இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சந்திமால் பங்கேற்பது சந்தேகம்

1359

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான தினேஷ் சந்திமால் காலியில் நடைபெற்று முடிந்திருக்கும் டெஸ்ட் போட்டியில் கால்தசைகள் இணையும் இடத்தில் உபாதை ஒன்றினை எதிர்கொண்டிருக்கின்றார். இந்த உபாதை காரணமாக தினேஷ் சந்திமால் இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

காலி டெஸ்ட்டில் இலங்கை அணி படுதோல்வி

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையே காலி சர்வதேச மைதானத்தில் இன்று (9) நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரின் முதல்….

முன்னதாக, சந்திமால் இந்த உபாதையால் காலி டெஸ்ட் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முதல் நாள் ஆட்டத்தின் இரண்டாம் இடைவெளியில் மைதானத்தினை விட்டு வெளியேறியிருந்தார். அப்போதைய தருணத்தில் இலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால் செயற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், முதல் நாளின் தேநீர் இடைவேளையை அடுத்து இலங்கை வீரர்களுடன் மைதானத்திற்குள் வந்த சந்திமால் முதல் நாள் ஆட்டத்தின் மூன்றாம் இடைவெளியில் மீண்டும் மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

சந்திமாலின் உபாதை பாரதூரமான ஒரு தசைக்கிழிவு. இது குணமாக  10 தொடக்கம் 14 நாட்கள் வரையில் எடுக்கலாம். இதனால் (சந்திமால்) இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதை உறுதிப்படுத்த முடியாமல் இருக்கின்றது. அதேநேரம், எமக்கு இன்னுமொரு அபாயகரமான விடயம் என்னவென்றால் அவர் 100% உடற்தகுதியினை காட்டவில்லை எனில், (டெஸ்ட் தொடரில் முழுமையாக) விளையாட முடியாது போகலாம். நாம் சந்திமாலுக்கு பதிலாக வேறு வீரர் ஒருவரினையோ அல்லது மேலதிக வீரர் ஒருவரினையோ இப்போது பார்க்க வேண்டி இருக்கின்றது. “  என இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க சந்திமாலின் உபாதை பற்றி பேசியிருந்தார்.

வெற்றிக்களிப்புடன் ஹேரத்திற்கு பிரியாவிடை கொடுக்க முடியாமல் போகுமா?

இலங்கையின் நட்சத்திர சுழல் வீரரான ரங்கன ஹேரத் இங்கிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்…

காலில் உபாதை இருந்த போதிலும் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கையின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் துடுப்பாடிய சந்திமால் முதல் இன்னிங்ஸில் 33 ஓட்டங்களினையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு ஓட்டத்தினையும் பெற்றிருந்தார். சந்திமால் துடுப்பாடும் போது அவர் அடிக்கடி சிரமத்துக்கு ஆளாகியிருந்ததை அவதானிக்க முடியுமாக இருந்தது.

சந்திமாலின் இல்லாது போகும் நிலையில் அவரின் இடத்தினை அணியில் நிரப்ப மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான ரொஷேன் சில்வா அழைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி காலி டெஸ்ட் போட்டியில் 211 ஓட்டங்களால் அபார வெற்றி ஒன்றினை பெற்று மூன்று போட்டிகள் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருக்கும் தற்போதைய நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி 14ஆம் திகதி கண்டி பல்லேகலை சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<