டில்ஷானின் ஹட்ரிக் கோலுடன் சன்சைனை வீழ்த்திய ஓல்ட் பென்ஸ்

366

காகில்ஸ் புட் சிடி FA கிண்ணத்தின் இரண்டாம் சுற்றில் சன்சைன் (திவுலபிடிய கால்பந்து லீக்) அணியுடனான போட்டியை ஷமோத் டில்ஷானின் ஹட்ரிக் கோலுடன் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட ஓல்ட் பென்ஸ் அணி (கொழும்பு கால்பந்து லீக்) அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.

ஆட்டம் ஆரம்பித்தது முதல் அதிரடி காண்பித்த ஓல்ட் பென்ஸ் அணிக்கு ஈடு கொடுத்து, ஒரு சீரான நிலைமையில் விளையாடுவதற்கு சன்சைன் அணிக்கு சற்று நேரம் எடுத்தது.

விண்மீனுக்குத் தெரியாமலே குறிஞ்சிக்குமரனுக்கு வெற்றி

எனினும் ஓல்ட் பென்ஸ் அணியினர் பெற்ற பல சிறந்த கோல் வாய்ப்புக்களை அவர்களால் சிறந்த முறையில் நிறைவு செய்ய முடியாமல் போனது. குறிப்பாக போட்டி ஆரம்பித்ததிலிருந்து நீண்ட நேரத்திற்கு இரு அணியினராலும் மிகவும் மோசமான பந்துப் பரிமாற்றங்களே மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறான ஒரு நிலையில், ஆட்டத்தின் 28ஆவது நிமிடத்தில் ஓல்ட் பென்ஸ் அணிக்கான முதல் கோல் டில்ஷான் மூலம் பெறப்பட்டது. முன்களத்திலிருந்த டில்ஷானுக்கு குறுக்காக அனுப்பப்பட்ட பந்தை அவர் கோலுக்குள் திசை திருப்பினார்.

முதல் கோல் பெறப்பட்டு வெறும் 2 நிமிடங்களில் ஓல்ட் பென்ஸ் அணிக்கான இரண்டாவது கோலும் பெறப்பட்டது. இம்முறை பெனால்டி பெட்டிக்கு வெளியில் இருந்து பந்தை உதைந்த டில்ஷான் தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்தார்.

முதல் பாதி: ஓல்ட் பென்ஸ் விளையாட்டுக் கழகம் 02 – 00 சன்சைன் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதியில், முதல் பாதியை விட முழுமையான வேறுபட்ட ஒரு அதிரடி ஆட்டத்தைக் காண்பித்தது சன்சைன். அவ்வணியின் மத்திய மற்றும் முன்கள வீரர்கள் சிறந்த முறையில் பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டு விளையாடினர்.

எனினும் அவற்றின்மூலம் பெறப்பட்ட இலகுவான கோல் வாய்ப்புக்கள் பலவற்றை அவ்வணியின் முன்கள வீரர்கள் சிறந்த முறையில் நிறைவு செய்யத் தவறினர்.

மதுசங்கவின் இறுதி நிமிட கோலினால் சிவில் பாதுகாப்பு கழகம் வெற்றி!

67ஆவது நிமிடத்தில் சன்சைன் அணி வீரர்களின் கவனயீனத் தவறினை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட டில்ஷான் தனது ஹட்ரிக் கோலினைப் பெற்றுக்கொண்டார்.

எதிரணி மூன்று கோல்கள் முன்னிலையில் இருந்த வேளை, ஆட்டத்தின் தோல்வி உறுதி செய்யப்பட்டிருந்த நேரத்தில் சன்சைன் அணி, தமது ஆறுதலுக்காக 85ஆவது நிமிடத்தில் மொஹமட் ருஷ்தி மூலம் ஒரு கோலைப் பெற்றுக்கொண்டது.

