கேல் ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயர் பரிந்துரை

115

இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேள் ரத்னா விருதிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மாவின் பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.  

இந்திய அரசு ஆண்டுதோறும் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு விளையட்டு சங்கமும் சிறந்த வீரர்களின் பெயர்களை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும்.

2011 உலகக் கிண்ண நாணய சுழற்சியில் ஏற்பட்ட குழப்பம்

குறித்த வீரர் இந்த விருதுக்கு தகுதியான நபர்தானா? என்பதை கண்டறிய சிறப்பு குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழு நற்சான்றிதழ் அளித்தபின், மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

இதன்படி, 2016 ஜனவரியில் இருந்து 2019 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது வழங்கப்படவுள்ளதுடன், அந்தந்த விளையாட்டு சங்கங்கள் பெயர்களை அனுப்பி வைக்கலாம் என விளையாட்டுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் சபை ரோஹித் சர்மா பெயரை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது

ரோஹித் சர்மா கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் சிறப்பாக விளையாடினார். ஐந்து சதங்களுடன் அதிக ஓட்டங்களைக் குவித்த அவர் தொடர் நாயகன் விருதையும் பெற்றிருந்தார்.

அத்துடன், ஒருநாள் போட்டிகளில் 2019ஆம் ஆண்டு அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் 1490 ஓட்டங்களுடன் முதலிடத்தில் இருந்தார்

இதில் உலகக் கிண்ணத்தில் பெற்றுக்கொண்ட 5 சதங்கள் என மொத்தம் 7 சதங்களை விளாசினார். ஒரு ஆண்டில் ஒருநாள் தொடரில் அடிக்கப்பட்ட அதிக சதங்கள் இதுவாகும். மேலும், .சி.சியின் 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கான விருதினையும் ரோஹித் சர்மா வென்றார்.

இதனிடையே, கடந்த வருடம் மாத்திரம் மூன்றுவித போட்டிகளிலும் சேர்த்து ரோஹித் சர்மா 2,442 ஓட்டங்களைக் குவித்திருந்தார். இதன்மூலம் இவரது சராசரி 53 ஆக இருக்கின்றது. இதில் 10 சதங்களும் அடங்கும்.  

அத்துடன், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மட்டுமே ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளையாடிவந்த ரோஹித் சர்மா கடந்த ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரின் போது டெஸ்ட் போட்டியிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களம் இறக்கப்பட்டார். அதில் அவர் சதம் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக பிசிசிஐ ரோஹித் சர்மாவை ராஜீவ் காந்தி கேல் ரத்னா உயரிய விருதிற்கு பரிந்துரை செய்துள்ளது.

வெளிநாட்டு தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாட வேண்டும் – உத்தப்பா

இதேவேளை, கேல்ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மா பரிந்துரை செய்யப்பட்டமை தொடர்பில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கருத்து தெரிவிக்கையில், விருதுகளுக்கு வீரர்களை பரிந்துரை செய்யும் முன் பல்வேறு புள்ளிவிபரங்களை ஆய்வு செய்து, பகுத்துதான் வீரர்களை பரிந்துரை செய்திருக்கிறோம்

கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா துடுப்பாட்ட வீரராக பல மைல்கல்லை எட்டியுள்ளார். டி20, ஒருநாள் போட்டிகளில் நிறைய ஓட்டங்களைக் குவித்துள்ளார்.  

அவரின் தலைமைத்துவப் பண்பு, நிலைத்தன்மை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு போன்றவை கேல் ரத்னா விருதுக்கு தகுதியானவர் என்பதை உணர்த்துகிறது” எனத் தெரிவித்தார்.

இதுஇவ்வாறிருக்க, இதுவரை கேல்ரத்னா விருது இந்திய கிரிக்கெட் வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் (1997-98), மகேந்திர சிங் தோனி (2007), விராட் கோஹ்லி (2018) ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே, ஷிகர் தவான், ஷாந்த் சர்மா ஆகியோரது பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல, இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக அண்மைக்காலமாக சகலதுறைகளிலும பிரகாசித்து வருகின்ற தீப்தி சர்மாவின் பெயரும் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  

கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்மிருதி மந்தனாவுடன் சேர்ந்து ஷிகர் தவான் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், தவானுக்கு அந்த விருது கிடைக்கவில்லை.

31 வயதான இசாந்த் சர்மா நீண்ட நாட்களாக விருதுக்கு பரிந்துரைசெய்யப்படாத நிலையில் இப்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.  

97 டெஸ்ட், 80 ஒருநாள் போட்டிகள், 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷாந்த் சர்மா 297 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கபில்தேவுக்கு அடுத்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 2ஆவது வேகப் பந்துவீச்சாளராக ஷாந்த் சர்மா உள்ளார். 

34 வயதான ஷிகர் தவான் தனது டெஸ்ட் போட்டி அறிமுகத்திலேயே அதிவேகமாக டெஸ்ட் சதங்களை அடித்தவர். .சி.சி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அதிகமான ஓட்டங்களைக் குவித்ததால் தொடர்ந்து இரண்டு தடவைகள் தங்க மட்டைகளை வென்றார்

அத்துடன், இந்தியா சார்பாக ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2,000, 3000 ஓட்டங்களைக் குவித்த வீரராகவும் அவர் இடம்பெற்றார்

மேலும், 4000, 5000 ஓட்டங்களை அதிவேகமாகக் கடந்த 2ஆவது இந்திய வீரரும் ஷிகர் தவான் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<