உலகக் கிண்ண வெற்றி அணியை முன்கூட்டியே கணிக்கும் காது கேட்காத பூனை

413

உலகக் கிண்ண கால்பந்து தொடர் இன்று ரஷ்யாவில் ஆரம்பமாக உள்ளது. உலகக் கிண்ண கால்பந்து போட்டி முடிவுகளை நேரில் காண்பதில் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ஆவல் இருக்கிறதோ?, அதுபோல் உலகக் கிண்ணப் போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே வெளியாகும் கணிப்புகளை அறிவதிலும் அதிக ஆர்வம் இருப்பது உண்டு.

2026 பிஃபா உலகக் கிண்ணம் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில்

எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்கான பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை …

ஒவ்வொரு உலகக் கிண்ண கால்பந்து தொடரின்போதும் குறிப்பிட்ட போட்டியில் எந்த அணி வெல்லும்? சம்பியன் பட்டம் யாருக்கு? என்பதை கணிப்பதற்காக பல வித்தியாசமான ஜோசியங்கள் நடத்தப்படுவது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு உலகக் கிண்ணப் போட்டிகளின் போதும் விலங்குகளைக் கொண்டு சம்பியன் பட்டம் வெல்லும் அணி எது என முன்கூட்டியே கணித்து கூறப்பட்டு வருகின்றது.

2010ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் ஜெர்மனியில் உள்ள கடல் வாழ் அருங்காட்சியத்தில் இருந்தபால்என்ற ஆக்டோபஸ், போட்டி முடிவுகளை துல்லியமாகக் கணித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தண்ணீர் தொட்டிக்குள் இரண்டு சிறிய ஜாடியில் உணவுகளை போட்டு அவற்றின் மீது அன்றைய போட்டியில் மோதும் அணிகளின் கொடி வைக்கப்பட்டு இருக்கும். நீந்தி வரும் ஆக்டோபஸ் எந்த ஜாடியில் உள்ள உணவை உட்கொள்கிறதோ?, அதன் மீதுள்ள கொடிக்குரிய அணி வெற்றி பெறும் என்று கணிக்கப்படும். அதுபோல் ஜெர்மனி அணி மோதிய அனைத்து ஆட்டங்களையும் துல்லியமாக கணித்த ஆக்டோபஸ், ஸ்பெயின் அணி கோப்பையை வெல்லும் என்று சுட்டிக்காட்டிய ஆருடமும் அப்படியே பலித்தது.

அதனைத்தொடர்ந்து 2014 பிரேசிலில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் போது ஐக்கிய அரபு இராட்சியத்தில் ஷாகின் என்ற ஒட்டகம் எந்த அணி வெல்லும் என குறி சொல்லியது. அதற்கு முன் கால்பந்து ஒன்றையும், இரு அணிகளின் கொடிகளையும் வைத்து அது தனது பல்லால் எந்த அணி வெல்லும் என கணித்துக் கூறியிருந்தது.

இந்நிலையில், ரஷ்யாவில் இன்று (14) ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளின் போது எந்த அணி வெற்றி பெறும் என்பதை இந்த முறை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள எக்கிலிஸ் (Achilles Cat) என்ற காது கேட்காத பூனை கணிக்கவுள்ளது. அந்த பூனைக்கு அனா கசட்கினா என்பவர் பயிற்சி அளித்துள்ளார்.  

இரண்டு பாத்திரங்களில் உணவை வைத்து அருகே போட்டியில் மோதும் அணிகளின் கொடிகளும் வைக்கப்படும். எக்கிலிஸ் எந்த பக்கத்தில் உணவை சாப்பிடுகிறதோ அந்த அணி வெற்றி பெறும் என அறிவிக்க உள்ளனர். இந்த பூனையின் ஜோசியம் எந்த அளவுக்கு பலிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்நிலையில், இன்று இரவு நடைபெறவுள்ள முதல் லீக் ஆட்டத்தில் ரஷ்யாசவுதி அரேபிய அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டியில் ரஷ்ய அணி வெல்லும் என எக்கிலிஸ் கணித்துள்ளது. எக்கிலிஸ் பூனையின் கணிப்பு எப்படி இருக்க போகிறது என்று போட்டி போகப் போக தான் தெரியும்.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…