பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பணிப்பாளருக்கு அபராதம்

Bangladesh Cricket

154

பங்களாதேஷ் கிரிக்கெட் பணிப்பாளர் கஹ்லீட் மஹ்முட் கிரிக்கெட் சபை விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக அபராதத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் குல்னா டைகர்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த கஹ்லீட் மஹ்முட், உடைமாற்றும் அறையில் புகைப்பிடித்த குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா – அவுஸ்திரேலியா மூன்றாவது டெஸ்டில் புதிய மாற்றம்!

போர்ச்சுன் பரிஷல் அணிக்கு எதிரான போட்டியின்போது, உடைமாற்றும் அறையில் வைத்து இவர் புகைப்பிடித்துள்ளார். குறித்த இந்த புகைப்படம் சமுகவலைத்தளங்களில் வைராலனதுடன், இதனை அவதானித்திருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அவருக்கு எதிராக ஒழுக்க மீறல் குற்றச்சாட்டை பதிவுசெய்தது.

கஹ்லீட் மஹ்முட் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையில் பல முக்கிய பதவிகளை வகுத்து வருகின்றார். போட்டி அபிவிருத்தி தலைவர், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் செயற்திறன் உதவி தலைவர் மற்றும் ஆண்கள் அணியின் கிரிக்கெட் பணிப்பாளர் போன்ற பதவிகளை வகுத்துவருகின்றார்.

இந்தநிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்று குழு தலைவர் செய்க் சோஹல் குறிப்பிடுகையில், “குற்றம் யார் செய்தாலும் குற்றம்தான். அதனை விட்டுவிடமுடியாது. அவர் உடைமாற்றும் அரையில் புகைப்பிடித்தது குற்றம். அதற்காக தண்டிக்கப்பட்டுள்ளார். ஒழுக்கம் ரீதியான தவறுகளை செய்தால் யாராக இருந்தாலும் பாகுபாடு பார்க்க முடியாது” என்றார்.

கஹ்லீட் மஹ்முட்டிற்கு போட்டிக்கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் மற்றும் இரண்டு தரக்குறைப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<