டோ சான்டோஸ் (63 வயது), போர்த்துக்கல்

சான்டோஸின் பயிற்றுவிப்பின் கீழ் போர்த்துக்கல் அணி கடந்த 2016 ஆம் ஆண்டில் யூரோ கிண்ணத்தை முதல் தடவையாகக் கைப்பற்றியது. எனினும், அந்த அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் 30 வயதை தாண்டியிருந்தாலும், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடுவது மிகப் பெரிய வரமாக அமையவுள்ளது.


ஜோர்ஜ் சம்போலி (58 வயது), ஆர்ஜென்டீனா

கழக மற்றும் சர்வதேச அளவில் ஜோர்ஜ் சம்போலி தனது திறமையை ஏற்கனவே பல தடவைகள் நிரூபித்துள்ளார். சிலி அணிக்கு முதல் கோபா அமெரிக்க கிண்ணத்தை வென்று கொடுக்க காரணமாக இருந்த சம்போலி, 2016ஆம் ஆண்டில் செவில்லா அணியுடன் இணைந்து கொண்டார். தொடர்ந்து 2017ஆம் ஆண்டு முதல் ஆர்ஜென்டீனா அணியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். அதிலும் ஆர்ஜென்டீனா அணிக்கு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட போதே பலதரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. எனவே ஆர்ஜென்டீனா அணிக்காக இந்த முறையேனும் உலகக் கிண்ணத்தை வென்று கொடுக்க வேண்டும் என்ற தீரா வேட்டையுடன் அவர் உள்ளார்.


ஜோச்சிம் லோவ் (58 வயது), ஜேர்மனி

ஜேர்மன் அணியின் முன்னாள் வீரரான ஜோச்சிம் லோவ், 2004 ஆம் ஆண்டு முதல் அந்த அணியின் பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்டு வருகின்றார். 2014, 2016 ஆகிய உலகக் கிண்ணங்கள் மற்றும் கடந்த வருடம் நடைபெற்ற பிபாவின் கண்பிடரேஷன் கால்பந்து கிண்ணம் (FIFA Confederations Cup) ஆகியவற்றை ஜேர்மனி அணிக்கு பெற்றுக்கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்நிலையில், கடந்த முறை உலகக் கிண்ணத்தை வென்ற அணியை விட பலம் வாய்ந்த அணியொன்றை உருவாக்கியுள்ளார். 56 வருடங்களுக்குப் பிறகு உலகக் கிண்ணத்தை தக்கவைத்து வரலாற்று சாதனை படைக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்.

2026 பிஃபா உலகக் கிண்ணம் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில்

எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்கான பிஃபா உலகக்….


ரொபர்டோ மார்ட்டின்ஸ் (44 வயது), பெல்ஜியம்

கழக மட்டத்தில் சிறப்பாக செயற்பட்டுள்ள மார்ட்டின்ஸ் 2013ஆம் ஆண்டில் விகான் அணிக்காக எப்.ஏ கிண்ணத்தை வென்று கொடுத்துள்ளார். 2016 முதல் அந்த அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட அவர், அவ்வணியின் வீரர்களை கையாளும் விதங்களும், கள வியூகங்களும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள இந்த தருணத்தில் உலகக் கிண்ணத்தில் பெல்ஜியம் சாதிக்குமா என்பது கேள்விக்குறிதான். எனினும் இம்முறை, உலகக் கிண்ணத்திற்கான பயிற்சிப் போட்டியில் கொஸ்டாரிகா மற்றும் எகிப்து அணிகளுடான போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்திருந்த அந்த அணி, போர்த்துக்கல் அணியுடனான போட்டி கோல்கள் இன்றி சமநிலையில் நிறைவுக்கு வந்தது. எனவே இம்முறை உலகக் கிண்ணத்தில் இறுதி சுற்றுவரை முன்னேறக்கூடிய அணிகளில் ஒன்றாக பெல்ஜியம் அணி, தமது இருப்பிடத்தை உறுதி செய்துள்ளது எனலாம்.


கரேத் சௌத்கேட் (47 வயது), இங்கிலாந்து

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும், இங்கிலாந்து 21 வயதுக்கு உட்பட்ட அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளருமான கரேத் சௌத்கேட், 2016 இல் இங்கிலாந்து தேசிய கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் கரேத் சௌத்கேட் இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்க விரும்பவில்லை.

