மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு திரும்பும் டுவைன் பிராவோ!

104
©ICC

அயர்லாந்து அணிக்கு எதிரான T20I தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் முன்னணி சகலதுறை வீரர் டுவைன் பிராவோ இணைக்கப்பட்டுள்ளார்.

பிக்பேஷ் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை நிகழ்த்திய மார்க்கஸ் ஸ்டொய்னிஸ்

அவுஸ்திரேலியாவில் தற்சமயம் நடைபெற்றுவரும் ……….

மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரரான டுவைன் பிராவோ, தனது ஓய்விலிருந்து மீண்டும் சர்வதேச T20I போட்டிகளில் விளையாடவுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார். இவரது அறிவிப்பின்படி பிராவோ, மீண்டும் தேசிய அணிக்கு திரும்பியுள்ளார்.

பிராவோ கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20I தொடரில் இறுதியாக விளையாடியிருந்தார். இதன் பின்னர், 2018ம் ஆண்டு ஓய்வை அறிவித்த இவர், கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாத்தின் மேலதிக வீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தார்.

டுவைன் பிராவோ சர்வதேசத்தில் நடைபெற்று வரும் லீக் போட்டிகள் உள்ளடங்கலாக மொத்தமாக 450 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேநேரம், 66 T20I போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 1142 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், 52 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியானது, பிராவோவின் பந்துவீச்சை கருத்திற்கொண்டு அவரை அணியில் இணைத்துள்ளது. 

பிராவோவின் அழைப்பு குறித்து மேற்கிந்திய தீவுகளின் தேர்வுக்குழு தலைவர் ரொஜர் ஹார்பர் குறிப்பிடுகையில்,  “T20I போட்டிகளில் எமது கடைசி பந்து ஓவர்களை சரிசெய்ய வேண்டிய தேவை இருந்தது. தற்போது பிராவோ இணைக்கப்பட்டதால், எமது இறுதி பந்து ஓவர்கள் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

குணதிலக்கவின் விக்கெட்டை கைப்பற்றி டி20 அரங்கில் சாதனை படைத்த ஜஸ்பிரிட் பும்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர …………

அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் இருந்து ஜேசன் ஹோல்டருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதுடன், பெபியன் எலன், கீமோ போல் ஆகியோர் உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கீமோ போல் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது, உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார்.

அதேநேரம், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வரும் ரோவ்மன் பவெல் மீண்டும், மேற்கிந்திய தீவுகள் T20I குழாத்துக்குள் அழைக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக தொடர்ந்தும் கீரன் பொல்லார்ட் செயற்படவுள்ளதுடன், இறுதியாக இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய ஏனைய வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் குழாம்

கீரன் பொல்லாரட் (அணித் தலைவர்), டுவைன் பிராவோ, செல்டன் கொட்ரல், ஷிம்ரன் ஹெட்மையர், பிரெண்டன் கிங், எவின் லிவிஸ்,  கெஹ்ரி பீரி, நிக்கோலஸ் பூரன், ரோவ்மன் பவெல், ஷெபென் ரதபோர்ட், லெண்ட்ல் சிம்மொன்ஸ், ஹெய்டன் வோல்ஸ் ஜே.ஆர்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<