யூரோ கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் வேல்ஸ் அணியை 2-1 என கோல் கணக்கில் இங்கிலாந்து வீழ்த்தியது.

யூரோ கிண்ண  கால்பந்து சாம்பயின்ஷிப் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஒரு லீக் தொடரில் வேல்ஸ்இங்கிலாந்து அணிகள் மோதின.

தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் வேல்ஸ் அணிக்குப்ரீ ஹிக்வாய்ப்புக் கிடைத்தது. இதை சரியாகப் பயன்படுத்திய அந்த அணியின் தலைவர் கரேத் பேலே அருமையாக கோல் அடித்தார். இதனால் வேல்ஸ் அணி முதல் பாதி நேரத்தில் 1-0 என முன்னலை பெற்றது.

2ஆவது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 56ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து ஒரு கோலைப் பதிவு செய்தது. அந்த அணியின் ஜேமி வார்டில் அந்த கோலை அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலை பெற்றது. அதன்பின் இரு அணிகளாலும் கோல் அடிக்கமுடியவில்லை.

90 நிமிடங்கள் முடிந்து கூடுதலாக 4 நிமிடங்கள் (காயத்தால் தடைபடும் நேரம்) கொடுக்கப்பட்டது. இந்த நான்கு நிமிடத்தில் கோல் அடிக்க வாய்ப்பில்லை, அதனால் போட்டி சமநிலையில்  முடியும் வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட நிலையில் 92ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் டேனியல் ஸ்டுர்ரிட்ஜ் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றது. கடைசி 2 நிமிடத்தில் வேல்ஸ் அணித் தலைவர்  பேலே கோல் அடிக்க முயன்றார். அவரது முயற்சிக்கு பலன் கிடைக்காததால் இங்கிலாந்து 2-1 என வெற்றிபெற்றது.

இங்கிலாந்து, வேல்ஸ் அணிகள்பி” குழுவில் இடம்பிடித்துள்ளன. இதுவரை இந்தப் பிரிவில் உள்ள அணிகள் தலா 2 லீக் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து ஒரு வெற்றி, ஒரு சமநிலையுடன் 4 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. வேல்ஸ் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று 2ஆவது இடத்திலும், ஸ்லோவாகியா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று 3ஆவது இடத்தில் உள்ளது. ரஷியா ஒரு தோல்வி, ஒரு சமநிலையுடன் 1 புள்ளி பெற்றுக் கடைசி இடத்தில் உள்ளது.

20ஆம் திகதி இந்த நான்கு அணிகளும் தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. இங்கிலாந்து ஸ்லோவாகியாவையும், வேல்ஸ் ரஷியாவையும் எதிர்கொள்கிறது. இங்கிலாந்து, சமநிலை அல்லது வெற்றிபெற்றால் காலிறுதிக்கு முன்னேறிவிடும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்