கொரோனாவினால் இலங்கையில் கைகுலுக்க மறுக்கும் இங்கிலாந்து அணி

59
getty image

கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதன் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்கள் இலங்கையில் கைகுலுக்கல் (Handshake) செய்வதை தவிர்க்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர், இரண்டு பயிற்சிப் போட்டிகளுடன்  ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இலங்கை அணியுடன் இம்மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகும் இரண்டு போட்டிகள் டெஸ்ட் தொடரில் ஆடுகின்றனர். 

இந்நிலையில், இலங்கை வரும் இங்கிலாந்து வீரர்கள் கொரோனா வைரஸிற்காக இலங்கையில் கைகுலுக்கல் செயற்பாடுகளை தவிர்க்கவிருப்பதனை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின்  தலைவர் ஜோ ரூட் உறுதி செய்திருந்தார். 

எனினும், இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் கைகுலுக்கலிற்குப் பதிலாக கைகளை பயன்படுத்தி செய்யும் கைமுட்டல் (Fist Bump) செயற்பாட்டினை செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து  அணி வீரர்களுக்கு தொற்று நோய்கள் சில ஏற்பட்டிருந்தது அவதானிக்கப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டே, முன்னெச்சரிக்கையாக இருக்கும் வகையில் இலங்கையில் வைத்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்கள் கைகுலுக்கும் செயற்பாடுகளை தவிர்க்கின்றனர். 

”தென்னாபிரிக்காவில் எமது குழாத்திற்கு ஏற்பட்ட நோய் அனுபவத்தினை வைத்து நாம் (இலங்கையில்) தொடுகைகளினை குறைத்துக் கொள்வதில் அவதானமாக இருக்கப் போகின்றோம்.” எனக் குறிப்பிட்ட ஜோ ரூட், இலங்கை வரும் இங்கிலாந்து வீரர்கள் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் கூறியிருந்தார்.  

இதுவரையில் 3,000 வரையிலான மக்கள் உலகில் உயிரிழக்க பிரதான காரணமாக மாறியிருக்கும் கொரோனா வைரஸ், மக்களின் நாளாந்த வாழ்வுக்கு இடைஞ்சலாக மாறி வரும் நிலையில் அது தற்போது கிரிக்கெட் விளையாட்டினையும் பாதித்திருக்கின்றது. 

இங்கிலாந்தின் இலங்கை சுற்றுத்தொடர் அட்டவணை

மார்ச் 7-9 – பயிற்சிப் போட்டி – இங்கிலாந்து எதிர் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி, கட்டுநாயக்க 

மார்ச் 12-15 – பயிற்சிப் போட்டி – இங்கிலாந்து எதிர் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி, கொழும்பு பி. சரவணமுத்து மைதானம்

மார்ச் 19-23 – முதல் டெஸ்ட் போட்டி, காலி

மார்ச் 27-31 – இரண்டாவது டெஸ்ட் போட்டி, கொழும்பு

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<