நீதிமன்றத்தில் இன்று ஆஜராகும் திமுத் கருணாரத்ன

357

இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் சமிக்ஞை விளக்கினை புறக்கணித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக இன்று (01) நீதிமன்றத்தில் ஆஜாராகவுள்ளார்.

நேற்று (31) அதிகாலை 5.15 மணியளவில் திமுத் கருணாரத்ன செலுத்திய ரேன்ஜ் ரோவர் ரக வாகனம் பொரளை வேர்ட் ப்ளேஸ் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில், முச்சக்கரவண்டியின் சாரதி சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

பொலிஸ் கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் சோபிக்கும் அஜந்த மெண்டிஸ்

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் …..

இது தொடர்பில் இடம்பெற்ற விசாரணையில் திமுத் கருணாரத்ன, மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமை தெரியவந்தது. அத்துடன், சமிக்ஞை விளக்கில் சிவப்பு நிறம் காட்டப்பட்டிருந்த போதும், அதனை கடந்து சென்றமையும் விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில், மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் சமிக்ஞை விளக்கினை புறக்கணித்தமை போன்ற குற்றங்களுக்காக கைதுசெய்யபட்ட இவர், பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

எவ்வாறாயினும், இந்த குற்றங்கள் தொடர்பில் திமுத் கருணாரத்னவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்குக்காக இன்றைய தினம் திமுத் கருணாரத்ன நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, திமுத் கருணாரத்னவின் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை அவதானம் செலுத்தியுள்ளதுடன், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் தலைவராக திமுத் கருணாரத்ன செயற்பட்டிருந்தார். குறித்த தொடரில், இலங்கை அணி 2-0 என்ற வரலாற்று வெற்றியை பெற்றிருந்தது. அத்துடன், உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்னவை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<