ஐசிசியின் சிறந்த வீரராக மகுடம் சூடிய பெட் கம்மின்ஸ்!

ICC player of the Year 2023

58

ஐசிசியின் கடந்த ஆண்டுக்கான சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரராக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெட் கம்மின்ஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் உலகக்கிண்ணத்தை வென்றுக்கொடுத்ததையடுத்து, ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப், T20 உலகக்கிண்ணம் மற்றும் ஆஷஷ் தொடர் போன்றவற்றை இவரின் தலைமைத்துவத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றிக்கொண்டது.

>> பாகிஸ்தான் சுபர் லீக்கில் இருந்து விலகும் ரஷீட் கான்

பெட் கம்மின்ஸ் ஆண்டின் சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டதுடன், சிறந்த ஒருநாள் அணி வீரராக இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லி, சிறந்த டெஸ்ட் அணியின் வீரராக அவுஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா மற்றும் T20I வீரராக இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம் சிறந்த வளர்ந்துவரும் வீரருக்கான விருதினை நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா வெற்றிக்கொண்டதுடன், அங்கத்துவ நாடுகளின் சிறந்த வீரராக நெதர்லாந்து அணியின் பாஸ் டி லீட் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்தநிலையில் ஆண்டின் சிறந்த மகளிர் வீராங்கனையாக இங்கிலாந்தின் நட் ஸ்கேவியர் ப்ரண்ட், சிறந்த ஒருநாள் வீராங்கனையாக இலங்கை அணியின் சமரி அதபத்து, சிறந்த T20I வீராங்கனையாக ஹேலி மெதிவ்ஸ், அங்கத்துவ நாடுகளின் சிறந்த வீராங்கனையாக கென்யாவின் குயீண்டர் ஏபெல், சிறந்த வளர்ந்துவரும் வீராங்கனையாக பங்களாதேஷின் மரூபா அக்தெர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஐசியின் 2023ம் ஆண்டுக்கான விருதுகள்

  • சிறந்த வீரர் – பெட் கம்மின்ஸ்
  • சிறந்த ஒருநாள் வீரர் – விராட் கோஹ்லி
  • சிறந்த T20I வீரர் – சூர்யகுமார் யாதவ்
  • சிறந்த டெஸ்ட் வீரர் – உஸ்மான் கவாஜா
  • சிறந்த வளர்ந்து வரும் வீரர் – ரச்சின் ரவீந்திரா
  • சிறந்த அங்கத்துவ நாட்டு வீரர் – பாஸ் டி லீட்
  • சிறந்த வீராங்கனை – நட் ஸ்கேவியர் ப்ரண்ட்
  • சிறந்த T20I வீராங்கனை – ஹேலி மெதிவ்ஸ்
  • சிறந்த ஒருநாள் வீராங்கனை! – சமரி அதபத்து
  • சிறந்த வளர்ந்து வரும் வீராங்கனை – மரூபா அக்தெர்
  • சிறந்த அங்கத்துவ நாட்டு வீராங்கனை – குயீண்டர் ஏபெல்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<