இளையோர் லீக்கின் குழாம்கள் வெளியீடு

173

இம்மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான இளையோர் லீக் தொடரில் பங்கெடுக்கும் வீரர்கள் குழாமானது அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> இளையோர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

மொத்தம் 5 அணிகள் பங்குபற்றும் இந்த தொடரில் கொழும்பு தெற்கு, கொழும்பு வடக்கு, காலி, கண்டி மற்றும் தம்புள்ளை ஆகிய அணிகள் பங்கெடுப்பதோடு இதில் பங்கெடுக்கும் அணிகள் ஒவ்வொன்றுக்கும் தலா 13 வீரர்கள் வீதம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை தொடரின் போட்டிகள் கண்டி அஸ்கிரிய, மற்றும் பல்லேகல மைதானங்களில் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொடரில் தமிழ் பேசும் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில் கொட்டஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரியினைச் சேர்ந்த “குட்டி சங்கா” என அழைக்கப்படும் துடுப்பாட்டவீரரான சாருஜன் சண்முகநாதன் கொழும்பு தெற்கு அணிக்காக பெயரிப்பட்டிருக்கின்றார்.

சாருஜன் ஒரு பக்கமிருக்க கண்டி அணியில் கிங்ஸ்வூட் பாடசாலையைச் சேர்ந்த அப்துல் ஹகாம் உம் தம்புள்ளை அணியில் புத்தளத்தினைச் சேர்ந்த சிவன் ராஜூம் தமிழ் பேசும் வீரர்களாக இடம்பெற்றிருக்கின்றனர். இதேவேளை பதுளையைச் சேர்ந்த S. கபிலேஸ்வரம் காலி அணியின் வீரராக இடம்பெற்றிருக்கின்றார்.

>> அழுவதற்கு நேரமில்லை; நாம் மீண்டெழுவோம்

இளையோர் லீக் தொடரில் மொத்தமாக 11 போட்டிகள் நடைபெறவுள்ளதோடு, தொடரின் இறுதிப் போட்டியானது ஜூலை மாதம் 05ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகின்றது.

வீரர்கள் குழாம் விபரம் – Make this sentence as Hyperlink and Insert Squad PDF File in Here

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<