புதிய பயிற்சி மற்றும் கல்வி நிகழ்ச்சி திட்டத்தை அறிமுகப்படுத்தும் ICC

130

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) புதிய பயிற்சி மற்றும் கல்வி (Training and Education) நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை அறிமுகம் செய்திருக்கின்றது.

>>லங்கா T10 தொடர் குறித்து வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

கிரிக்கெட் நடுவர் முதல்தரப் பயிற்சி நெறி (ICC Umpire Level 1 Course) என அழைக்கப்படும் குறித்த நிகழ்ச்சித்திட்டத்ததை ICC அதன் உறுப்புரிமையினை  பெற்றிருக்கும் நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டினை முதன்மையாக கொண்டு செயற்படும் நபர்களுக்கு பிரயோசனம் தரும் வகையில் வடிவமைத்திருக்கின்றது.

அதாவது இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் வாயிலாக கிரிக்கெட் பயிற்சியாளர்களாகவும் நடுவர்களாகவும் மாற விரும்பும் நபர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ICC இன் உறுப்புரிமையினைப் பெற்றுள்ள நாடுகள் தங்களது பிரத்தியேக தேவைகளுக்கு ஏற்ப உபயோகம் செய்யவும் முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை புதிய நிகழ்ச்சித்திட்டத்தை கற்பிப்பதற்காக உலகெங்கிலும் சுமார் 75 இற்கு மேற்பட்ட வளவாளர்கள் (Tutors) காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டிருப்பதோடு, அவர்கள் டிஜிட்டல் முறையிலும் நேரடி வகுப்பு முறையிலும் தேவை உடையோருக்கு பயிற்சி வழங்க முடியும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<