கைத்தொலைபேசியில் கதைக்க மரத்தின் உச்சிக்கு சென்ற ஐ.சி.சி நடுவர்

105

இந்தியாவைச் சேர்ந்த ஐ.சி.சியின் சர்வதேச கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள குக்கிராமம் ஒன்றுக்கு சென்றதால் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இன்றி பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றார்.

இதில் குறிப்பாக கைத்தொலைபேசி பேசுவதற்கான போதியளவு இணைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் மரத்தின் உச்சிக்கு சென்று பேசுகின்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.  

இந்திய கிரிக்கெட் நடுவர்களில் ஒருவரான அனில் சவுத்ரி. .சி.சியின் எலைட் பிரிவில் நடுவராக உள்ளார். சவுத்ரி இதுவரை 20 ஒருநாள் மற்றும் 27 டி20 போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவை மீறிய இந்திய வீரர் ரிஷி தவானுக்கு அபராதம்

பிரப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே காரில்…..

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெறவிருந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர் இரத்து செய்யப்பட்டது. இந்தத் தொடரில் அனில் சவுத்ரி .சி.சியின் நடுவராக செயற்படவிருந்தார்

எனினும், குறித்த தொடர் இரத்து செய்யப்பட்டதை அடுத்து உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஷல்மி மாவட்டத்தின் டங்ரோல் எனப்படுகின்ற அவரது சொந்த கிராமத்திற்கு இரண்டு மகன்களுடன் சென்றுள்ளார்

அங்கு சென்ற பிறகு கொரோனா வைரஸிற்கான 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனில் சவுத்ரிக்கு குடும்பத்தாருடன் கிராமத்திலேயே தங்கியிருக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது

அவர் இருப்பது மிகவும் பின்தங்கிய கிராமம் என்பதால் கைத்தொலைபேசி இணைப்புகள் (நெட்வொர்க்) சரியாக கிடைக்கவில்லையாம். இதனால் நெட்வொர்க் கிடைப்பதற்காக மரத்தில் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று இந்தியாவில் டைம்ஸ் எகொனமிக்ஸ் நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் மார்ச் 16ஆம் திகதியில் இருந்து என்னுடைய இரண்டு மகன்களுடன் இங்கு இருக்கிறேன். இந்த கிராமத்தில் சில நாட்கள் இருப்பதற்கு திட்டமிட்டிருந்தேன்

ஆனால் 21 நாள் ஊடரங்கு உத்தரவால் தற்போது அதை பின்பற்றி இங்கேயே இருக்கிறேன். என்னுடைய அம்மா மற்றும் மனைவி டெல்லியில் இருக்கிறார்கள்.

இங்கு எனக்கு மிகப்பெரிய பிரச்சினையே நெட்வொர்க்குதான். என்னால் யாருடன் பேசவும் முடியவில்லை. இணைய தொடர்பும் இல்லை. நெட்வொர்க் கிடைக்க வேண்டுமென்றால் கிராமத்தில் இருந்து சற்று வெளியேறி மரத்தின் உச்சிக்கு செல்ல வேண்டியுள்ளது. அப்படி இருந்தாலும் எப்பொழுதும் நெட்வொர்க் கிடைப்பதில்லை என்றார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<