பாகிஸ்தான் மண்ணில் 14 வருடங்களின் பின் தென்னாரிக்கா அணி

154
Image Courtesy - PCB Twitter

இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று T20i கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்கா அணி நேற்று (16) பாகிஸ்தானை சென்றடைந்துள்ளது. 

பாகிஸ்தான் மண்ணில் கடைசியாக 2007இல் தென்னாபிரிக்கா அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது

>> ஒன்பது புதுமுக வீரர்களை அறிமுகம் செய்யும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

எனினும், 2009இல் லாகூரில் இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது, பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சில வீரர்கள் காயம் அடைந்தனர். அதில் இருந்து பெரும்பாலான அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்தது.

இந்த நிலையில், 2019இல் இலங்கை, பங்களாதேஷ் அணிகள் பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றன. தற்போது 14 ஆண்டுகளுக்குப் பின் 2 டெஸ்ட், 3 T20i போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க குயிண்டன் டி கொக் தலைமையிலான தொன்னாபிரிக்கா அணி நேற்று காலை கராச்சி விமான நிலையத்தை வந்தடைந்தனர். 

நாட்டுத் தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் அதி உயர் பாதுகாப்புடன் தென்னாபிரிக்கா அணி வீரர்கள் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

21 பேர் கொண்ட தென்னாபிரிக்கா குழாத்தினர், பாகிஸ்தான் புறப்படுவதற்கு முன்பாக இரண்டு முறை நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது

>> Video – USA கிரிக்கெட் அணியில் இணைவாரா Sehan Jeyasuriya?

பாகிஸ்தானுக்கு வந்த பின்னர் அவர்களுக்கு PCR பரிசோதனை நடத்தப்படும் எனவும், குழாத்தில் உள்ள அனைவரும், முதல் சுற்று பரிசோதனைப் பெறுபேறு வெளியிடப்படும் வரை தனிமைப்படுத்தப்பட்டிருப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொரோனா பரிசோதனை நடைமுறை முடிந்ததும் தென்னாபிரிக்கா அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.

இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் ஜனவரி 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையிலும், 2ஆவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் பெப்ரவரி 4ஆம் திகதியில் இருந்து 8ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளது

>> தெற்காசிய விளையாட்டு விழா குறித்து பாகிஸ்தானில் சிறப்புக் கூட்டம்

இதனையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட T20i கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 11ஆம், 13ஆம், 14ஆம் திகதிகளில் லாகூரில் நடைபெறவுள்ளது

தென்னாபிரிக்கா அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியத்தில் 2010 மற்றும் 2013இல் சுற்றுப்பயணம் செய்து விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<