பரிதி வட்டம் எறிதலில் எம்மாவின் மற்றுமொரு தேசிய சாதனை

321
Emma De Silva

அமெரிக்காவில் வசித்து வருகின்ற இலங்கையின் பரிதி வட்டம் எறிதல் தேசிய வீராங்கனையான எம்மா டி சில்வா, இவ்வருடத்தில் தொடர்ச்சியாக 2ஆவது தடவையாகவும் பெண்களுக்கான பரிதிவட்டம் எறிதலில் புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.

தெற்காசிய நகர்வல ஓட்டத் தொடரில் வெண்கலம் வென்ற நிலானி மற்றும் லயனல்

பூட்டானில் இன்று (27) இடம்பெற்று முடிந்திருக்கும், தெற்காசிய நாடுகளுக்கான நகர்வல ஓட்டப் போட்டித் தொடரில்

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக திறந்த மெய்வல்லுனர் போட்டித் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று(31) நடைபெற்ற பெண்களுக்கான பரிதிவட்டம் எறிதல் போட்டியில் கலந்துகொண்ட எம்மா, 49.46 மீற்றர் தூரத்தை எறிந்து 1.44 மீற்றரினால் மீண்டும் தனது சொந்த சாதனையை முறியடித்தார்.

குறித்த போட்டியின் 2ஆவது சுற்றில் 48.24 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த எம்மா, 5ஆவது சுற்றில் 49.46 மீற்றர் தூரத்தை எறிந்து இப்புதிய மைல்கல்லை எட்டினார்.

முன்னதாக கடந்த வாரம் அரிசோனா மாநில பல்கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டித் தொடரில் கலந்துகொண்ட 20 வயதான எம்மா டி சில்வா, பெண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் 48.02 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார்.

இதற்கு முன்னர் 2006ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 10ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் பத்மா நந்தனி விஜயசுன்தர என்ற வீராங்கனையால் நிகழ்த்தப்பட்ட சாதனையையே எம்மா டி சில்வா, சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் வைத்து முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏழு கண்டங்களின் மரதன் ஓட்டத்திற்கு தயாராகும் இலங்கை வீரர் ஹசன்

அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள உலகப் புகழ்பெற்ற பொஸ்டன் மரதன் ஓட்டப்

அண்மைக்காலமாக மெய்வல்லுனர் அரங்கில் அபாரமாக விளையாடி வருகின்ற 5 அடியும் 11 அங்குலமும் உயரத்தைக் கொண்ட எம்மா டி சில்வா, கடந்த வருடம் மே மாதம் கென்சாஸ் நகரில் நடைபெற்ற திறந்த மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 47.95 மீற்றர் தூரத்தை எறிந்து தேசிய சாதனையை முதற்தடவையாக முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேலதிக படிப்பை முன்னெடுத்து வருகின்ற எம்மா, பல்வேறு சர்வதேச போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருகின்றார். எனவே எதிர்வரும் காலங்களில்; சர்வதேச போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிக கௌரவத்தை எம்மா டி சில்வா பெற்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.