Home Tamil கமிந்து அபார சதத்தோடு முன்னிலை பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி

கமிந்து அபார சதத்தோடு முன்னிலை பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி

New Zealand tour of Sri Lanka 2024

52

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநிறைவில்இலங்கை கிரிக்கெட் அணி கமிந்து மெண்டிஸின் அபார சதத்தோடு வலுப்பெற்றுள்ளது 

>>இலகு வெற்றிகளை பதிவு செய்த கோல், கொழும்பு அணிகள்<<

காலி சர்வதேச மைதானத்தில் இன்று (18) ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் தனன்ஞய டி சில்வா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காக பெற்றார் 

இப்போட்டிக்கான இலங்கை அணி வேகப்பந்துவீச்சாளரான மிலான் ரத்நாயக்கவிற்கு ஓய்வு வழங்கியிருக்க, சுழல்பந்து சகலதுறைவீரரான ரமேஷ் மெண்டிஸை இணைத்திருந்தது 

இலங்கை XI  

திமுத் கருணாரட்ன, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஞய டி சில்வா (தலைவர்), கமிந்து மெண்டிஸ், ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, லஹிரு குமார, அசித பெர்னாண்டோ 

 

நியூசிலாந்து XI  

டொம் லேதம், டெவோன் கொன்வேய், கேன் வில்லியம்சன், ரச்சின் ரவிந்தீரா, டேரைல் மிச்சல், டொம் பிளன்டல், கிளன் பிலிப்ஸ், மிச்சல் சான்ட்னர், டிம் சௌத்தி (தலைவர்), அஜாஸ் பட்டேல், வில்லியம் ஒரூக்கே 

பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணிக்காக பெதும் நிஸ்ஸங்கதிமுத் கருணாரட்ன ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களம் வந்தனர். இந்த வீரர்களில் திமுத் கருணாரட்ன 02 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும், பெதும் நிஸ்ஸங்க அதிரடியாக ஓட்டங்களை குவிக்க முனைந்தார். எனினும் நிஸ்ஸங்கவின் விக்கெட் அவர் 25 பந்துகளுக்கு 27 ஓட்டங்கள் பெற்ற நிலையில் பறிபோனது 

நிஸ்ஸங்கவின் பின்னர் இலங்கை அணிக்காக வந்த வீரர்களில் தினேஷ் சந்திமால் 30 ஓட்டங்கள் பெற, அஞ்செலோ மெதிவ்ஸ் 36 ஓட்டங்கள் எடுத்தார். இந்த இரண்டு வீரர்களினதும் விக்கெட்டுக்களின் பின்னர் கமிந்து மெண்டிஸ் இலங்கை அணியினை பலப்படுத்த முயன்ற போதும் இலங்கை ஒரு கட்டத்தில் 178 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டது 

எனினும் இந்த தருணத்தில் களம் வந்த குசல் மெண்டிஸ் அரைச்சதம் விளாச, மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய கமிந்து மெண்டிஸ் உம் சதம் பெற்றார். இரண்டு வீரர்களும் இலங்கை அணியின் ஆறாம் விக்கெட்டுக்காக 103 ஓட்டங்களையும் இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். இந்த வீரர்களது ஆட்டத்தோடு இலங்கை அணி பலமான நிலைக்குச் சென்றதோடு, முதல் நாள் ஆட்ட நிறைவில் 88 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 302 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது 

ஐசிசியின் விருதினை வென்ற வெல்லாலகே, ஹர்சிதா!

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் கமிந்து மெண்டிஸ் தன்னுடைய 04ஆவது சதத்தோடு 11 பௌண்டரிகள் அடங்கலாக 114 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம் குசல் மெண்டிஸ் தன்னுடைய 19ஆவது டெஸ்ட் அரைச்சதத்தோடு 50 ஓட்டங்கள் எடுத்தார். இதேநேரம் களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் ரமேஷ் மெண்டிஸ் 14 ஓட்டங்களுடன் காணப்படுகின்றார் 

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் வில்லியம் ஒரூர்க்கே 3 விக்கெட்டுக்களை கைப்பற்ற கிளன் பிலிப்ஸ் 2 விக்கெட்டுக்களையும், அஜாஸ் படேல் மற்றும் டிம் சௌத்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்தனர் 

போட்டியின் சுருக்கம் 

Result


Sri Lanka
305/10 (91.5) & 309/10 (94.2)

New Zealand
340/10 (90.5) & 211/10 (71.4)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka b William O’Rourke 27 25 5 0 108.00
Dimuth Karunaratne c Tom Blundell b William O’Rourke 2 6 0 0 33.33
Dinesh Chandimal c Michael Bracewell b Tim Southee 30 71 3 0 42.25
Angelo Mathews c Tom Blundell b William O’Rourke 36 116 3 0 31.03
Kamindu Mendis c Mitchell Santner b Ajaz Patel 114 173 11 0 65.90
Dhananjaya de Silva b Glenn Phillips 11 24 2 0 45.83
Kusal Mendis c Tim Southee b Glenn Phillips 50 68 7 0 73.53
Ramesh Mendis lbw b William O’Rourke 14 49 2 0 28.57
Prabath Jayasuriya lbw b Ajaz Patel 0 15 0 0 0.00
Lahiru Kumara not out 2 2 0 0 100.00
Asitha Fernando b William O’Rourke 0 4 0 0 0.00


