முதன்முறையாக கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெற்ற Red Bull Outriggd

Red Bull Outriggd 2021

70
Red Bull Outriggd 2021

Red Bull இன் ஏற்பாட்டில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு Outriggd படகோட்டுதல் போட்டி, கடந்த 6ம் திகதி கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நடைபெற்றது.

இந்த தனித்துவமிக்க படகோட்டுதல் போட்டியில் பல அணிகள் பங்குபற்றியதுடன், இந்தியப் பெருங்கடலில் இந்தப் போட்டிகள் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.

>> ஸ்கொட்லாந்தை வீழ்த்தி அரையிறுதியில் ஆஸி.யுடன் மோதவுள்ள பாகிஸ்தான்

Red Bull Outriggd உள்நாட்டு விளையாட்டை உலகிற்கு கொண்டு வருவதன் மூலம், அதனை எமது தேசத்தை ஊக்குவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை விளையாட்டு சமூகத்தை ஒன்றிணைப்பதும் இலங்கையர்களிடையே தனித்துவமான சாகச விளையாட்டுகளுக்கான விருப்பத்தை தூண்டுவதும் இந்த போட்டியின் முக்கிய நோக்கமாகும்.

நகரம் முதல் கிராமங்கள் வரை, இந்த தனித்துவமான விளையாட்டு நிகழ்வு விளையாட்டு ஆர்வலர்கள், ரோயிங் கழகங்கள் மற்றும் மீன்பிடி சமூகங்கள் மற்றும் மாணவர்களை அதிகமாக ஈர்த்துள்ளது.

Red Bull Outriggd ஒரு போட்டி மட்டுமல்லாமல், ஒவ்வொரு பங்கேற்பாளர் மற்றும் பார்வையாளர்களுக்கு பல்வேறு செயல்பாடுகளுடன் கூடிய நிகழ்வு மற்றும் கொண்டாட்டமாகும்.

போட்டியின் அனைத்து நிகழ்வுகளும் இம்மாதம் 6ம் திகதி கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெற்றது. இது இலங்கையின் கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெற்ற முதல் நீர் விளையாட்டு நிகழ்வாகவும் பதிவாகியிருந்தது. Red Bull Outriggd போட்டியில் நாடளாவிய ரீதியில் இருந்து 70இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

எந்தவொரு விளையாட்டையும் சுவாரஸ்யமாக்குவதற்கு Red Bull எப்போதும் ஒரு சிறிய திருப்பத்தையும் புதுமையையும் தரும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. எனவே, இந்த போட்டித்தொடரில் பங்குபற்றியவர்களுக்கு Red Bull மறக்கமுடியாத அனுபவத்தை தந்திருக்கிறது.

போட்டியில் ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் உட்பட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன. Red Bull Outriggd போட்டியின் முதல் கட்டம் 2019 இல் தியவன்னா வளாகத்தில் நடைபெற்றதுடன், கொவிட்-19 தொற்று காரணமாக 2020ம் ஆண்டு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி முடிவுகள் பின்வருமாறு:

மகளிர் இறுதிப்போட்டி
முதல் இடம் களனி 03 (அணி 3) தருஷி திவ்மினி குரே
நிமேஷிகா சுதர்ஷினி பெரேரா
2வது இடம் படு ஓயா 02 (அணி 8) மேரி எக்னஸ் பெர்னாண்டோ
ஷமாலி நதீரா
3வது இடம் களனி 03 (அணி 2) ஷானியா செவ்வந்தி
சருனி பிரசங்கிகா
கலப்பு இறுதிப்போட்டி
முதல் இடம் களனி 09 (அணி 6) தருஷி திவ்மினி குரே
WPS பிரியர்தஸன
2வது இடம் படு ஓயா 04 (அணி 4) சிசிர குமார
ஷமாலி நதீரா
3வது இடம் CSD 06 (அணி 8) சஞ்சிவீ பிரியசங்க
GH நந்தனி
ஆண்கள் இறுதிப்போட்டி
முதல் இடம் பலலு வாவி 02 (அணி 25) மொஹமட் ரஷான்
அஜீஸ் கான்
2வது இடம் பலலு வாவி 09 (அணி 1) NM ஜில்ஷாட்
RM ரபீ
3வது இடம் களனி 10 (அணி 9) இரோஸ் உதயங்கர பெரேரா
ஷாலிந்த மதுஷந்த

>> மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க <<