ஒழுக்க விதிகளை மீறிய பங்களாதேஷ், நியூசிலாந்து வீரர்களுக்கு ஐ.சி.சி அபராதம்

3

ஒழுக்க விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர் மஹ்மதுல்லாஹ் மற்றும் நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் ஆகியோருக்கு .சி.சி யினால் குறைந்தபட்ச தண்டணை வழங்கப்பட்டள்ளது.   

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது நியூசிலாந்துக்கு இருதரப்பு கிரிக்கெட் சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொண்டு மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடி வருகின்றது.

கப்டிலின் சதத்துடன் நியூசிலாந்து அணிக்கு இலகு வெற்றி

நியூசிலாந்துக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ்…

சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் தற்சமயம் நடைபெற்று வருகின்றது. தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியானது நேற்று முன்தினம் (16) க்றைசேர்ச்சில் நடைபெற்றிருந்தது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளினால் அபார வெற்றி பெற்றிருந்தது.

பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரரான மஹ்மதுல்லாஹ் குறித்த போட்டியில் வெறும் 8 பந்துவீச்சுக்களுக்கு மாத்திரம் முகங்கொடுத்து 7 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அணியின் விக்கெட்டுகள் குறைந்த ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டதனால் கோபத்துக்குள்ளான மஹ்மதுல்லாஹ் மைதானத்தை விட்டு வெளியேறும் போது அவரது துடுப்பு மட்டையால் மைதானத்தின் எல்லை கோட்டில் ஓங்கி அடித்திருந்தார்.

டர்பனில் இலங்கை அணியும் குசல் பெரேராவும் பதிவு செய்த சாதனைகள்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக…

மஹ்மதுல்லாஹ்வின் நடத்தை தொடர்பில் போட்டி மத்தியஸ்தராக செயற்பட்ட ஸ்டீவ் பெர்னார்ட்டிடம் புகார் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக அவருக்கு ஐ.சி.சி இன் 2.2 ஆம் இலக்க ஒழுக்க விதிமுறை மீறலின் அடிப்படையில் போட்டி ஊதியத்தில் இருந்து 10 சதவீதம் அபராத தொகையாக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர் குறித்த தவறை முதல் முறையாக செய்ததன் அடிப்படையில் குறைந்த பட்சமாக ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அதே போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளரான ட்ரெண்ட் போல்ட் பந்துவீசும் போது களத்தில் இழிவான வார்த்தைகளை பிரயோகித்தமை தொடர்பில் மத்தியஸ்தராக செயற்பட்ட ஸ்டீவ் பெர்னார்ட்டிடம் புகார் செய்யப்பட்டிருந்தது.

குறித்த நடவடிக்கை உறுதிப்படுத்தப்பட்டதன் காரணமாக ட்ரெண்ட் போல்ட்டிற்கும் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள கிறிஸ் கெயில்

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெயில்…

ஐ.சி.சி இன் 2.3 ஆம் இலக்க ஒழுக்க விதிமுறை மீறலின் அடிப்படையில் போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராத தொகையாக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவருக்கும் குறித்த நிகழ்வு முதல் முறையாக நடைபெற்றிருந்ததன் காரணமாக குறைந்த பட்ச தண்டணையாக ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு வழங்கக்கூடிய அதிகபட்ச தண்டனையான போட்டி ஊதியத்திலிருந்து 50 சதவீதமும், இரண்டு தகுதி இழப்பீட்டு புள்ளிகளுமாகும்.

இருவர் மீதான குறித்த குற்றச்சாட்டானது போட்டியின் கள நடுவர்களான மரைஸ் எரஸ்மஸ், ஷோன் ஹைக் மற்றும் மூன்றாம் நடுவர் சுந்தரம் ரவி மற்றும் மேலதிக நடுவரான வைன் நைட்ஸ் ஆகியோரினால் சுட்டிக்காட்டப்பட்டு, போட்டியின் மத்தியஸ்தரான ஸ்டீவ் பெர்னார்ட் மூலமாக ஐ.சி.சி இனால் இவ்வாறு அபராதமும், தகுதி இழப்பீட்டு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றத்ததை இவர்கள் இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளதன் காரணமாக எந்தவிதமான மேலதிக விசாரணைகளுக்கும் இவர்கள் ஆஜராக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளை மறுதினம் (20) டுனிடினில் நடைபெறவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க