டிராவிட், பொண்டிங் மற்றும் டெய்லருக்கு ஐ.சி.சி. கௌரவம்

142
Image Courtesy - Getty Images/ICC

டப்லினில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற கோலாகலமான விழா ஒன்றில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை கௌரவிக்கும் ஐ.சி.சி. கிரிக்கெட் ‘ஹோல் ஒப் பேம்’ (ICC Cricket Hall of Fame)  பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் மற்றும் ஓய்வு பெற்ற இங்கிலாந்து மகளிர் அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீராங்கனையுமான கிளேய்ர் டெய்லர் சேர்க்கப்பட்டுள்ளனர்.  

ஐ.சி.சி. தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சட்சன் கூறும்போது, ”இந்த விளையாட்டின் சிறந்தவர்களை அங்கீகரிப்பதற்காகவே ஐ.சி.சி. கிரிக்கெட் ஹோல் ஒப் பேம் வீரர்கள் அறிவிக்கப்படுகின்றனர். உண்மையில் இந்த கௌரவத்தை பெறத்தகுதி பெற்றவர்களான ராகுல் டிராவிட், ரிக்கி பொண்டிங் மற்றும் கிளேய்ர் டெய்லர் ஆகியோரை வாழ்த்துகிறேன்” என்றார்.

பல்வேறு சாதனைகளுக்கு காரணமாகியிருக்கும் பின்ச்சின் அதிரடி சதம்

ஐ.சி.சி. கிரிக்கெட் ஹோல் ஒப் பேம் தொடர்பான மேலதிக விபரங்களையும் முழுமையான தகவல்களையும் தெரிந்துகொள்ள www.icc-cricket.com இணையத்தள முகவரிக்கு சென்று பார்வையிடலாம்.

ஐ.சி.சி. கிரிக்கெட் ஹோல் ஒப் பேம் கௌரவத்தை பெறும் ஐந்தாவது இந்திய வீரர் ராகுல் டிராவிட் என்பதோடு இந்த மதிப்பை பெறும் 25 ஆவது அவுஸ்திரேலிய வீரர் ரிக்கி பொண்டிங் ஆவார். அத்துடன் இந்தப் பட்டியலில் இடம் பெறும் ஐந்தாவது மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாகவும் மூன்றாவது இங்கிலாந்து வீராங்கனையாகவும் டெய்லர் இடம்பிடித்துள்ளார்.  

முன்னாள் ஐ.சி.சி. கிரிக்கெட் ஹோல் ஒப் பேம் கௌரவத்தை பெற்றவர்கள் மற்றும் ஊடக உறுப்பினர்களினாலேயே இந்த மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.சி.சி. தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சட்சன்: எமது விளையாட்டின் சிறந்தவர்களை கௌரவிக்கும் எமது வழியாக ஐ.சி.சி. கிரிக்கெட் ஹோல் ஒப் பேம் உள்ளது. கிரிக்கெட்டுக்காக பங்களிப்புச் செய்ததற்காக உலகின் மிகச் சிறந்த வீரர்கள் அங்கீகரிக்கப்படும் கௌரவத்தை பெற்றதற்கு ராகுல் ட்ராவிட், ரிக்கி பொண்டிங் மற்றும் கிளேய்ர் டெய்லர் ஆகியோரை வாழ்த்த விரும்புகிறேன். இவர்கள் ஹோல் ஒப் பேம் பட்டியலுக்கு சிறப்பு சேர்க்கின்றனர்”    

ராகுல் டிராவிட்: ”ஐ.சி.சி. கிரிக்கெட் ஹோல் ஒப் பேம் பட்டியலில் பெயரிடப்பட்டிருப்பது மிகச்சிறந்த கௌரவமாகும். கிரிக்கெட் வாழ்வில் இருந்து வெளியேறிய நிலையில் தலைமுறைகள் கடந்த அனைத்துக் காலத்திற்குமான வீரர்களின் பட்டியலில் இடம்பெறுவது ஒரே கனவாகும், அவ்வாறானதொரு அங்கீகாரம் எந்த ஒரு வீரருக்கும் மகிழ்ச்சி தருவதாகும்”


ஐ.சி.சி. ஹோல் ஒப் பேம் 2018 – ராகுல் டிராவிட்

”ஒரு கிரிக்கெட் வீரராக பல ஆண்டுகளாக எனது வளர்ச்சிக்கு உதவிய அதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்கள், அதேபோன்று என்னோடு விளையாடிய மற்றும் எதிர்த்து ஆடிய வீரர்கள், அருகில் இருந்தவர்கள், விருப்பமானவர்களுக்கு நன்றிகளை கூறிக்கொள்கிறேன். அதே போன்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆண்டுகாலமாக எனக்கு வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு எனது சாதனைகளை அங்கீகரித்து என்னை ஹோல் ஒப் பேம் குழுவில் இணைத்ததற்கு ஐ.சி.சி இற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறென்”  

மூன்று நாட்கள் கொண்ட அபுதாபி டி-20 லீக் தொடர் ஓக்டோபரில்

ரிக்கி பொண்டிங்: ”ஐ.சி.சி. இவ்வாறு அங்கீகரித்தது மிக கௌரவமாக உணர்கிறேன். ஒரு வீரராக எனது பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் நான் விரும்புகிறேன். அணியாகவும் தனிநபராகவும் பெற்ற சாதனைகளையிட்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்”        


ஐ.சி.சி. ஹோல் ஒப் பேம் 2018 – ரிக்கி பொண்டிங்

”எனது கிரிக்கெட் வாழ்வில் ஒன்றிணைந்த அங்கமான சக அணி வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் உதவி ஊழியர் என்று பலரதும் உதவியின்றி இது சாத்தியமில்லை. குறிப்பாக எனது குடும்பத்தினரின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் வழிகாட்டலுக்காக எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். இது போன்ற கௌரவம் எனக்கு மிகப்பெரியதாகும்”   

கிளேய்ர் டெய்லர்: நான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் பார்த்து மிகவும் மரியாதை செலுத்திய தலைமுறை கடந்த உலகெங்குமுள்ள ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டின் வீரர்களுடன் ஐ.சி.சி. ஹோல் ஒப் பேம் பட்டியலில் இடம்பிடிப்பது மிகச் சிறந்த கௌரவமாகும்.

