T-20 போட்டிகளுக்காக தேசிய அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ள கிறிஸ் கெயில்

1473

கிங்ஸ்டன் நகரில் உள்ள சபீனா பார்க் கிரிக்கெட் அரங்கில் ஜுலை 9 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான T-20 போட்டிக்காக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரரா கிறிஸ் கெயில் மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளார்.

ஜமைக்காவைச் சேர்ந்த கெயில், இறுதியாக 2016 ஏப்ரலிலேயே தேசிய அணிக்காக விளையாடி இருந்தார். அந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தை வீழ்த்தி T-20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

ஜிம்பாப்வேயை வீழ்த்தி உலக கிண்ணத்திற்கு நேரடியாக தகுதிபெறுமா இலங்கை?

ஒரு நாள் போட்டிகளில் ஜிம்பாப்வே அணியுடன் தமது சொந்த மண்ணில்…

குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டியில் கெயில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவராவார். அதேபோன்று, இந்த ஆண்டு ஏப்ரலில் T-20 கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களைக் குவித்த முதல் வீரராக அவர் புதிய சாதனையையும் படைத்திருந்தார்.

கிறிஸ் கெயில் T-20 அணிக்கு திரும்புவதை நாம் வரவேற்கிறோம்என்று குறிப்பிட்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் கேட்னி பரவுன்,

இந்த வகை கிரிக்கெட்டில் அவர் சிறப்பான வீரர் என்பதோடு எமது அணியை முன்னிலைக்கு கொண்டுவர உதவுவார். தரமான முன்னணி அணியான இந்தியாவுக்கு எதிராக தனது சொந்த மைதானத்தில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தேர்வு செய்யப்பட்டிருக்கும் அணி துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் அனுபவம் கொண்ட ஒரு சரிசமமான அணியாக உள்ளது. இளம் வீரர்களுக்கு தமது திறமையை காட்டவும், தமது சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தும் இளம் வீரர்களுக்கு, அனுபவ வீரர்கள் உதவவும் இந்தப் போட்டி சந்தர்ப்பமாக உள்ளது எனத் தெரிவித்தார்.  

கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் அணியில் அங்கம் வகித்த சிம்மொன்ஸ் இந்த அணியில் இடம்பெறவில்லை. எனினும், இதற்கு முன்னரான போட்டிகளில் அணியை தலைமை தாங்கிய சார்லொஸ் பிரத்வைட் இப் போட்டியிலும் அணியை தலைமை தாங்கி வழிநடாத்தவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கு விளையாட்டு அமைச்சரின் பணிப்புரை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூரிய..

இந்தியாவை எதிர்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியில் அனுபவம் மிக்க வீரர்களான கிரொன் போல்லார்ட், மார்லொன் சாமுவேல்ஸ், சுனில் நாரைன் மற்றும் ஜெரொம் டெய்லர் ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.

மேற்கிந்திய தீவுகள் அணிக் குழாம்

சார்லொஸ் பிரத்வைட் (அணித் தலைவர்), சாமுவெல் பத்ரீ, ரொன்ஸ்போர்ட் பீடன், கிறிஸ் கெயில், எவின் லெவிஸ், ஜேசன் முகம்மட், சுனில் நாரைன், கிரொன் போல்லார்ட், ரோவ்மன் பவல், மார்லன் சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர், சாட்விக் வால்டன் (விக்கெட் காப்பாளர்), கெஸ்ட்ரிக் வில்லியம்ஸ்

Source: Cricbuzz.com