Extras 19 (b 4 , lb 10 , nb 4, w 1, pen 0)
Total 305/10 (91.5 Overs, RR: 3.32)
Bowling O M R W Econ
Tim Southee 14 2 48 1 3.43
William O’Rourke 18.5 4 55 5 2.97
Ajaz Patel 20 4 60 2 3.00
Mitchell Santner 19 2 64 0 3.37
Glenn Phillips 18 0 52 2 2.89
Rachin Ravindra 2 0 12 0 6.00
Batsmen R B 4s 6s SR
Tom Latham c Sadeera Samarawickrama b Prabath Jayasuriya 70 111 6 0 63.06
Devon Conway lbw b Ramesh Mendis 17 59 1 0 28.81
Kane Williamson c Kusal Mendis b Dhananjaya de Silva 55 104 4 1 52.88
Rachin Ravindra b Dhananjaya de Silva 39 48 4 0 81.25
Daryl Mitchell run out (Kusal Mendis) 57 86 7 1 66.28
Tom Blundell c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 25 65 1 1 38.46
Glenn Phillips not out 49 48 2 5 102.08
Mitchell Santner c Kusal Mendis b Prabath Jayasuriya 2 2 0 0 100.00
Tim Southee b Prabath Jayasuriya 3 10 0 0 30.00
Ajaz Patel lbw b Ramesh Mendis 6 6 1 0 100.00
William O’Rourke b Ramesh Mendis 2 8 0 0 25.00


Extras 15 (b 8 , lb 3 , nb 2, w 2, pen 0)
Total 340/10 (90.5 Overs, RR: 3.74)
Bowling O M R W Econ
Asitha Fernando 7 1 25 0 3.57
Lahiru Kumara 12 5 28 0 2.33
Dhananjaya de Silva 7 0 31 2 4.43
Ramesh Mendis 23.5 1 101 3 4.30
Prabath Jayasuriya 40 5 136 4 3.40
Kamindu Mendis 1 0 8 0 8.00
Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Tim Southee b William O’Rourke 2 10 0 0 20.00
Dimuth Karunaratne b Ajaz Patel 83 127 6 0 65.35
Dinesh Chandimal c Tom Latham b William O’Rourke 61 150 6 0 40.67
Angelo Mathews c Mitchell Santner b Ajaz Patel 50 111 5 0 45.05
Kamindu Mendis c Mitchell Santner b William O’Rourke 13 12 3 0 108.33
Dhananjaya de Silva st Tom Blundell b Ajaz Patel 40 77 4 0 51.95
Kusal Mendis b Ajaz Patel 23 30 3 0 76.67
Ramesh Mendis lbw b Ajaz Patel 1 18 0 0 5.56
Prabath Jayasuriya c William O’Rourke b Mitchell Santner 11 24 2 0 45.83
Lahiru Kumara c Kane Williamson b Ajaz Patel 0 0 0 0 0.00
Asitha Fernando not out 0 0 0 0 0.00


Extras 25 (b 11 , lb 8 , nb 4, w 2, pen 0)
Total 309/10 (94.2 Overs, RR: 3.28)
Bowling O M R W Econ
William O’Rourke 17 2 49 3 2.88
Ajaz Patel 30 8 90 6 3.00
Mitchell Santner 14.2 2 51 1 3.59
Tim Southee 16 4 39 0 2.44
Glenn Phillips 12 1 50 0 4.17
Rachin Ravindra 5 0 11 0 2.20


Batsmen R B 4s 6s SR
Tom Latham lbw b Dhananjaya de Silva 28 68 2 0 41.18
Devon Conway b Asitha Fernando 4 7 0 0 57.14
Kane Williamson st Kusal Mendis b Prabath Jayasuriya 30 46 3 1 65.22
Rachin Ravindra lbw b Prabath Jayasuriya 92 168 9 1 54.76
Daryl Mitchell b Ramesh Mendis 8 26 1 0 30.77
Tom Blundell b Prabath Jayasuriya 30 43 4 0 69.77
Glenn Phillips c Kusal Mendis b Prabath Jayasuriya 4 14 0 0 28.57
Mitchell Santner c Pathum Nissanka b Ramesh Mendis 2 22 0 0 9.09
Tim Southee lbw b Ramesh Mendis 2 9 0 0 22.22
Ajaz Patel not out 2 22 0 0 9.09
William O’Rourke b Prabath Jayasuriya 0 6 0 0 0.00


Extras 9 (b 6 , lb 2 , nb 1, w 0, pen 0)
Total 211/10 (71.4 Overs, RR: 2.94)
Bowling O M R W Econ
Ramesh Mendis 25 3 81 3 3.24
Asitha Fernando 2 0 5 1 2.50
Prabath Jayasuriya 30.4 7 68 4 2.24
Dhananjaya de Silva 12 4 32 1 2.67
Lahiru Kumara 2 0 15 0 7.50



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<