அடுத்த பருவத்திற்கான மகளிர் WPL தொடரில் சாமரி

50
Chamari Attapattu retained by UP Warriorz

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியான சாமரி அத்தபத்து மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் புதிய பருவத்திற்காகவும் UP வோரியர்ஸ் அணியினால் தக்க வைக்கப்பட்டுள்ளார். 

>>பாகிஸ்தான் T20I தொடரில் புதிய தலைவரை நியமித்துள்ள ஆஸி. அணி<<

அடுத்த ஆண்டு (2025) பெப்ரவரி மாத இறுதிப் பகுதியில் மகளிர் .பி.எல் என அழைக்கப்படும் WPL தொடர் மூன்றாவது முறையாக இடம்பெறுகின்றது. 

இந்த நிலையில் தொடரில் பங்கெடுக்கும் ஐந்து அணிகளும் புதிய பருவத்திற்காக தாம் தக்க வைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டிருந்தன 

இதில் இந்த ஆண்டு UP வோரியர்ஸ் அணியை 4 போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்த இலங்கையின் அதிரடி சகலதுறை வீராங்கனையான சாமரி அத்தபத்து தொடர்ந்தும் அவ்வணியினால் தக்கவைக்கப்பட்டுள்ளார். 

சாமரி அத்தபத்து மகளிர் பிரீமியர் லீக் தவிர உலகின் ஏனைய மகளிர் T20 தொடர்களிலும் தொடர்ச்சியாக பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<