எனினும், வலுக்கட்டாயமாக பயிற்றுவிப்பாளர் பதவியில் அமர்த்தப்பட்டார். எனினும், பல ஆச்சரியங்களுக்கு மத்தியில் அவர் தன்னை தகுதிவாய்ந்தவராக நிரூபித்துள்ளார். எனவே இம்முறை உலகக் கிண்ணத்தில் இளம் வீரர்களை உள்ளடக்கிய இங்கிலாந்து அணியை அவர் களமிறக்கியுள்ளார்.


டிடியர் டெஸ்சாம்ப்ஸ் (49 வயது), பிரான்ஸ்

1998 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை பிரான்ஸுக்கு வென்று கொடுத்த டெஸ்சாம்ப்ஸ் பயிற்றுவிப்பாளராக தனது ஆளுமை திறனில் மிளிர்ந்து வருகின்றார். ஆனால் இம்முறை உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ளபிரான்ஸ் அணி தொடர்பில் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

எனினும், இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான தமது பயிற்சிப் போட்டிகளில் நிரூபித்துக் காட்டியுள்ள அந்த அணி, செக் குடியரசு, இத்தாலி ஆகிய அணிகளை வீழ்த்தியிருந்ததுடன், அமெரிக்காவுடனான போட்டி 1 – 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவுக்குவந்தது.

 காணொளிகளைப் பார்வையிட  


ஜோஸ் பெக்கர்மன் (68 வயது), கொலம்பியா

கடந்த 6 வருடங்களாக கொலம்பிய அணியின் பயிற்றுவிப்பாளராக ஜோஸ் பெக்கர்மன் செயற்பட்டு வருகின்றார். 2014ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்து தொடரில் கொலம்பிய அணியை காலிறுதி வரை முன்னேறச் செய்திருந்தார். ஆனால் இம்முறை தகுதிச் சுற்றில் சில ஆட்டங்களில் இவரது கள வியூகங்கள் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஹெக்டர் கூப்பர் (62 வயது), எகிப்து

ஹெக்டர் கூப்பர் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் வெலன்சியா அணியை இருமுறை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் அவ்விரண்டு போட்டிகளிலும் அவ்வணி வெற்றி பெறவில்லை.

ஏழு முறை ஆபிரிக்க சம்பியன் பட்டம் வென்ற எகிப்து அணி, சுமார் 28 வருடங்களுக்குப் பிறகு இம்முறை உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடருக்கு தகுதிபெற்றுள்ளதால் அவ்வணியின் வெற்றிக்கு நட்சத்திர வீரர் முகமது சலாஹ்வை ஹெக்டர் கூப்பர் பெரிதும் நம்பியுள்ளார்.


ஹெய்மிர் ஹால்க்ரிம்ஸன் (50 வயது), ஐஸ்லாந்து

தொழில் முறை நிர்வாகியான ஹால்க்ரிம்ஸன் ஒரு பல் மருத்துவராவார். 3,30,000 மக்களைக் கொண்ட ஐஸ்லாந்தை இம்முறை உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறச் செய்வதில் மிகப் பெரிய பங்காற்றியவர். எனவே அவரது ஆர்வமும், தரமான பயிற்சியும் உலகக் கிண்ணத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

உலகக் கிண்ணத்தில் எதிர்பார்க்கப்படும் 10 வீரர்கள்

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (FIFA) மிகப் …


ஹெர்னன் தரியோ கோமஸ் (62 வயது), பனாமா

பனாமா அணியை முதல் முறையாக உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறச் செய்துள்ளதால் தரியோ கோமஸ் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். கொலம்பிய அணியின் முன்னாள் வீரரும், பயிற்றுவிப்பாளருமான தரியோவுக்கு பனாமா அணி இம்முறை உலகக் கிண்ணத்தில் எந்த விதத்தில் விளையாடினாலும் அது போனஸ்தான்.


அலிவு சிஸ்சே (42 வயது), செனகல்

2002 ஆம் ஆண்டு முதல் முறையாக செனகல் அணி உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு தகுதி பெற்றிருந்த போது அலிவு சிஸ்சேதான் அந்த அணியின் தலைவராக செயற்பட்டார். அப்போது நடப்புச் சம்பியனான பிரான்ஸ் அணியை செனகல் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்திருந்தது.

தற்போது 16 வருடங்களுக்குப் பிறகு 2 ஆவது முறையாக செனகல் அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்றுள்ள நிலையில், அந்த அணியின் பயிற்றுவிப்பாளராக அலிவு சிஸ்சே செயற்படவுள்ளார்.

 >>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<