முழு நேரம்: ஓல்ட் பென்ஸ் விளையாட்டுக் கழகம் 03 – 01 சன்சைன் விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன்- ஷமோத் டில்ஷான் (ஓல்ட் பென்ஸ் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

ஓல்ட் பென்ஸ் விளையாட்டுக் கழகம் – ஷமோத் டில்ஷான் 28’, 30’, 67’

சன்சைன் விளையாட்டுக் கழகம் – மொஹமட் ருஷ்தி 85’

இரண்டாவது சுற்றின் ஏனைய போட்டி முடிவுகள்

  • சொலானியா வி.க (தெனியாய) 3 – 0 டெக்னிக் வி.க (அம்பாந்தோட்டை)
  • க்ரஹலோக வி.க (மாத்தறை) 0 (1) – (3) 0 மொரட்டுவ பல்கலைக்கழகம்
  • குறுந்துவத்த யுனைடட் (காலி) 1(6) – (5) 1 கிரீன் பீல்ட் வி.க (களுத்துறை)
  • நகர சபை வி.க (அம்பலாங்கொடை) 0 – 5 கோல்டன் ரைஸ் வி.க (பேருவளை)
  • ஜுபிடர்ஸ் வி.க (நீர்கொழும்பு) 4 – 1 HGS ப்ளூ வி.க (ஸ்ரீ ஜயவர்தனபுற கோட்டை)
  • ஓல்ட் மெசடோனியன்ஸ் (வத்தளை) 7 – 1 தொடவத்த வி.க (தெஹிவளை)
  • குரே வி.க (சிடி) 3 – 0 கஹடோவிட JF வி.க (கம்பஹா)
  • நவகம்புற வி.க (Play Grounds) 3 – 0 பரமவுண்ட் வி.க (பியகம)
  • அல் ஹிரா வி.க (வென்னப்புவ) 3 – 0 லகி பேர்ட்ஸ் வி.க (பொலன்னறுவை)
  • அனுராதபுரம் ஐக்கிய வி.க (அனுராதபுரம்) 1 – 3 விம்பில்டன் வி.க (புத்தளம்) ஈஸ்வரன் வி.க (வவுனியா) 3 – 0 ப்ரீடம் வி.க (சிலாபம்)
  • செரண்டிப் கா.க (மாவனல்லை) 2(6) – (5) 2 ரெட் சன் வி.க (கம்பளை)
  • லியோ வி.க (குருநாகல்) 5 – 1 BM யூத் வி.க (பொல்கஹவெல)
  • மன்செஸ்டர் வி.க (கண்டி) 1 – 4 மாயா வி.க (கேகாலை)
  • கோல்ட் மூன் (மாத்தளை) 3 – 0 அல் அதான் வி.க (பதுளை)
  • யங் பேர்ட்ஸ் வி.க (நுவரெலியா) 1 – 0 யங் மேரியன்ஸ் கா.க (நாவலப்பிட்டி)
  • பிலிப் குணவர்தன A வி.க (சீதாவக) 3 – 0 மெதகம வி.க (மொனராகலை)
  • யூத் வி.க (கதிர்காமம்) 0 – 3 மாநகர சபை வி.க (இரத்தினபுரி)
  • வளவை வி.க (எம்பிலிப்பிட்டிய) 2 – 5 லிபர்டி வி.க (பண்டாரவளை)
  • சென் சேர்வியர்ஸ் வி.க (மதுமாந்தை) 3 – 0 இக்பால் வி.க (குச்சவெளி)
  • வின்மீன்கள் வி.க (பருத்தித்துறை) 0 – 3 குறிஞ்சிக்குமரன் வி.க (வலிகாமம்)
  • யங் பேர்ட்ஸ் வி.க (முல்லைத்தீவு) 3 – 0 டயமண்ட்ஸ் வி.க (வடமராட்சி)
  • வானவில் வி.க (கல்குடா) 0 – 10 ஒலிம்பிக் வி.க (அம்பாறை)
  • ரிலையன்ஸ் வி.க (மூதூர்) 3 – 0 பயனீயர் வி.க (கிண்ணியா)
  • நஷனல் வி.க (காத்தான்குடி) 3 – 0 யங் லயன்ஸ் வி.க (ஓட்டமாவடி)
  • ஜகமீட்பர் வி.க (கிளிநொச்சி) 0 – 1 சிறைச்சாலை வி.க (களனிய)
  • ஜோசப் வாஸ் (மன்னார்) 1 – 2 SLTB வி.க (NSSA)

மேலும் பல கால்பந்து செய்திகளுக்கு