“விராட் கோஹ்லியை சீண்ட வேண்டாம்” – டேவிட் வோர்னர்

179

இந்திய அணியுடன் விளையாடும் போது, அந்த அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், அணித் தலைவருமான விராட் கோஹ்லியை ஆஸி. வீரர்கள் கேலி செய்யவும், சீண்டவும் கூடாது என டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளார்.

கௌண்டி அணியிலிருந்து நீக்கப்பட்ட மொஹமட் அப்பாஸ்!

கொவிட்-19 வைரஸிலிருந்து சர்வதேச கிரிக்கெட் மீண்டுவர ஆரம்பித்துள்ளது. அதன்படி, இந்திய அணி எதிர்வரும் டிசம்பர் – ஜனவரி மாதங்களில் அவுஸ்திரேலியா சென்று, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளைாடவுள்ளது. இவ்வாறான நிலையில், இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியை களத்தில் வைத்து சீண்டினால், அவர் மிகத்திறைமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என வோர்னர் குறிப்பிட்டுள்ளார்.

களத்தில் வைத்து விராட் கோஹ்லியை கேலி செய்யக்கூடாது என்பது தொடர்பில் கருத்துகளை பகிர்ந்துக்கொண்ட வோர்னர், “ரசிகர்கள் என்னை கேலிசெய்தனர். மைதானத்தில் வைத்தும் ரசிகர்களால் கேலிசெய்யப்பட்ட போதும், அவர்களால் தான் மீண்டு பலமாக வந்தேன்.

விராட் கோஹ்லியும் அதே போன்றவர் தான். நீங்கள் விராட் கோஹ்லியை எதிர்த்து சிறிதாக எது செய்தாலும், அவர் மிக பலமானவராக மாறிவிடுவார். அத்துடன், மிகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இதனை நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்த்துள்ளோம். 

ஒரு கரடியை குத்திப்பார்க்க ஆசைப்படுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. ஏனென்றால் அந்த நாளின் இறுதியில் குறித்த நபர், மிக மோஷமாக தாக்கப்படுவார். அதேபோன்றுதான் கோஹ்லியை சீண்ட கூடாது”

இதேவேளை, கடந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி வெற்றிக்கொண்டிருந்தது. 71 வருடங்களுக்கு பின்னர், முதன்முறையாக ஆஸி. மண்ணில் வைத்து குறித்த தொடரை வென்றிருந்தது. எனினும், பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இருந்த வோர்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் விளையாடியிருக்கவில்லை.

“இந்திய அணிக்கு எதிரான தொடர் உற்சாகமளிக்கக்கூடிய தொடர். கடந்த வருடம் நாம் மிகவும் மோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அதன் காரணமாகவே அவர்கள் வெற்றிபெற்றனர். இப்போது அவர்களின் துடுப்பாட்ட வரிசையும் பலமாக உள்ளது. எனினும், எமது பந்துவீச்சாளர்கள் அவர்களை கட்டுப்படுத்துவார்கள் எனநம்புகிறேன்”

அதேநேரம், இம்முறை அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணம் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளது. அப்படி, உலகக் கிண்ணத் தொடர் ஒத்திவைக்கப்பட்டால், ஐ.பி.எல். தொடரில் விளையாட எதிர்பார்ப்பதாக டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<