2026 மகளிர் T20i உலகக் கிண்ண முதல் போட்டியில் ஆடும் இலங்கை

76
England to face Sri Lanka

2026ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கும் மகளிர் T20i உலகக் கிண்ணத் தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

>>முஷ்பிகுர் – லிடன் அபாரம்; இரண்டாம் நாளில் இலங்கைக்கு ஆறுதல்<<

2026ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணத் தொடர் குறிப்பிட்ட ஆண்டின் ஜூன் மாதம் 12ஆம் திகதி தொடக்கம் ஜூலை 05ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றது.

மொத்தம் 12 நாடுகளின் மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கெடுக்கும் இந்த T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் தொடரினை நடாத்தும் இங்கிலாந்து, இலங்கை மகளிர் வீராங்கனைகளை எதிர்கொள்கின்றது.

இந்த தொடரின் குழு 1 இல் இரண்டு தகுதிகாண் அணிகளுடன் இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் காணப்பட, குழு 2 இலும் இரண்டு தகுதிகாண் அணிகளுடன் இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் 33 போட்டிகள் 7 வெவ்வேறு மைதானங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதோடு தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இரண்டும் முறையே ஜூன் 30 மற்றும் ஜூலை 02ஆம் திகதிகளில் லண்டன் ஓவல் அரங்கில் நடைபெறவிருக்கின்றன.

இதேநேரம் எதிர்பார்ப்புமிக்க இந்திய பாகிஸ்தான் மோதல் ஜூன் 14ஆம் திகதி எட்ஜ்பாஸ்டனில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. தொடரின் இறுதிப் போட்டி ஜூலை 5ஆம் திகதி கிரிக்கெட்டின் தாயகமான லண்டன் லோர்ட்ஸ் அரங்கில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

போட்டி அட்டவணை

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<