தேசிய கபடி சம்பியன்ஷிப் தொடர் இன்று ஆரம்பம்

தேசிய கபடி சம்பியன்ஷிப் – 2022

325

இலங்கை கபடி சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள மாவட்ட ரீதியிலான தேசிய கபடி சம்பியன்ஷிப் தொடர் இன்று (8) முதல் 10 ஆம் திகதி வரை கொழும்பு-07 இல் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது

விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரணையுடன் நடத்தப்படும் இப்போட்டித் தொடரில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடாளவிய ரீதியில் இருந்து ஆண்கள் பிரிவில் 25 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 மாவட்ட அணிகளும் பங்குகொள்கின்றன.

இம்முறை போட்டிகளில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, அம்பாறை, திருகோணமலை, மட்டக்ளப்பு, உள்ளிட்ட மாவட்ட அணிகள் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேசிய கபடி சம்பியன்ஷிப் போட்டித் தொடரை நடத்த முடியாது போனது.

>>இலங்கை கபடி அணியின் பயிற்சியாளரானார் பாஸ்கரன்

எனினும், இம்முறை சுகாதாரப் பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இப்போட்டித் தொடரை நடத்த தீர்மானித்துள்ளோம் என இலங்கை கபடி சம்மேளம் குறிப்பிட்டுள்ளது.

இப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டிகள் எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<