இங்கிலாந்துடன் எனது கனவை வெற்றிபெறச் செய்ய உதவிய அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். குறிப்பாக எனது ஆரம்ப நாட்களில் ஆதரவளித்த எனது பெற்றோர், மார்க் லேனின் பயிற்சி, தேசிய அணியில் ஆதரவை வழங்கிய இங்கிலாந்து கிரிக்கெட் சபை, எனது சக வீராங்கனைகள் மற்றும் உதவி ஊழியர்கள் ஆகியோர் கடந்த ஐந்து ஆண்டுகளில் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் பெற்ற வெற்றிக்கு மைதானத்திலும் அதற்கு வெளியிலும் நெளிவுத்தன்மை காட்டியதற்காக எனது நன்றியை கூறிக்கொள்கிறேன்”  


ஐ.சி.சி. ஹோல் ஒப் பேம் 2018 – கிளேய்ர் டெய்லர்

டிராவிட் மற்றும் பொண்டிங் இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 10,000 இற்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றவர்களாவர்.

டிராவிட் தனது 164 டெஸ்ட் போட்டிகளிலும் 36 சதங்களுடன் மொத்தம் 13,288 ஓட்டங்களை பெற்றிருப்பதோடு, 344 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்கும் அவர் 12 சதங்களுடன் 10,889 ஓட்டங்களைக் குவித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு ஐ.சி.சி. இன் சிறந்த கிரிக்கெட் வீரராக பட்டம் வென்ற டிராவிட் அதே ஆண்டில் ஐ.சி.சியின் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராகவும் விருது வென்றார். ஒரே ஒரு டி-20 சர்வதேச போட்டியில் விளையாடி இருக்கும் டிராவிட் ஸ்லிப் திசையில் அபாரமான பிடியெடுப்பு ஒன்றுடன் 2012 இல் தனது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்து மொத்த 210 பிடியெடுப்புகளை எடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.  

கிரிக்கெட் விளையாட்டின் ஒழுக்கம் தொடர்பான செயலி ஒன்றினை வெளியிட்டுள்ள ஐ.சி.சி

பொண்டிங்கும் தனது கிரிக்கெட் வாழ்வை 2012 ஆம் ஆண்டு முடித்துக் கொண்டதோடு 168 டெஸ்ட் போட்டிகளில் அவர் 41 சதங்களுடன் மொத்தம் 13,378 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதே போன்று 325 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கும் அவர் 30 சதங்களுடன் 13,704 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 2006 மற்றும் 2007 இல் ஐ.சி.சி. இன் சிறந்த கிரிக்கெட் வீரராக விருது வென்ற அவர், 2006 இல் ஐ.சி.சி. இன் சிறந்த டெஸ்ட் வீரராகவும் பட்டம் வென்றார். பொண்டிங் 1999, 2003 மற்றும் 2007 என்று மூன்று ஐ.சி.சி உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவரது தலைமையில் 2003 தொடக்கம் 2011 வரை ஐ.சி.சி. உலகக் கிண்ண போட்டிகளில் தொடர்ச்சியாக 26 போட்டிகளில் தோல்வியுறாமல் சாதனை படைத்திருப்பதோடு 2006 மற்றும் 2009ஆ ஆண்டுகளில் உலகக் கிண்ணத்தை வெல்ல அணியை வழி நடத்தியுள்ளார். அவர் 17 டி-20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

டெய்லர் 15 டெஸ்ட் போட்டிகளில் 1,030 ஓட்டங்களை பெற்றிருப்பதோடு, 126 ஒருநாள் போட்டிகளில் 615 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். அதேபோன்று 21 டி-20 சர்வதேச போட்டிகளிலும் ஆடியிருக்கும் அவர் 2009ஆம் ஆண்டில் ஐ.சி.சி. இன் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாகவும் விருது வென்றார். 2009 மகளிர் உலகக் கிண்ணத்தில் தொடரின் சிறந்த வீராங்கனையாக தெரிவான அவர், 2009 உலகக் கிண்ண டி-20 போட்டியில் தொடர் நாயகியாக தெரிவானார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு வகை போட்டிகளிலும் 40 இற்கும் அதிகமான ஓட்ட சராசரியுடனேயே அவர் தனது கிரிக்கெட் வாழ்வுக்கு விடை கொடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 18 பிடியெடுப்புகளை எடுத்த அவர் ஒருநாள் போட்டிகளில் 41 பிடியெடுப்புகளும் ஐந்து ஸ்டம்புகளையும் செய்துள்ளார். டி-20 சர்வதேச போட்டிகளில் அவர் 12 பிடியெடுப்புகளை பெற்றிருப்பதோடு இரண்டு ஸ்டம்புகளை செய்துள்ளார்.    

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க